ஆரோக்கியமாக இருக்க அடுத்த 21 நாட்கள் என்ன செய்ய வேண்டும்..!

  • by
routine to follow in this 21 days lock down

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காக நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்திய நாடு முழுவதும் அடைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து இந்தியாவில் எல்லா மாநிலங்களும் அடைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களும் முடக்கத்தில் உள்ளது.

பயத்தைப் போக்க வேண்டும்

பயம் அதிகரித்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எனவே கொரோனா வைரசை எதிர் கொள்வதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது தன்னம்பிக்கையும் தைரியமும் தான். எனவே நோய்த்தொற்று உங்களை பரவிவிடும் என்று பயங்களை கொள்ளாமல் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். அதே போல் உங்கள் குடும்ப சூழலையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டதாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க – கொரானாவை தொடர்ந்து ஹண்டா வைரஸ் தொடங்கியது!

உடற்பயிற்சி செய்யுங்கள்

அடுத்த 21 நாட்களுக்கு நீங்கள் எந்த ஒரு எதிர்மறை சிந்தனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருங்கள். அதற்கு உங்களுக்கு தேவைப்படுவது உடற்பயிற்சி. ஏதேனும் ஒரு குறிக்கோளை மேற்கொண்டு அடுத்த 20 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்யும் திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை குறைப்பது, கைகள் மற்றும் கால்களில் தசையை அதிகரிப்பது, சிக்ஸ் பேக் வைப்பது போன்ற குறிக்கோளை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்யுங்கள்.

யோகா பயிற்சி

மனம் எப்போதும் குழப்பமாக உள்ளவர்கள், எதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் தவிப்பவர்கள் தினமும் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். நாம் தொடர்ந்து 20 நாட்கள் செய்யப்படும் செயல்கள் உங்கள் பழக்கமாக மாறி விடும். எனவே இந்த இருபது நாட்களை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை முறையை பயனுள்ளதாக மாற்றுங்கள்.

கெட்ட பழக்கங்களை விடுங்கள்

அடுத்த 21 நாட்கள் மதுபான கடைகள் முழுமையாக அடைத்து இருக்கும். எனவே இதை பயன்படுத்தி உங்கள் குடிப்பழக்கத்தை குறைத்து விடுங்கள். இதன் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணருங்கள். உங்களை ஆரோக்கியமாக உணர செய்யும் இந்த 20 நாட்களை பயனுள்ளதாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிகள்..!

வீட்டு வேலை செய்யுங்கள்

உங்கள் வீட்டுத் தோட்டங்களை பராமரிக்கலாம் அல்லது உங்கள் வீட்டை உங்களுக்கு பிடித்த மாதிரி மாற்றி அமைக்கலாம். அடுத்த 20 நாட்களுக்கு உங்கள் வீட்டை எப்படி எல்லாம் மாற்றலாம் என்று திட்டமிடுங்கள். அதற்கேற்றபடி ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் போன்றவைகளை செய்து வீட்டை அலங்கரியுங்கள்.

எனவே இதுபோன்ற செயல்களை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை தவிர்த்து ஒரே இடத்தில் அமர்ந்து உங்கள் பொழுதை கணினி முன் அல்லது செல்போன் முன் கழித்தால் அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். எனவே இதை கருத்தில் கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன