நரைமுடியை சுற்றியுள்ள கட்டுக்கதைகள்..!

rumours around the white hair are explained in here

நரைமுடி என்பது இளமையிலும் வரலாம் முதுமையிலும் வரலாம் ஆனால் இது வந்த பிறகு அதைச் சுற்றி ஏராளமான புரளிகள் மற்றும் கட்டுக்கதைகள் சுற்றிய வண்ணமே இருக்கும். கருமையான முடி உள்ளவர்கள் நரைத்த முடி உள்ளவர்களை வெறுப்பு ஏற்றுவதற்காக இதுபோன்ற கதைகள் உருவாயின. ஆனால் இன்றுவரை இதை கண்டு நரை முடி உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை இங்கே காணலாம்.

ஒரு நரைமுடியைப் பரித்தால் தலையை சுற்றி ஏராளமான நரைமுடி தோன்றும் என்பது கட்டுக்கதையாகும். உண்மையில் நாம் நரைமுடியை பரித்தால் அதன் வேரிலிருந்து அதே நரை முடி மீண்டும் வளரும் இல்லையெனில் அந்த இடத்தில் முடி வளராது. இதற்கும், மற்ற இடத்தில் வளரும் நரை முடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் படிக்க – முகத்தில் ஏற்படுவதை போல் உச்சந்தலையிலும் பருக்கள் உண்டாகும்.!

முடியை வண்ணமயமாக்குவதனால் நமக்கு மிக விரைவில் தலைமுடி நரைக்கும் என்பது கட்டுக்கதையே உண்மையில் நம் கூந்தலை கலரிங் செய்வதனால் நம் முடி நிறம் மாறுமே தவிர அது நரை முடி பிரச்சனைக்கு கொண்டு செல்லாது. ஆனால் முடிந்தவரை நாம் தரமான கலரிங் பொருளை பயன்படுத்துகிறோம் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சில ரசாயனங்கள் மூலமாக உங்கள் முடி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

மன அழுத்தம் உங்களை நரைமுடிக்கு தள்ளிவிடும் என்பது கட்டுக்கதை உண்மையில் நாம் எப்போதெல்லாம் மன அழுத்தத்தில் இருக்கிறோமோ அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் தகாத பழக்கங்களினால் தான் நமது முடி நரை முடியாக மாறுகின்றது. இதைத்தவிர்த்து நம் மனச்சோர்வுடன் மட்டுமே இருந்தால் நம் முடி நரை முடி ஆகாது.

அதிக நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் வேலை செய்தால் நம் முடி நரைத்து விடும் என்பது கட்டுக் கதையாகும். உண்மையில் சூரிய ஒளியால் முடி பாதிப்படையும் ஆனால் இதன் காரணமாக நம் முடி நரைக்காது.

மேலும் படிக்க – சில்கியான கூந்தல் அழகைப் பராமரிக்கும் சிகைக்காய்

உங்கள் வாழ்க்கை முறைக்கும் நரை முடிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் மது மற்றும் புகையிலை உங்கள் நரைமுடியை உருவாக்கலாம். நரைமுடி என்பது வயதாவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோருக்கு இளம் வயதில் நரை முடி இருந்தால் உங்களுக்கும் இளம் வயதில் நரை முடி வர வாய்ப்பு உள்ளது.

நரை முடி உள்ளவர்கள் டை அடிப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல ஏனென்றால் நமது முடியின் சத்துக்கள் குறைந்து மெலிந்து அது நரை முடியாக மாறுகின்றது. இந்த சமயங்களில் நீங்கள் இதற்காக டை அடிப்பது ஆபத்தாகவே முடியும் இதனால் உங்கள் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற வதந்திகள் ஏராளமானோர் பரப்பி வருகிறார்கள். பொதுவாகவே நரைமுடி எப்போதும் மிருதுவாக இருக்கும் ஒரு சிலரும் இது கரடு முரடாக இருக்கிறது என்று கூறுவார் எனவே இது போன்றவற்ரை நம்பிவிடாமல் உங்களுக்கு நரைமுடி தோன்றும் போது இதைப் பற்றிய தெளிவை ஏற்று மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன