தர்பார் படத்தின் திரைவிமர்சனம்..!

review of super star rajinikanth film darbar

சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு துணையாக இரண்டாவது முறையாக நயன்தாரா நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம், இவர் மும்பை மாநிலத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக போலீஸ் கமிஷனராக அங்கு அனுப்பப்படுகிறார். இவர் எதையும் சட்டப்படி கொண்டு செல்பவர் அல்ல, ஒரு முரட்டுத்தனமான சட்டத்தை மீறக்கூடிய அதிகாரி.

போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை ஆதித்யா அருணாச்சலம் அழக்கிறார். பிறகு அவரின் தந்தை அரி சோப்ரா காவல் அதிகாரிகளை மற்றும் ஆதித்திய அருணாச்சலத்தை எப்படி பழிவாங்குகிறார் இதற்காக ஆதித்யா அருணாச்சலம் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.

மேலும் படிக்க – அமேசான் பிரைமில் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த 10 திரைப்படங்கள்.!

இந்தப் படத்தின் இயக்கத்தைப் பற்றிப் பார்த்தால் ஏ ஆர் முருகதாஸ் அவரின் முந்தைய படமான துப்பாக்கி, ரமணா போன்றவைகளில் கதாநாயகன் எப்படி சட்டத்தை தன் கையில் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுகிறாரோ அதேபோல் தான் இந்தப்படத்திலும் கதாநாயகன் அநியாயத்திற்கு எதிராக போராடுகிறார். இயக்கம் மற்றும் திரைக்கதை நினைத்ததை விட நன்றாகவே இருந்தது அதிலும் முதற்பாதி கடப்பதே தெரியவில்லை. ஆனால் வில்லனின் பலம் ரஜினிகாந்துற்கு இணையாக இல்லாததால் இரண்டாம் பாதி முதல் பாதி அளவிற்கு இல்லை.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு மிகவும் உச்சத்தில் இருந்தது. அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் கண் சிமிட்டாமல் பார்த்து வந்தனர். அதை தவிர்த்து இந்த வயதிலும் இவர் செய்யும் சண்டைகள் எல்லோரையும் உணர்ச்சிக்குள்ளாக்கியது. நீங்கள் ரஜினி ரஜினி ரசிகராக இருந்தால் நிச்சயம் சண்டைக்காட்சிகளின் பொழுது உங்களை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு விடுவீர்கள் அப்படிப்பட்ட சண்டைக்காட்சியை அமைத்துள்ளார் பீட்டர் ஹெயின்.

படத்தைப் பார்த்த பின்பு எல்லோரும் நிவேதிதா தாமஸன் நடிப்பை தான் அதிகளவு பேசுகிறார்கள். இவருக்கும் ரஜினிக்கும் இடையில் இருக்கும் பாச காட்சிகள் மற்றும் இவர் நடித்த சில சோகமான காட்சிகள் எல்லோரையும் புண்படுத்தி விட்டது. படத்திற்கு ஹீரோயின் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நயன்தாராவை நடிக்க வைத்தது போலிருந்தது. இதைத் தவிர்த்து படத்தில் யோகிபாபுவின் காமெடி ரசிக்கும்படி இருந்தது.

மேலும் படிக்க – நெட்ப்ளிக்ஸில் நாம் பார்க்கவேண்டிய மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள்.!

ரஜினிகாந்தை இளமையாக காட்டுவதில் மிகப்பெரிய பங்கை வகித்தது மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் கேமராமேன் சந்தோஷ் சிவன் தான். ஒவ்வொரு காட்சியும் மிகவும் அட்டகாசம் முறையில் அட்டகாசமான முறையில் வடிவமைத்துள்ளார். எல்லா காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை நம்மால் உணரமுடியும். இதைத்தவிர்த்து ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் அற்புதமாக இருந்தது. படத்தில் குறை என்று சொன்னால் அது வில்லன் கதாபாத்திரம்தான். ஹீரோ எளிமையாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற வில்லனை தேர்ந்தேடுத்தது போல் இருந்தது.

அனிருத்தின் பின்னணி இசை ஒரு சில பாடல்கள் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தது. ஆனால் அவர் பேட்டையில் கலக்கிய அளவிற்கு இந்தப் படத்தின் இசை அவ்வளவாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. நீங்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தால் இந்தப் படம் உங்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்.

90களில் ரஜினிகாந்தின் திரைப்படங்களான அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற படங்கள் நம்மை எவ்வாறாக கவர்ந்ததோ அதேபோல் இந்த படமும் உங்களை கவர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த படத்தை தியேட்டருக்குச் சென்று பார்ப்பதினால் நீங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தை பெறமுடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன