வழுக்கை தலைக்கு காரணமும் தீர்வும்

main reasons for bald head and solutions to cure it

அதிகமான ஆண்கள் அவதிக்குள்ளாகும் மிகப்பெரிய பிரச்சனை தான் இந்த வழுக்கைத்தலை இவர்களுக்கு இந்தப் பிரச்சனை மன உளைச்சலை தூண்டுகிறது அதிலும் திருமணமாகாதவர்கள் இதனால் தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணத்திற்கு வந்து விடுகிறார்கள் ஆனால் இதற்கு முழு காரணம் என்ன இதற்கான தீர்வு என்னவென்று பார்ப்போம்

வழுக்கைத்தலை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நம் பெற்றோர்கள் தான் உங்கள் தந்தைக்கு வழுக்கைத்தலை இருந்தால் நிச்சயம் அது உங்களை பாதிக்கும் இல்லையெனில் உங்கள் தாத்தா அல்லது உங்கள் பரம்பரையில் யாராவது ஒருவருக்கு வழுக்கைத் தலை இருந்திருந்தால் உங்களுக்கு இது போன்ற தலை வருவதற் கான காரணமாகும்.

மேலும் படிக்க – இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

அடிக்கடி தலை வாபவர்களுக்கு கூட இந்த பிரச்சினை வரும் இதைத்தவிர்த்து நம் முடியை இறுக்கக் கட்டிக் கொண்டு அதற்கான சுவாசக்காற்று ஏதும் தராமல் அடைத்து வைத்தால் கூட இதுபோன்ற பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள்

வேறு ஏதாவது பிரச்சினைகளுக்காக நீங்கள் மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் இதைத் தடுப்பதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தை தவிர்க்க வேண்டும் அது சாத்தியமில்லாத போது இதை நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

மேலும் படிக்க – சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கூட முடி உதிர்வு ஏற்படும் எனவே மிகவும் அழுத்தம் உடைய வேலைகளை செய்பவர்களாக இருந்தார்கள் என்றால் இதுபோன்ற பிரச்சினையில் சிக்கிக் கொள்வீர்கள்

இது அனைத்திற்கும் தீர்வானது நாம் சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நமக்கு முடி வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது முடிந்தால் அதை சற்று கொதிக்கவைத்து அது வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் தடவுவது நல்லது.

மேலும் படிக்க – நவீன யுவதிகளின் யுனிக்கான உடைகள் ஒரு பார்வை..!

பீட்ரூட் சாறினையும் நம் தலை முடி வளர்வதற்கு பயன்படுத்தலாம் பீட்ரூட்டை நன்கு கெட்டியான நிலையில் அரைத்துக்கொண்டு அந்த சாரை நம் தலையில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது தேய்க்க வேண்டும் இப்படி தொடர்ந்து செய்தால் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து உங்கள் வழுக்கை தலையில் முடிவளர வாய்ப்புள்ளது

இவை அனைத்தும் ஒரு முயற்சியே இதைத் தவிர்த்து உங்கள் தலையை நீங்கள் ஆரோக்கியமாக பார்ப்பதற்கான நாட்களை கழித்து விட்டு அனைத்தும் உதிர்ந்த பின் செய்யும் செயலால் உங்களுக்கு நன்மை ஏற்படுவது என்பது கேள்விக்குறிதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன