டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

  • by

டெட் செல்களை நீக்கி  சருமத்தில் உள்ள மாசு மங்குகளை சரிசெய்து அழகான பொலிவான  லுக் கிடைக்க எளிய வழியினை இங்கு கொடுத்துள்ளோம்.  இதனை நாம் முழுமையாக இதனை அறியலாம். நமது அழகைப் பராமரிக்க கொடுக்கப்பட்டுள்ள ரிமெடியைப் பயன்படுத்தவும்.

அன்றாடம் வேலைப்பளு, வெய்யிலில் அலைச்சல், பணிச்சுமை ஆகியவற்றால் பெண்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். பெண்களுக்கு வெய்யிலில் அலைச்சல் காரணமாக மாசு தாக்கம், மரு மங்கு போன்றவை பாதிக்கச் செய்யும். அது பெண்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டு செய்யும். முகத்தில் கரும்படலமானது இருக்கும். நாம் என்ன மேக் அப் செய்தாலும் மேக் அப் கலைந்தபின் அது நிச்சயம் கலையும்.  நமது முகத்தில் இருக்கும் டெட் செல்களை நாம் நிச்சயம் போக்க சில பல வீட்டு குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

கருமைப் படலம்:

கை, கால்களை பெடிக்யூர், மெனிக்யூர்  செய்வதற்கு நிகரான இந்த ரிமெடியானது அனைவருக்கும் பொருந்தும். இதனை நாம் எளிதாக செய்யலாம்.  வீட்டிலேயே இந்த பீளிச்சிங் செய்யும் பொழுது செலவு குறைவு பாதுகாப்பு பெருகும்.  முகத்தில் இருக்கும் சிறிய புள்ளிகள், டெட் செல்கள் அனைத்தும் நீக்க வேண்டும்.

இதற்கு  தேவையான பொருட்கள் தக்காளி, சோடா உப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் 3 சொட்டு எலுமிச்சைச்  சாறு ஆகியவை போதுமானது ஆகும்.  கொடுக்கப்பட்டுள்ள இந்த பொருட்களை முறையாக கலந்து கை, கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கிளின் செய்ய வேண்டும். முகத்திலும் சோடா உப்பு கலந்து கிளினெஸ் செய்யலாம்.

முகம் பொலிவு

இந்த முறைப்படி தேவைப்படுவோர்கள் தங்கள் கை காலகளை  பொலிவுறச் செய்யலாம். இது டெட் செல்கள், அழுக்குகளை நீக்கி அழகுறச் செய்யும். முகத்தில் உள்ள சிக்கல்களை நீக்கும்.

மேலும் படிக்க – வீட்டில் இயற்கை முறையில் காஜலை செய்வது எப்படி.?

சோடா உப்பு  சருமம் கூந்தல்  பராமரிப்பு: 

சருமத்திற்கு அழகு கொடுக்கும். சோடா உப்பு பருக்கள் வராமல் இருக்க  உதவுகின்றது.  இது சருமத்தில் இருக்கும் அமிலத்தன்மையை சரி செய்கின்றது. இது சருமத்தை பொலிவுறச் செய்யும் ஒன்றாகும்.

கரும்புள்ளிகளை அகற்றும் தன்மை  கொண்டது சோடா உப்பு, 
முகத்தில் மூக்கின் ஓரங்களில் கருமை படலமானது அதிக அளவில் படரும். அது சில சமயம் நாம் என்னதான் தேய்த்தாலும் பூஞ்சை தொற்றானது வெளியேறாது. ஆனால் சோடா உப்பு வைத்து தேய்துவிட்டு 10 நிமிடம் கழித்து காட்டன் வைத்து நீக்கலாம்.

முகம் கை வெய்யிலால் மாசுப் பாதிப்பால்  சருமத்தை நிறமங்கை போக்கும். வெய்யிலினால் உண்டாகும் நிறமங்கை நீக்குவதில் சோடா உப்பு முக்கியபங்கு வகிக்கின்றது. சோடா உப்பு பிளிச்சிங் ஆற்றல் கொண்டது அது சருமத்தை பொலிவுறச் செய்யும், நிறமங்கை போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

எண்ணெய் சருமம் உடையவர்கள் சருமத்திற்கு சோடா உப்பு பயன்படுத்தலாம்.  உங்கள் தோலில் அதிகமான எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றதா அதனைப் போக்க நீங்கள் செய்ய வேண்டியது வாரத்தில் 2 முறை சருமத்தில் தேய்த்து பின் கழுவினால் எண்ணெய் பசைகள் அனைத்து நீக்கப்படும்.

சோடா உப்பு சரும அலர்ஜியை சரி செய்யும்.  தோலில் ஏற்படும் அரிப்பு, சருமத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் முக்கியமானது ஆகும்.

ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது ஒலிவ் எண்ணையை அதனுடன்   சிறிது திராட்சைப்பழச்சாறை கலக்கி, இவற்றை முகத்தில் 15 நிமிடம் வைத்துவிட்டு முகத்தை கழுவலாம் .ஆலிவ் எண்ணையில் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் மற்றும்  ஆன்டிபாக்டீரியா குணங்கள் நிறைந்துள்ளது. திராட்சைப்பழத்தில் வைட்டமின் C இருப்பதினாலும், பேக்கிங் சோடா உங்கள் சருமத்தின் எண்ணெய் உறிஞ்சி , உங்கள் சருமத்தை எளிதில் ஜொலிக்க வைக்கும்.


தேங்காய் எண்ணெய்:

தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம் ஆகும். இதனை வைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டு செய்யலாம். தேங்காய் எண்ணெயை முறையாக நாம் பயன்படுத்தினால் நிச்சயம் நமது தோல்களுக்கு வலு கிடைக்கும். சருமத்தில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் சரி ஆகும்.

தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தேங்காய் எண்ணெய் சருமத்தின் பொலிவு காரணியாகும் உடலில் மாய்ச்சுரரைசரை தங்க வைக்கின்றது.

உடலில் ஏற்படும் வற்ட்சியை இது குறைக்கும். தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த மருந்து நாம் எங்கும் காண முடியாது.

சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும். வாரத்திற்கு 3 முறை தேங்காய் தண்ணீர் குடித்துவர உடலில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் சரியாகும்.

முகம் பொலிவு

முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம் இருக்கும். அதனால் அது சந்தையில் இளநீராக மக்களால் விரும்பி சாப்பிடப்படுகின்றது. முற்றியது உணவிற்குப் பயன்படுத்தலாம்.

வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் இருப்பது போன்ற  அதிகமான புரோட்டீன் தேங்காயில் உள்ளது இதனை நாம் சாப்பிட்டு வர உடலுக்கு வலுகிடைக்கும்.

இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு உகந்தது ஆகும். குழந்தைகளுக்கும் இதனைப் சாப்பிடக் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணமாகும். இளநீரில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது.

தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

மேலும் படிக்க – பழைய வெள்ளி நகைகளை புதுப்பிக்கும் வழிகள்..!

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை ஆகும்.

வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள். உடலில் புத்துணர்ச்சி என்பது கிடைக்க தேங்காய் என்பது அவசியம் ஆகும். கேரளாவில் பெண்கள் இளமைக்கும் அவர்களின் சருமத்தில் பொலிவுக்கும் தேங்காய் எண்ணெய்தான் காரணம் ஆகும்.

ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல,  தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி என்பது முக்கிய பங்கு வகிக்கிக்கின்றது. நம் சமையலில் தேங்காய் பயன்படுத்தி சமைக்கும் அனைத்தும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். தேங்காயை பயன்படுத்தி சமைக்கும் உணவானது காரம் அளவாக இருக்கும். உடலில் உள்ள புண்களை இது ஆற்றும் சக்தி கொண்டது. உடலுக்கு தேவைப்படும் குளிர்ச்சியை கொடுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன