சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்களும், தீர்வுகளும்.!

  • by
reason and solution for kidney stones

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எவற்றிற்கெல்லாமோ ஒரு தினம் கொண்டாடும் நாம் சிறுநீரக தினம் என்று வரும் என்பது கூட இங்கு பலருக்கு தெரிவதில்லை.

நம் உடலில் உள்ள ஒட்டுமொத்த செயல்களையும் கட்டுப்படுத்தி சீர்படுத்தும் ஒரு முக்கிய செயலை தான் சிறுநீரகம் செய்துவருகிறது. இப்போதெல்லாம் சிறுநீரக தொற்றுகளும் சிறுநீரக கற்களும் அதிக அளவில் உருவாகி வருகின்றன. எதனால் சிறுநீரக கற்கள் உருவாகிறது என்பதை விளக்கும் பதிவுதான் இது.

சிறுநீரகத்தில் படியும் கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம்

நம் உடலில் உள்ள தேவையில்லாத உப்புச் சத்துக்களை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் மிக முக்கிய வேலையாக உள்ளது. சிறுநீரகத்தில் சிறிய அளவில் பொருட்களாக கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் இந்த இரு வகையான உப்புகள் கரைந்து விடாமல் அப்படியே சிறுநீரகத்தில் படிந்து விடுகின்றன. இவைதான் காலப்போக்கில் சிறுநீர் கற்களை உருவாக்குகின்றன.  இந்த இரு உப்புகளும் சிறுசிறு கடினமான சிறுநீரக கற்களை தோற்றுவிக்கின்றன.

மேலும் படிக்க – மூலிகை விளக்கு இருந்தால் சுற்றி பாதுகாப்பு கிடைக்கும்!

யாருக்கெல்லாம் சிறுநீரக கற்கள் தோன்றுகின்றன

பெரும்பாலும் ஆண்களே இந்த பாதிப்புக்கு அதிகமாக உட்படுத்தப்படுகின்றனர். மேலும் சர்க்கரை நோயாளிகளும், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில், வலிநிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த சிறுநீரக கற்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

நாளொன்றுக்கு 3 லிட்டர் அளவு தண்ணீர் பருக வேண்டும். அதுதான் நம் சிறுநீரகத்தை சுத்திகரித்து தேவையில்லாத உப்புக்கள் படிய விடாமல் தடுக்கிறது.

சிறுநீரக கற்களின்அறிகுறிகள் எவை?

இதன் அறிகுறிகள் சற்று கடினமாக தான் இருக்கின்றன. முதுகில் வலி ஏற்படும்.  அதன்பின் வயிற்றிலோ அல்லது பக்கவாட்டிலோ குத்துவது போன்ற வலி ஏற்படும். இந்த வலியானது நிரந்தரமாக ஒரே இடத்தில் இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். கற்கள் சிறுநீரக பாதையில் நகர்ந்து கொண்டே இருப்பதால் இந்த வலியும் அதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு முறை சிறுநீரகக் கற்கள் வந்துவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மருந்துகள், உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் இந்த கற்கள் உருவாவதை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீரக கற்களை உருவாக்கும் சோடியம் உப்பு

அதிக சோடியம் உள்ள உணவு எடுத்துக்கொள்வதால் நமது உடலில் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் காணப்படும் அதிகப்படியான உப்பு ரத்தத்தால் திரும்ப உறிஞ்சிக் கொள் படுவதையே கால்சியம் சத்தானது தடுக்கிறது. இந்த கால்சியம் குறைவாக உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும்.

டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க அந்த  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இந்த சோடியம் உப்பு அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். எனவே அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

அசைவ புரதம் எடுப்பதை தவிர்த்து விடுங்கள் 

அசைவ உணவுகளில் இருக்கும் புரதம் அதிகம் அமிலம் கொண்டது. இது சிறுநீரகத்தில் அமிலத்தின் அளவை அதிகப்படுத்த செய்கிறது. இதனாலும் கற்கள் எளிதாக உருவாகின்றன. சிக்கன் மாட்டிறைச்சி ,பன்றி இறைச்சி, இவற்றை உண்பதை குறைத்துக்கொண்டால் சிறுநீரக கல் தோன்றுவதை தவிர்க்கலாம். பால், வெண்ணெய், சீஸ் போன்ற பொருட்களில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் கால்சியம் சிறுநீரகத்திற்கு நன்மை செய்யக் கூடியவையாக இருக்கின்றன.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்க சுலபமான வழிகள் நிறைய உள்ளன. எப்பொழுதுமே அதிக நீர் ஏற்றத்துடன் இருப்பது சால சிறந்தது. நீங்கள் அதிக தண்ணீர் குடிக்கும் போது உங்களுடைய சிறுநீர் நீர்த்துப் போகிறது. இதனால் சிறுநீரில் உள்ள பொருட்கள் ஏதோ ஒரு இடத்தில் குவிவது இல்லை.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச் சாற்றை தண்ணீருடன் அருந்துவது நல்ல பலனை தரும். ஏனெனில் அதில் இருக்கும்  சிட்ரிக் அமிலங்கள் சிறுநீரகத்தில் உப்பு படிய விடாமல் கரைத்து விடுகின்றன. இதனை சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும் ஏனெனில் இந்த சர்க்கரையினால் கற்கள் உருவாகும் தன்மை உள்ளது.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி செய்யும்பொழுது அதிகளவு வியர்வை வெளியேறி விட்டால் அப்பொழுது உடலில் நீர் சத்து கொஞ்சம் குறைந்து இருக்கும் நேரங்களில் அதிக அளவு நீரை பருக வேண்டும்.

மேலும் படிக்க – தித்திப்பான  தேன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள்.!

சிறுநீரக கற்கள் இயற்கையாக வெளியேறுமா ?

சிறுநீரகத்தின் வாய்ப் பகுதிக்கு சிறுநீரகக் கல் வந்துவிட்டால் சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த வலியும் எரிச்சலும் ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டு இருக்கும். சிறுநீரில் ரத்தம் வருவது மற்றொரு அறிகுறி. சிறுநீர் ஒருவித நாற்றம் இருந்தால் கற்கள் இருப்பதற்கான சாத்தியம் நிச்சயமாக உண்டு.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது இந்த கல்லானது வெளியில் வந்துவிடும். ஆனாலும் சில சமயம் ரத்த செல்கள் மிகச்சிறியதாக இருப்பதால் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். பரிசோதனையில் தான் தெரியும். சிறுநீர்க்கல் வெளியேறிய பின்னரும் மருத்துவரிடம் சென்று சில டெஸ்ட்டுகள் எடுத்துக்கொள்வது நல்லது.

சிறுநீரக கற்கள் சாதாரணமானவைதான் நம் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும் சிறுநீரகக் கற்கள் நிச்சயமாக நம்மிடம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன