ஆரோக்கியத்திற்கு சிறந்தது பச்சை மிளகாயா அல்லது சிகப்பு மிளகாயா..!

  • by
red chilly vs green chilly which is good for health

உலகில் உணவில் காரம் அதிகமாக சேர்க்கப்படும் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது, இதைத் தவிர்த்து காரம் போன்ற மசாலா பொருட்கள் அதிகளவில் உருவாக்கி, உற்பத்தி செய்யும் நாடும் இந்தியாதான். இதில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தினமும் காரத்தை உணவில் சேர்த்துக் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரத்தை பயன்படுத்துவார்கள், அதில் ஒரு சிலர் பச்சை மிளகாயை விரும்பி சமையலில் சேர்ப்பார்கள். மற்றவர்களோ காய்ந்த மிளகாய் என்று அழைக்கப்படும் சிகப்பு மிளகாயை பயன்படுத்துவார்கள், இதில் உண்மையில் எது சிறந்தது.

மிளகாய் வித்தியாசம்

விளைந்த உடன் இயற்கையாக எடுத்து சமைக்கப்படுவதுதான் பச்சைமிளகாய் என்கிறோம். இதில் இருக்கும் ஈரத்தன்மை எப்போது முழுமையாக உரியப்படுகிறதோ அப்போது இது சிகப்பு மிளகாயாக மாறுகிறது. பச்சை மிளகாயில் இருக்கும் தன்மைகளை முழுமையாக வெயிலில் காயவைத்து பயன்படுத்துவதினால் அதை காய்ந்தமிளகாய் என்கிறோம், அதாவது சிகப்பு மிளகாய். ஆனால் இந்த இரண்டு மிளகாய்களும் நமக்கு ஒவ்வொரு விதமான ஆரோக்கிய பயன்களை கொடுத்து வருகிறது அவைகளை ஒவ்வொன்றாக காணலாம்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் செயல்கள்..!

பச்சை மிளகாய் பயன்கள்

பச்சை மிளகாயை எல்லாவித சமைகளுக்கும் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஒரு சிலர் இதை பச்சையாகவே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இத்தகைய ருசிவாய்ந்த பச்சை மிளகாயை சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனை அனைத்தும் சரியாகும். அதே போல் உங்கள் உணவுகளை மிக எளிதில் ஜீரணம் செய்யவும் உதவுகிறது.

உடல் எடை குறையும்

பச்சை மிளகாயை உட்கொள்வதன் மூலமாக உங்கள் உடல் எடை குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதில் இருக்கும் காரத்தன்மை உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை முழுமையாக கறைக்கும்.

புற்றுநோய் மற்றும் இதய நோய்

பச்சை மிளகாயில் கலேரிகளில் உள்ளடக்கும் எதுவும் இல்லை, எனவே இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அதேபோல் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் உங்கள் இதயத்தை சரியாக செயல்படுத்த உதவுகிறது. நுரையீரல், வாய் மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் பண்பு பச்சை மிளகாய்க்கு உண்டு.

சிகப்பு மிளகாய் பயன்கள்

காய்ந்த மிளகாயை காயவைத்து அதை பொடியாக்கி மிளகாய்த்தூளாகவும் பயன்படுத்துகிறார்கள். காரத்தை அதிகரிப்பதற்காகவும், இதன் சுவைக்காகவும் காய்ந்த மிளகாயை உணவுகளில் அதிகமாக சேர்க்கிறார்கள். இது உங்கள் உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பு அனைத்தையும் கரைக்கிறது. அதே போல் உங்கள் மன நிலையை சீராக்கி எப்போதும் அமைதி நிலையில் வைக்க காய்ந்த மிளகாயை உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

காய்ந்த மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இருதய ஆரோக்கியம் மற்றும் ரத்தத்தை பராமரிப்பது என உங்களுக்கு ஏராளமான நன்மைகளை இது தருகிறது.

மேலும் படிக்க – கற்றாழை, வேப்பிலை மற்றும் மஞ்சள் கொரோனாவுக்கு எதிராக போராடும்..!

இரண்டில் எது சிறந்தது

பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கிறது. இருந்தாலும் பச்சை மிளகாயை நாம் ஆரோக்கியமான வழிகளில் உட்கொள்கிறோம், அதுவே காய்ந்த மிளகாயை எண்ணெயில் பொரித்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பச்சை மிளகாயை நாம் அப்படியே பயன்படுத்தலாம், ஆனால் காய்ந்த மிளகாயை பொடியாக அரைத்து அதில் ஒரு சில ரசாயனங்களும் கலக்கும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த இரண்டு மிளகாயில் காய்ந்த மிளகாயை விட பச்சை மிளகாய் சற்று ஆரோக்கியமானவை. ஆனால் சிகப்பு மிளகாயால் நமக்கு மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை, அதை தவிர்த்து அதன் மருத்துவ குணங்களை அதிகமாக இருக்கிறது. இனிமேல் இந்த மிளகாய் அதிகமாக பயன்படுத்தி உங்கள் உணவைகளை உட்கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன