இஸ்லாமியர்கள் ஏன் வெள்ளிக்கிழமை மட்டும் சிறப்பு தொழுகை செய்கிறார்கள்?

reasons why muslims perform special prayers on fridays?

இஸ்லாமியர்கள் எப்போதும் நாளுக்கு இரண்டு முறை தொழுகை செய்வார்கள். நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் இது அனைத்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லாதவர்கள் தங்கள் நண்பர்கள் அவ்வப்போது தொழுகையில் ஈடுபடுவதை கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள். எதற்காக நினைத்தபோதெல்லாம் தொழுகையில் இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகை ஒன்றை செய்வார்கள், அது எதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலில் ஒரு சிறப்புத் தொழுகை பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இது ஜாமப் பிரார்த்தனை என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பிரார்த்தனையை ஏன் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் செய்கிறார்கள். இதற்கான தெளிவான விளக்கம் அல்லது பதிலை இதுவரை யாரும் கூறப்படவில்லை ஆனால் இதற்குப் பின்னால் சாத்தியக்கூறுகள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – கிருத்திகை வழிபாடு செய்தால் வாழ்வு வளம் பெறும்.

வெள்ளிக் கிழமை நாட்களில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு திருவிழா போல் தொழுகையில் ஈடுபடுவார்கள். மற்ற சமயங்களில் இவர்களால் மசூதிக்கு வர இயலவில்லை என்றால் அவர்கள் வீட்டிலேயே தங்கள் தொழுகையை முடித்து விடுவார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் எப்படியாவது மசூதிக்கு வந்து எல்லோருடனும் சேர்ந்து தொழுகை செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகை அன்று இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பார்கள். இதை தவிர்த்து இவர்களின் ஒற்றுமை மற்றும் சமாதான எண்ணங்களை மற்றவர்களுக்கு உருவாக்கி ஒரு அற்புதமான சமுதாயத்தை நோக்கி செல்ல தூண்டுதலாகவே இந்த வெள்ளிக்கிழமை தொழுகை இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் படிக்க – குடும்ப ஒற்றுமைக்கு உடும்பு போல் ஒட்டும் குணம் வேண்டும்!

இஸ்லாமியர்களின் சிறப்பு பண்டிகை அனைத்துமே வெள்ளிக்கிழமைகளில் தான் வரும் இதை தவிர்த்து இவர்களின் இறைவன் ஆதமை வெள்ளிக்கிழமையில் தான் உருவாக்கினார் என்று இவர்களால் நம்பப்பட்டு வருகின்றன. இதைத்தவிர இஸ்லாமியர்கள் செய்யும் அனைத்து பாவங்களும் வெள்ளிக்கிழமைகளில் மன்னிக்கப்படுகிறது. எனவே இவர்கள் வெள்ளிக்கிழமை மிகச் சிறப்புமிக்க நாளாக கருதி அன்றைய தினம் இவர்கள் நற்காரியங்கள், நற்செயல்களை இந்த நாட்களில் அதிகமாக செய்கிறார்கள். இதனால்தான் வெள்ளிக்கிழமை என்பது இவர்களுக்கு சிறப்பு மிக்க நாளாக இருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன