யோகி ராம் தேவ் குருவின் கொரானா தடுப்பு அறிவிப்புகள்

  • by

தொற்று கொரோனா வைரஸின் பயம் நம் தேசத்தில் பரவியுள்ளது. இந்த பரவலான அச்சத்தின் மத்தியில்  நாடு மிகவும் ஸ்தம்ப்பித்துள்ளது, மாநிலங்கள் அனைத்தும் விதவிதமான புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காக்க நடவடிக்கை எடுத்து கொண்டுள்ளது. இதன் கொடூரத்தை குறைக்க உலகம் தங்கள் பல்வேறு  ஆராய்ச்சிகளை கூறிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் நாட்டின் முக்கிய யோகா குருவான ராம்தேவ் சில அடிப்படை குறிப்புகளை கொடுத்துள்ளார் அவைகளை காண்போம். 

ராம் தேவ்: 

சுவாமி ராம்தேவ் தனது பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து இந்தியா டிவியுடன் உரையாடியபோது, ​​ஒருவர் கொரோனா வைரஸைப் பெறுவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளை பட்டியலிட்டார். இது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் நாம் மேற் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: கொரனாவால் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு

தினமும் பிராணயாமம்:

. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் பிராணயாமா செய்ய வேண்டும் என்று ராம்தேவ் கூறினார். எலுமிச்சை சாறு மற்றும் அம்லாவில் இருக்கும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வதும் உதவியாக இருக்கும். கொரோனா வைரஸ் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்வதால்  கொஞ்சம் தவிர்க்கலாம், ஆனால் தூய்மையைப் பின்பற்றினால், கொரானாவின் தாக்கத்தை தள்ளி வைக்க முடியும் என்று ராம்தேவ் கூறினார். 

இது தவிர, யோகா குரு, ராம்தேவ் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இன்னும் பல வழிகளை வழங்கியுள்ளார், அதை நாம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி வருதல் பாதுக்காப்பை அதிகரிக்கும். 

ஆயுர்வேத மூலிகை கிலோய்  எனப்படும் அமிர்தவல்லி (டினோஸ்போரா கார்டிபோலியா) பயனுள்ளதாக இருக்கும் என்று ராம்தேவ் பாபா பரிந்துரைத்துள்ளார்.

 சமஸ்கிருதத்தில், கிலோய் ‘அமிர்தா’ என்று அழைக்கப்படுகின்றது, இது ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால், ‘அழியாத வேர்’ என்று பொருள்படும். கிலோயை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும், பின்னர் மஞ்சள், மிளகு தூள், துளசி இலைகளை சேர்க்க வேண்டும் . கலவையை பின்னர் தடிமனான சாறு வடிவில் உட்கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்றார். 

“கிலோயின்  என அழைக்கப்படும் அமிர்தவல்லியின் தண்டுப்பகுதி அதிக மருத்துவ பயன்பாடு கொண்டதாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.  
கிலொய்  என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உலகளாவிய மூலிகை  இது நோய் எதிர்ப்பு சக்திகளான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை இயற்கையாகவே பெற்றுள்ளது. 
செல்களை ஆரோக்கியமாக வைத்து நோய் தடுப்பாக இருக்கின்றது.  கிலொய், சிறந்த கழிவு மற்றும் நஞ்சினை நீக்கும்., கெட்ட பாக்டீரியாக்களை நீக்கும்.
அமித வல்லி இலையானது கல்லீரல் நோய்களையும், சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் கட்டுப்படுத்தும்.”கிலொய் இதய நோயாளிகளுக்கு சிகிச்சையில் சிறப்பாக செயல்படுகின்றது. 

அமிர்த வல்லி இலை சூட்டைத்தணிக்கு. காய்ச்சல் போக்கும்  இது டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் முக்கிய ஒரு சிறப்பானது  ஆகும். ஜீரண பணியை சீராக செய்கின்றது. யோகி ராம் தேவ் கூறிய இந்த மூலிகையை நாம் உணவாக பின்பற்றி வரும் பொழுது நமது ஆரோக்கியம் காக்கப்படுவது உறுதி ஆகும். 

மூலிகை சானிட்டைசர் :

பாபா ராம்தேவ்,   ஆயுர்வேத கை சுத்திகரிப்பு  எவ்வாறு வீட்டில் உருவாக்கலாம் என்பதை விளக்கினார். இதன் மூலம், கொரோனா வைரஸைத் தவிர்க்கலாம். பாபா ராம்தேவின் முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த உள்நாட்டு மற்றும் ஆயுர்வேத கை சுத்திகரிப்பு உண்மையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மூலிகை என்றும் அது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கூறினார். ஹோம் ஹேண்ட் சானிட்டரைசர் செய்முறை பொருட்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
1 லிட்டர் தண்ணீர்
100 வேப்ப இலைகள்

10-20 துளசி இலைகள்

10 கிராம் படிகாரம்

10 கிராம் கற்பூரம்

கற்றாழை

செயல்முறை:

முதலில், 1 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் வேப்ப இலைகளை போட்டு

அதனுடன் துளசி இலைகளை சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது அதில் கற்றாழை  சேர்த்து.

தண்ணீர் நன்றாக கொதிக்க விடவும். இந்த தண்ணீர் அளவானது ​​1 லிட்டரில் அரைலிட்டர் வரை சுண்டக்காய்ச்சி, ​​அதில் கற்பூரம் மற்றும் படிகாரம் சேர்க்கலாம். இது ஒரு சிறப்பான சுத்தகரிப்பு ஒன்றாகும். 

மேலும் படிக்கவும்:கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன