மூக்கடைப்பு மற்றும் சைனஸ்களிலிருந்து நிரந்தர தீர்வு..!

  • by
மூக்கடைப்பு

மூக்கடைப்பு என்பது எல்லோருக்கும் மிக எளிது ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். அது சிறியதாக இருந்தாலும் மூக்கடைப்பு வந்தவுடன் நம் சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு நம்மால் சுவாசிக்க முடியாமல் திணறி வருவோம். அதேபோல் சைனஸ் பிரச்சனை அவ்வப் போது நமக்கு வலிகளை தரும். கழுத்து, கன்னங்கள், நெற்றி, மூக்கு என நமக்கு வலிகளை ஏற்படுத்தி அசௌகரியத்தை உண்டாக்கும். இது தடுப்பதற்கான வழிகளை காணலாம்.

ஏன் சைனஸ் மற்றும் மூக்கடைப்புகள் உண்டாகிறது

நாம் சுவாசிக்கும் பொழுது பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் நமது மூக்கினுள் நுழைகிறது. நாளடைவில் இது சரியாக வெளியேறி நம் உடலை சுத்தப்படுத்துகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில் இது வெளியேறாமல் மூக்கில் உள்ள துவாரங்களில் சேர்ந்துவிடுகிறது. இதுதான் உங்களுக்கு ஒவ்வாமை, தலைவலி, மூக்கடைப்பு மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

மேலும் படிக்க – பெரும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சை சாப்பிடுங்க

சைனஸ்னால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அறிகுறிகள்

ஒருவருக்கு சைனஸ் ஏற்பட்டால் அவர்களுக்கு மூக்கு, வலி, காது, வலி, கண்கள், கன்னம்,  பற்கள் அதை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வலிகள் ஏற்படும். அதேபோல் மயக்கம், தொண்டை வலி, சோர்வு, இரும்பல், காதுகேளாமை அல்லது காதுகளில் ஏதேனும் சத்தம் கேட்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதை வைத்து நாம் சைனஸின் தாக்கத்தை கணக்கிடலாம்.

நீர் சத்து

இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு நாம் போதுமான அளவு நீர் ஆதாரத்தை எடுக்க வேண்டும். இதற்கு நீர் சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். அதை தவிர்த்து தினமும் தேவையான அளவு நீரை குடிக்கலாம். வெண்ணீரில், இஞ்சி மற்றும் தேன் கலந்து குடிப்பது நல்லது. அதேபோல் கிரீன் டீ  போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சினையை குறைக்க முடியும்.

மேலும் படிக்க – இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஆவி பிடித்தல்

லாவண்டர் எண்ணெய், டீ-ட்ரீ ஆயில், தைல எண்ணெய் மற்றும் இயற்கை எண்ணெய்களை வெந்நீரில் கலந்து ஆவியாக நுகரலாம். இல்லையெனில் மூக்கடைப்புக்கு நாம் பயன்படுத்தப்படும் நசல் டிராப்ஸ்களை பயன்படுத்தலாம். ஆனால் இதை நாம் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.

வீட்டு மருத்துவம்

இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டில் எளிய முறையில் இதற்கான தீர்வை காண முடியும். அதற்கு நாம் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் சிறிதளவு அயோடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவில் கலந்து மூக்கில் விட வேண்டும். இதை தினமும் இரண்டு வேளை விட வேண்டும். இதன் மூலமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க – தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

வெளிப்புற வெந்நீர் ஒத்தடம்

இல்லையெனில் வலிகளின் மேல் எப்படி வெந்நீரை கொண்டு ஒத்தடம் கொடுப்போமோ அதைப்போல் மூக்கு, கன்னம், நெற்றி பகுதிகளில் வெந்நீரை கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலமாக இதன் தாக்கத்தை குறைக்கலாம்.

இதில் இருக்கும் வழிகளை பின்பற்றி உங்கள் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை உண்டாக்குங்கள். இல்லையனில் இது எல்லா நேரத்திலும் உங்கம்ளின் மகிழ்ச்சியை கெடுத்துக்கொண்டேன் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன