மருத்துவர்கள் மற்றும் காவலாளர்கள் செய்யும் தியாகம்..!

  • by
sacrifice of doctors and police officers during this corona virus threat

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்கள் தான் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் காவலர்கள். இந்த மூன்று துறையும் சரியாக செயல்படவில்லை என்றால் இந்த வைரஸ் தொற்று என்பது கட்டுக் கடங்காமல் சென்றிருக்கும். ஆனால் இன்று இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கும் மற்றும் தமிழகத்தில் இது மேலும் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பவர்கள் இந்த வைரஸ் தொற்றை சமாளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வரும் காவல்துறையினர்கள் மற்றும் நமது சமூகத்தை சுத்தப்படுத்தி வரும் துப்புரவு பணியாளர்கள்.

செவிலியர்களின் தியாகம்

கடந்த 20 நாட்களாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் செயல்பட்டாலும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் செவிலியர்கள் தான். இவர்கள் தங்கள் குடும்பத்தை மற்றும் குழந்தைகளுக்களை காணாமல் கடந்த 20 நாட்களாக மருத்துவமனையிலேயே இருந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று இவர்களின் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இச்சமயத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு செவிலியரை காண்பதற்காக அவரது 3 வயது சிறுமி அவரின் தந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் குழந்தையை நெருங்க முடியாத சூழலில் இருந்த தாய் தூரத்திலிருந்து அழுதபடி அவளை வழியனுப்பி வைத்தார். இந்தக் குழந்தையின் கதறலை சுற்றியிருந்த அனைவரின் நெஞ்சை உருகியது. இதை கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – லாக்டவுனில் பிரபலங்கள் செய்யும் உடற்பயிற்சி..!

மருத்துவர்

சூரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் தங்கள் குடியிருப்பில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவர் நோயாளிகளை மிக நெருக்கமான முறையில் சிகிச்சை அளித்து வந்ததாலும், அவர் வீடு திரும்பியவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தன் குடியிருப்பில் இருந்து வெளியேறும் படி கேட்டுக் கொண்டார்கள். இதை காணொளி மூலமாக பதிவு செய்து இணையதளத்தில் பதி விட்டார் அந்த மருத்துவர். மக்களுக்கு உதவி செய்யும் மருத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு சில மக்களினால் சமுதாயம் மனித தன்மையற்றதாக மாறுகிறது.

காவலர்கள்

காவல் துறையில் பணிபுரிபவர்கள், இரவு பகல் பாராமல் அயராமல் உழைத்து வருகிறார்கள். அவர்களின் உணவுகளைக் கூட தெருவோரங்களில் அருந்துகிறார்கள். இதைத் தவிர்த்து அவர்களால் முடிந்த உதவியையும் இல்லாதவர்களுக்கும் மற்றும் தெருவோரங்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு அளித்து உதவுகிறார்கள். இச்சமயத்தில் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு காவல் அதிகாரியின் கையை துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இதுபோன்ற மனிதாபிமானம் இல்லாத மிருகங்கள் மூலமாகவே நம்முடைய நாட்டு மக்கள் பாதித்து வருகிறார்கள்.

துப்புரவு பணியாளர்கள்

நம்முடைய சமுதாயத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளும் பொறுப்பு துப்புரவு பணியாளர்களின் கையில் இருக்கிறது. எனவே நாம் தினமும் பயன்படுத்தி வரும் குப்பை பொருட்களை எந்த ஊரு பாகுபாடும் இல்லாமல் கைகளில் அள்ளி நம்முடைய தெருக்களை சுத்தம் செய்பவர்கள் இவர்கள். ஆனால் இவர்களையும் ஒருசில மக்கள் தாக்கியுள்ளார்கள், இதைத்தவிர்த்து மக்கள் வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் தூக்கி எறிகிறார்கள். இதனால் இவர்களின் வேலை அதிகரித்து, தங்கள் குடும்பத்தை பார்க்காது சூழல் ஏற்படுகிறது. இவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் வீட்டுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அதற்கேற்ற இடத்தில் போடுங்கள்.

மேலும் படிக்க – ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொடுத்த இந்தியா!

தாக்கப்பட்ட மருத்துவர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என எண்ணி ஒரு சிலரின் வீடுகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனைக்காக சென்றுள்ளார்கள். அங்கு இருந்த மக்கள் அவர்களைக் காப்பாற்றுவதாக எண்ணி மருத்துவர்கள் தாக்கியுள்ளார்கள். இதனால் மனமுடைந்து காயமடைந்த மருத்துவர்கள் தங்கள் வேதனைகளை பதிவிட்டு வருகிறார்கள். மக்களை காப்பாற்றும் கடவுளாக இருக்கும் மருத்துவர்களை இதுபோல் கவனித்தவர்களுக்கு காவல்துறையினர் சரியான கவனிப்பு அளித்து வருகிறார்கள்.

கடவுள் எப்போதும் மனிதர்களின் உருவத்திலேயே காட்சியளிப்பார்கள். நாம் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நமக்கு கடவுளாக இருப்பவர்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள். எனவே இவர்களை மதித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மால் முழுமையாக வெளிவர முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன