அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்கள் மஞ்சளை பயன்படுத்தும் காரணங்களை காணலாம்..!

  • by
reasons why ladies are using turmeric

மஞ்சள் என்பது உணவுகளுக்கு மட்டும் நாம் பயன்படுத்தக்கூடிய பொருளல்ல, இதைப் பெண்கள் அக்காலம் முதல் இக்காலம் வரை தங்கள் வாழ்க்கையை அழகாக்குவதற்காக பல விதங்களில் மஞ்சளை பயன்படுத்துகிறார்கள்.

சருமத்திற்கு மஞ்சள்

நம் வீட்டில் உள்ள முதியவர்கள் மஞ்சளை அதிக அளவில் சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். இது தான் அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் முதல் இக்காலத்தில் வாழ்பவர்கள் வரை தங்கள் சருமத்தில் மஞ்சளை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலமாக அவர்களின் சருமத்தில் முடிகள், முகப்பருக்கள் போன்றவைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் மற்றும் அதன் பயன்கள்..!

கிருமிகள் எதிர்ப்பு

ஆண்களைக் காட்டிலும் பெண்களை கிருமிகள் பலவிதத்தில் பாதிப்படைய செய்கிறது. அவர்களுக்கு ஒரு சில காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளினால் அவர்களுக்கு நோய் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காகவே பெண்கள் மஞ்சளை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதை இன்றும் பல பெண்கள் பின் தொடர்கிறார்கள்.

சுபகாரியங்களில் மஞ்சள்

கல்யாணம் போன்ற சுபகாரியங்களில் பெண்களை முதலில் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள். இதை தினமும் செய்து அவர்களை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வழி வகுப்பார்கள். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு உடல் உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த செயல்களை செய்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் வளைகாப்பு மற்றும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு செய்யப்படும் மஞ்சள் நீராட்டு விழா போன்ற அனைத்திற்கும் காரணம் மஞ்சள் நோய் தொற்றுகளை சமாளிக்கும் என்பதுதான்.

எல்லா பிரச்சினையும் தீர்க்கும்

மஞ்சளை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குடிப்பதினால் சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் அடியோடு தவிர்த்து, தொண்டை பிரச்சனை, வயிற்று பிரச்சனை அதைத் தவிர்த்து வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்.

மேலும் படிக்க – இரவில் குளிப்பதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆயுர்வேத மருத்துவம்

அக்கால நாட்டு வைத்தியத்தில் இருந்து இக்கால ஆயுர்வேத வைத்தியம் வரை மஞ்சளில் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எந்த ஒரு மருந்தை உற்பத்தி செய்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் மஞ்சளை சேர்த்துதான் உருவாக்குவார்கள். இதில் இருக்கும் எதிர்ப்பு பண்பு எல்லாவிதமான நோய்களையும் எதிர்த்து செயல்படும்.

மஞ்சளில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் இதை நம் உடலில் தேய்ப்பதன் மூலமாக நம் மேல் எந்த ஒரு நோயும் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. இதை தவிர்த்து இதை சமையலில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த மஞ்சளை அக்காலத்தில் எப்படிப் பயன்படுத்தினார்களே அதை பின்தொடர்ந்து இக்காலத்தில் பயன்படுத்தினால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன