பரதநாட்டியத்தின் நுணுக்கங்களை சொல்லும் ருக்மணி விஜயகுமார்..!

  • by
rukmini vijayakumar teaches you all bharatanatyam hacks

“பொம்மலாட்டம்” படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி கடைசியாக மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளியான “காற்று வெளியிடை” படத்தில் நடித்தவர்தான் பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார். இவர் “ஆனந்த தாண்டவம்” என்ற படத்தில் ஒரு நடனக் கலைஞராகவே நடித்திருந்தார், அதில் இவர் ஆடிய அனைத்து நடனத்தையும் இவரே உருவாக்கினார். பரத நாட்டியத்திற்கு ஏற்ற உடல்வாகு மற்றும் அந்தக் கலையை தத்ரூபமாக வெளிப்படுத்தும் முகபாவனை போன்ற அனைத்தையும் கச்சிதமாக கொண்டு இருப்பவர்தான் ருக்மணி விஜயகுமார்.

பரதநாட்டியம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு நடன கலை தான் இந்த பரதநாட்டியம். தமிழ்நாட்டில் உள்ள எட்டு விதமான நடனத்தில் மிக முக்கியமான நடன கலையாக பார்ப்பது இந்த பரதநாட்டியத்தை தான். தமிழகத்தைத் தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் பரவி வரும் இக்கலையை இன்றும் ஏராளமானோர் கற்பித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள நடன கலைகளில் மிகவும் பழமை வாய்ந்த நடனமாக பார்க்கப்படுவது இந்த பரதநாட்டியம், கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே இந்த கலையை பலரும் பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – மா கா பா ஆனந்தின் பப்ஜி திட்டங்கள்..!

நடன ஆசிரியர்

ஒரு காலத்தில் நாம் வசிக்கும் பகுதிகளில் ஏதாவது ஒரு பரதநாட்டிய பள்ளி இருந்தது, ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பரதநாட்டியத்தின் மேல் பெண்களுக்கு உண்டான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே பரத நாட்டியப் பள்ளிகள் ஒவ்வொன்றாக முடங்கி இப்போது நகரத்தில் ஒரே ஒரு பரதநாட்டிய பயிற்சிப் பள்ளி மட்டுமே இருக்கிறது. இதனால் சிறுவர், சிறுமிகள் இதன் பயிற்சியை பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்கும் விதமாக பரதநாட்டிய பயிற்சியை நாம் இணையதளம் மூலமாக கற்றுக்கொள்ளலாம்.

எளிதில் கற்கலாம்

உங்களுக்கு இந்த கலையின் மேல் ஆர்வம் அதிகமாக இருந்தால் இதை மிக எளிதில் காணொளி மூலமாக கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு விதமான உடற்பயிற்சியை நமக்கு அளிக்கிறது, அப்படி உங்களுக்குத் தேவையான அனைத்து உடல்வாகை உண்டாக்கும் தன்மை கொண்டது தான் இந்த பரதநாட்டியம். எனவே வீட்டில் இருந்தபடியே மிக எளிமையான முறையில் இந்தப் பயிற்சியை காணொளி மூலமாக பெறலாம். இதை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பவர் இதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு பிரபலம் என்பதினால் இதில் எந்தொரு தடைகளும் இல்லாமல் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – நடிகர் விவேக்கின் கொரோனா பற்றிய காணொளி..!

ருக்மணி விஜயகுமாரைப் போன்று ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்கள் உங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி உங்கள் நடை, உடை, பாவனை போன்றவைகளின் சிறப்புகளை அறிந்து அதன் உண்மையான நோக்கங்கல் போன்ற அனைத்தையும் கற்க்க இந்த பரதநாட்டியம் உங்களுக்கு உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன