எந்திர உலகின் மறைந்து போகும் வாழ்வியல்.!

robotic world may spoil many lives

இயந்திர வளர்ச்சியால் நாம் வாழ்க்கை எளிமையாகி உள்ளது. ஆனால் இந்த சந்தோஷம் வெகுநாட்களுக்கு இல்லை, இதே நிலை தொடர்ந்தால் நீங்கள் செய்யும் வேலையும் ஒரு நாள் பரிபோகிவிடும். எந்திர வளர்ச்சியால் கடந்த 100 ஆண்டுகளில் ஏகப்பட்ட வேலைகள் மாற்றமடைந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கு திட்டமிடுவதும் முதல் அதை முழுமையாக செய்து முடிப்பதற்கு மனிதனின் மூளையும், உடலின் சக்தியின் தேவைகளும் அதிகமாக இருந்தது. அதுவே இப்போது இருக்கும் இயந்திர வாழ்க்கையில் ஒரு எந்திரம், ஒரு பொருளை வடிவமைப்பது முதல் அதைத் தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கும் வரை அதுவே செய்கிறது. இதை வாங்குவது மட்டும் தான் மனிதனாக இருக்கிறான். இப்படி இருக்கையில் அதை தயாரிப்பதற்காக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்திருப்பார்கள், அவர்கள் அனைவரின் வேலையும் பரிபோவதற்கான காரணமாய் ஒரு எந்திரம் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்று நீங்கள் செய்யும் வேலை கூட இயந்திரத்திடம் சென்றுவிடும். இதே போல் சமீபத்தில் மற்றும் எதிர்காலத்தில் இயந்திரம், நாம் செய்யும் எந்தெந்த வேலைகளையெல்லாம் ஆக்கிரமிக்க போகிறது என்பதை பார்ப்போம்.

தானியங்கி வாகனம், டெஸ்லா நிறுவனங்கள் முதல் கூகுள் நிறுவனம் வரை எல்லோரும் தானியங்கி நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறார்கள். இதனால் சொந்த வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியானாலும் வாகனத்தை வைத்து தொழில் நடத்துபவர்களுக்கு இது வருத்தமே. பொதுவாக பெரிய நிறுவனங்களில் ஓட்டுநருக்கான வேலையை குறைந்த படிப்பு படித்தவர்களுக்கு தருவார்கள், இதனால் அவர்களின் வாழ்க்கை நினைத்ததை விட நன்றாக செல்லும். அதுவே எந்திரம் வந்து விட்டால் உலகில் ஓட்டுனர்கள் தேவை இல்லாமல் போய்விடும். இதனால் இவர்களுக்கு வேலை இல்லாமல் தங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். தானியங்கி வாகன சேவை பல நாடுகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரு சில வருடங்களில் உலகம் முழுக்க இந்த சேவை தொடங்கி விடும்.

மேலும் படிக்க – வாழ்ந்து பாருங்கள் வானம் உங்கள் வசம் வரும்

இராணுவ உதவிகள், ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் சொன்னது போல் ராணுவத்தில் பல உயிர் சேதங்கள் ஏற்படுவதினால் இயந்திரங்களை ராணுவத்தில் சேர்த்து சண்டையிட அனுப்புவார்கள், இதனால் உயிர் சேதங்கள் எதுவும் இருக்காது, அதே சமயத்தில் ராணுவத்தில் சேர விரும்புபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பவர்களையே வேலையை விட்டு வெளியேற்றும் நிலைமை ஏற்படும். ஏனென்றால், இப்போது இருக்கும் காலங்களில் தானியங்கி கப்பல், விமானம், வெடிகுண்டு என அனைத்தும் வந்துவிட்டது. இதனால் மனிதர்கள் உதவி குறைந்து கொண்டே செல்கிறது. இன்னும், எதிர்காலத்தில் கணினி மூலமாகவே உலகப் போரை நடத்தி கொள்வார்கள்.

சமையலுக்குப் பயன்படும் ரோபர்ட், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் சமையலுக்காக ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் சமையல்காரரின் வேலையும், அதோடு சமையலுக்குத் தேவையான படிப்பு, கல்லூரிகள் என அனைத்தும் செயலிழந்துள்ளது. நமக்கு என்ன உணவு தேவை காரம், உப்பு, புளிப்பு என எது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிவித்தால் போதும் இயந்திரமே உங்களுக்கு தேவையான உணவை தயாரித்து தருகிறது.

கூகுள் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் இவர்கள் மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறார்கள். இதன் மூலமாக இன்னும் சில வருடங்களில் மருத்துவர்கள், மருந்தகங்கள், அறுசுவை வல்லுனர்கள் போன்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இது அனைத்துமே இயந்திரங்களே செய்துவிடும். இதனால் நமது ஆரோக்கியம் மேம்பட்டாலும் இது மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்.

கல்வித்துறை, இப்போது இருக்கும் காலங்களில் நாம் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நாம் மற்றவர்களிடம் கேட்காமல் உடனே கூகுளிடம் கேட்கிறோம். இந்த நிலைமையால் கல்வி மற்றும் கற்பதற்கு தேவையான அனைத்தும் யூடியூப் மற்றும் பல செயலிகளில் கிடைக்கின்றன. இன்னும் சில வருடங்களில் இயந்திர ஆசிரியர்கள் கூட வர இருக்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள், மேலாசிரியர்கள், கல்லூரிகள், பள்ளிகள் என பல துறைகள் பாதிப்படையும்.

வேலைக்கார ரோபட், வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் அனைத்திற்கும் சில நாடுகளில் மனித இயந்திரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் எல்லா நாடுகளுக்கும் இது போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவார்கள். இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரித்தாலும் இந்த வேலை செய்பவர்களின் வாழ்க்கை பாதிப்படையும்.

மேலும் படிக்க – எதிர் காலத்திற்குக்காக பணத்தை சேமிப்பது எப்படி..!

துணை ரோபட், நம் வாழ்க்கை மிகவும் கஷ்டப்படும் நேரங்களில் நம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நமது நேரத்தை கழிப்போம். சில சமயங்களில் அவர்கனாளிலும் நமக்கு கஷ்டம் ஏற்படும். ஆனால் நம் ஒரு இயந்திரத்தை நண்பராகவோ அல்லது காதலியாக வைத்துக் கொண்டால் இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது. ஆம் உண்மையில் இன்னும் சில வருடங்களில் உங்களுக்கான காதலன், காதலி, நண்பன் என விதவிதமான ரோபோக்களை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே மொபைல் போன்களினால் நாம் நண்பர்களிடம் நேரத்தை செலவழிப்பதில்லை. இப்போது இது போன்ற இயந்திரங்கள் வந்தால் உறவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்படும்.

நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நாம் இயற்கையை பெரிதளவு அழித்து வருகிறோம். இதை கருத்தில் கொண்டுதான் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் உயிரியல் பூங்கா, வனவிலங்கு பூங்கா, காடுகள், மலைகள் போன்ற இடங்களை வைத்துள்ளோம். ஆனால் இதுவும் எதிர்காலத்தில் அழிந்து போக வாய்ப்புள்ளது. ஏனென்றால் எப்போது நாம் இயந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் அப்போதிலிருந்தே மனிதனின் வாழ்க்கை பாதிப்படைகிறது. இதனால் மனித இனத்தின் மக்கள் தொகை குறைந்து இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் எதிர்காலம் ஒன்று இல்லாமல் மனித இனமே அழிய வாய்ப்புள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மனிதன் மற்றும் இயந்திரங்களுக்கு சரிசமமாக வேலைகளை கொடுப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன