இந்திய தேசத்தின் பாதுகாப்பு வாரம்..!

  • by
safety week of indian country

மார்ச் மாதம் 4ம் தேதி 1966 ஆம் ஆண்டு இந்திய தேசிய விபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஆணையத்தை துவங்கி வைத்தார்கள். கிட்டத்தட்ட 54 வருடங்களின் நிறைவடைந்த இந்த ஆணையம் இன்றுவரை பெரிதளவில் வெற்றி காண முடியவில்லை. இதற்கு காரணம் ஒரு நாளைக்கு சராசரியாக சாலை விபத்துகளில் மட்டும் 1200 க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். அதில் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 20க்கும் மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இறக்கிறார் கள். எனவே இந்திய பாதுகாப்பு ஆணையைத்தைபற்றி பலருக்கும் இன்றுவரை விழிப்புணர்வு இல்லை. இது ஒவ்வொரு பொதுமக்களுக்கும் தெரிந்தால் மட்டுமே தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக வைப்பதற்கான முயற்சிகளை செய்வார்கள்.

பாதுகாப்பு வாரத்திற்கான வரலாறு

இந்தியாவில் போதுமான அளவு பாதுகாப்பு இல்லாததால் தினமும் பல பேர் உயிரிழக்கிறார்கள். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள், கல்குவாரி, மணல்குவாரி மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை அணியாமல் வேலை செய்பவர்கள் மற்றும் சாலைகளில் தலைக்கவசம் அணியாமலும், சீட்பெல்ட் போடாமலும் செல்பவர்களும் அதிகளவில் உயிரிழக்கிறார்கள். அதிலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் நேரிடும்போது கிட்டத்தட்ட 25% பேர் மரணத்திற்கு செல்கிறார்கள். எனவே 1962 ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மாநாட்டில், பாதுகாப்பு ஆணையத்தை நிறுவ வேண்டுமென பேச்சுவார்த்தையை துவங்கினார்கள். அதன் வெற்றியினால் 1966ம் வருடம் இதற்கான ஆணையத்தை நிறுவினார்கள். எனவே எல்லா தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு காரணிகள் இருக்க வேண்டும், அதை தவிர்த்து அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறுவினார்கள். இருந்தும் போதுமான விழிப்புணர்வு இல்லாததினால் இன்றும் பலரும் விபத்துகளில் சிக்குகிறார்கள்.

மேலும் படிக்க – மோசமான கடந்த காலத்தில் இருந்து வெளிவருவது எப்படி..?

பாதுகாப்பு, ஆரோக்கியம், சுற்றுச்சூழல்

பாதுகாப்பு, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் இது மூன்றையும் பேணிக் காக்கும் வகையில் இந்த ஆணையத்தை கொண்டு வந்தார்கள். எனவே ஒரு சில பெருநகரங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் இதை கடைப்பிடித்தாலும் சிறிய நிறுவனங்கள் பாதுகாப்பிற்கான சரியான திட்டங்களை தீட்டுவதில்லை, அதை தவிர்த்து உடல் ஆரோக்கியம், மருத்துவ காப்பீடு போன்றவைகள் இன்னும் வெளிவராத பல நிறுவனங்கள் உள்ளது. சுத்தமான சுற்றுச்சூழலும் எல்லா நிறுவனங்களுக்கும் மிக அவசியம். எனவே இது மூன்றும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆணையத்தை நிறுவினார். இருந்தும் பல நிறுவனங்கள் தங்கள் பணத்தை மிச்சப் படுத்துவதற்காக இதுபோன்ற பாதுகாப்பு சாதனங்களை பேச்சுக்கு என்று ஒரு சில இடங்களில் வைக்கிறார்கள். அதைத் தவிர்த்து ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக காப்பாற்றுவதற்கான தகுந்த சாதனங்கள் இல்லாமல் செல்கிறது.

ஒத்திகைகள் நடத்தவேண்டும்

தீயணைப்பு வீரர்கள் எப்படி தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தீ ஏற்பட்டால் எப்படி அணைப்பது, ஒத்திகைகளை செய்கிறார்களோ அதேபோல் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளும் விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் என்ன செய்யவேண்டும் என்ற ஒத்திகையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து தலைக்கவசம், உடல் கவசம், காலணிகள், கையுறைகள் இது அணியாமல் வேலை செய்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இதன் அவசியம், வருவதற்கு முன் பல பேருக்கு தெரிவதில்லை. விபத்துக்கள் நடந்த பின்னரே அதைப் பற்றி யோசிப்பார்கள். எனவே மனிதனின் இயல்பை புரிந்து கொண்டு அவர்களை பாதுகாப்பாக வேலை செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.

கிருமிகளின் தொற்று

சமீபத்தில் உலகெங்கும் பரவியுள்ள கரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சக மனிதர்கள் போதுமான அளவு பாதுகாப்பாக செயல்படாது தான். எனவே இதனை ஆரம்பத்திலேயே அரசாங்கம், எல்லோரையும் கையுறை, முகமுடி மற்றும் மற்றவர்களுடன் கை குலுக்குதல், கூட்டம் நிறைந்த இடங்களை தவிர்த்தல், இது அனைத்திற்கும் மேலாக வீடு திரும்பியவுடன் கைகளை கழுவுதல் போன்ற எச்சரிக்கைகளை ஆரம்பத்தில் விட்டிருந்தால் இன்று கரேணா வைரஸின் தாக்கம் பாதி அளவு குறைந்திருக்கும். இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுவிக்க மறந்த பல நாடுகளில் கரேணா தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நம்முடைய தேசம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு கவசங்கள், பாதுகாப்பு உறைகளை நாம் தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் தேர்வு அறையில்  செய்ய வேண்டிய சில விஷயங்கள்.!

என்னேரமும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று எப்போதும் பாதுகாப்பாக இருப்பதே புத்திசாலித்தனம். ஒரு சிலர் அளவுக்கதிகமான நம்பிக்கையினால் இது போன்ற கவசங்களை அணிவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது அவர் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பமும். எனவே எல்லாவிதமான பாதுகாப்பு கவசங்களையும், உறைகள் போன்றவற்றை அணிந்து உங்கள் வாழ்க்கையை காப்பாற்றுங்கள். இந்த விழிப்புணர்வை எல்லோருக்கும் பகிர்ந்து எல்லோரையும் அறிவுறுத்துங்கள். உங்கள் அக்கறையை இந்த பதிவை பகிர்வதன் மூலமாக காண்பியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன