கரோனா வைரஸால் பரப்பப்படும் வதந்திகள்..!

  • by
rumors that are spread around corona virus

உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். உலகம் முழுக்க பல பேரின் வாழ்க்கையை அழித்து வரும் கரோனா வைரசை நாம் பரவாமல் தடுக்க வேண்டும். அதை தவிர்த்து இதன் மூலமாக பரப்பப்படும் வதந்திகளையும் நாம் தவிர்க்க வேண்டும்.

வதந்திகள்

ஒருசில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என்று பலரும் சொல்கிறார்கள். இதனால் அதை எடுத்துக்கொண்டு நீங்கள் பாதுகாப்பில்லாமல் இருந்தால் நிச்சயம் அந்த உணவு உங்களுக்கு உதவாது. நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறோமோ அந்த அளவிற்கே நம்மால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

மேலும் படிக்க – வெளியே சாப்பிடும் உணவுகளை தவிர்த்து விட்டு உணவுகளை அருந்துங்கள்..!

மது அருந்தினால் கரோனா வைரஸ் தாக்கம் இருக்காது

இதுவும் வதந்தி தான் நாம் கை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களில் சிறிதளவு ஆல்கஹால் இருக்கிறது. ஆனால் அது வேறு நாம் அருந்தப்படும் ஆல்கஹாலில் பயன் வேறு. இதை அறிந்து என்னேரமும் குடித்து உங்கள் ஆரோக்கியத்தை குறைத்து விடாமல் பாதுகாப்பாக இருந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

அதிக வெப்பம்

வைரஸ் அதிக வெப்பத்தில் உயிர் வாழாது என்று பலவிதமான வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும், அதனால் அலட்சியமாக இருக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் ஒரு சில வினாடிகள் இந்த கரோனா வைரஸ் உயிர் வாழும். எனவே அதை அறிந்து எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்.

மேலும் படிக்க – உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசும், ஆயுதமாக மாறியுள்ள சோப்பும்!

அலட்சியத்தை தவிருங்கள்

நமக்கு வைரஸ் பாதிப்புகள் ஏற்படாது என்று அலட்சியமாக இல்லாமல் கையுறை மற்றும் முகமூடிகளை அணிந்து எப்போதும் பாதுகாப்பாக இருங்கள். அதை தவிர்த்து எங்கு சென்று வீடு திரும்பினாலும் உங்கள் கைகளை 20 வினாடிகள் தண்ணீரில் கழுவுங்கள்.

எப்போதும் பாதுகாப்பாகவும் புத்திசாலித்தனத்துடன் இருந்தால் மட்டுமே கரோனா பாதிப்பில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். முடிந்தவரை கூட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களை தவிருங்கள்.  வைரஸ் பாதிப்பு இல்லாத ஊர்களுக்கு சென்று உங்கள் வேலைகளை வீட்டிலிருந்து செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன