கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

  • by
reason for the birth of lord krishna

ஒவ்வொரு உயிரும் பூமியில் பிறப்பதற்கான காரணங்கள் உண்டு அதைப் போல்தான் நாம் கடவுளாக பார்க்கப்படும் கிருஷ்ணனும் பூமியில் பிறந்ததற்கான ஒர் அரிய காரணமுண்டு.

கம்சன்

மதுராவை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னனான கம்சன் தன்னால் முடிந்தவரை பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் துன்புறுத்தினான். இதை தடுப்பதற்காக விஷ்ணு அவர்கள் எடுத்த எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ணன்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

தேவகி வாசுதேவன்

கம்சனின் சகோதரியான தேவகிக்கு, வாசுதேவன் உடன் திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் திடீரென ஒரு பெரும் குரல் ஒலித்து, தேவகி மற்றும் வாசுதேவனுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை அழித்துவிடும் என்று கம்சனை நோக்கி கூறியது. இதனால் கம்சன் உடனடியாக தேவகியை கொல்ல முயற்சித்தான், ஆனால் வாசுதேவன் அவரை வணங்கிக் கேட்டுக் கொண்டதனால் அவர்களை உயிருடன் விட்டு சிறையில் அடைத்தான். பிறகு அவர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தன்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டளையும் போட்டான்.

கிருஷ்ணனின் சிறப்பு

சிறையில் இருக்கும் தேவகி மற்றும் வாசுதேவன் இருவரும் தங்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படைத்தார்கள். அதை மிருக குணம் கொண்ட கம்சன் ஒவ்வொன்றாக கொலை செய்தான். இவர்களின் எட்டாவது குழந்தை பிறக்கும்பொழுது வாசுதேவன் விஷ்ணுவிடம் தங்களுடைய எட்டாவது குழந்தையை பாதுகாப்பதற்காக பிரார்த்தனை செய்தான். அன்றைய தினம் வாசுதேவனின் கனவில் விஷ்ணு அவர்கள் தோன்றி என்னுடைய பக்தனான மாடு மேய்ப்பவர் நந்தாவின் பெண்குழந்தையை, உன் ஆண் குழந்தைக்கு பதிலாக கம்சனிடம் ஒப்படைத்து விடு என்று கூறி விட்டு சென்றார்.

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

விஷ்ணுவின் செயல்

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்த உடன் சிறைச்சாலை கதவுகள் அனைத்தும் திறந்தன, வாசுதேவனின் கை விலங்குகள் அகன்றன, உடனே ஆண் குழந்தையை எடுத்து விஷ்ணு பக்தனான மாடு மேய்ப்பவர் இல்லத்திற்கு சென்றார். அப்படி செல்லும் வழியில் இடியுடன் கூடிய மழை பலமாக பெய்தது, அவர் கடப்பதற்காக நதிகள் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. ஒரு வழியாக வாசுதேவன் தன் ஆண் குழந்தையை நந்தாவிடம் ஒப்படைத்து அவரின் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைக்கு சென்றான். உடனே அக்குழந்தையை கம்சன் வாங்கிக் கொள்ள முயற்சிக்கும் பொழுது குழந்தை தேவதையாக மாறி உன் அழிவுக்குக் காரணமான எட்டாவது குழந்தை எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறது. உன்னை அழிக்கும் வயது வரும்போது அது உன்னை கொன்றுவிடும் என்று சொல்லிவிட்டு அப்பெண் குழந்தை தேவதை மறைந்தது.

பூமாதேவியின் வேண்டுகோள்

பூமியில் வாழும் எல்லா உயிரினங்களையும் அழிக்கும் அரக்க குணங்கள் கொண்டவர்களை அழிக்க வேண்டி பூமாதேவி பிரார்த்தனை செய்து வந்தால். இதற்காக தான் விஷ்ணு அவர்கள் தங்களது எட்டாவது அவதாரமாக கிருஷ்ணனாக பிறந்து கம்சன் போன்ற அரக்கர்களை அழித்தார்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

இதைப் போல் நாமும் சுயநலமாக நம் வாழ்க்கைக்காக இயற்கை அளித்த பொக்கிஷங்களை அழிப்பதன் மூலமாக விரைவில் ஏதாவது ஒரு வகையில் நமக்கு தண்டனைகள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன