ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!

  • by
Rahu Kethu peyarchi palangal

ரக கிரகங்களில் இருக்கும் சர்ப கிரகங்களான ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது தான் ராகு கேது பெயர்ச்சி என்கிறார்கள். இது சுமார் ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் இருக்கும், பிறகு அதில் இருந்து மற்றொரு ராசிக்கு பயிற்சிபெறும். இதனால் ராகு கேது இருக்கும் ராசியில் ஏராளமான நன்மைகள் நடக்கும். அவர்களின் ராசிக்கு ஏற்றார்போல் உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், தொழில் வளர்ச்சி, பணவரவை என எல்லாவற்றையும் தரக்கூடியவை ராகு கேது பெயர்ச்சி.

இடம் பெயர்ச்சி

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைய போகிறது. கேது பகவான் இரண்டாம் ஸ்தலமான தன வரவும், எட்டாம் வீடு ஆயுள் ஸ்தலமாக இருக்கிறது. பொதுவாக ராகு கேது இருக்கும் இடத்திற்கு ஏற்ப அந்த ராசிக்கு நன்மைகள் நடக்கின்றது. ரிஷப வீட்டின் அதிபதி சுக்ரன் எனவே சுக்கிரபகவான் அந்த ராசிக்கு ராகு பகவான் சுக்கிரனை அள்ளிக் கொடுப்பார்.

விருச்சிகம் ராசியின் அதிபதி செவ்வாய். எனவே கேது பகவான் செவ்வாயைப் போல பலனைத் தருவார். ராகு எப்போதும் அதிக காதலையும், கேது அதிக வீரத்தையும் கொடுக்க கூடியவர். தமிழ் புத்தாண்டு நடக்கும் சமயங்களில் ராகுகேதுபெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு அதிபதி தரக்கூடும்.

மேலும் படிக்க – நோக்கு வர்மத்தினை ஆன்மீகத்தில் செலுத்தி ஆற்றல் பெறுவது எவ்வாறு?

ராகு கேதுவின் செயல்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவான்களாகிய ஏழு கிரகங்களும், வலமிருந்து இடமாகச் சுற்றி வருகிறார்கள். இதற்கு பிரதட்சிணம் என்று பெயர். அதாவது, கடிகாரம் எப்படி சுற்றுகிறது அதுபோல் சுற்ற கூடியது இது. அதேநேரம், உருவம், பருமன் ஏதுமின்றி நிழல் வடிவில் இந்த ராசி வீடுகளில் ராகு, கேது பகவான்கள் இடமிருந்து வலமாக அதாவது அப்பிரதட்சிணமாக வலம் வருகின்றன. நவநாயகர்களான சூரியபகவான் முதல் சனிபகவான் வரையில் உள்ள ஏழு கிரகங்களையும் எதிர்த்து வலம் வருகின்ற ராகு, கேது பகவான்களின் செயல்திறன் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் மற்ற ஏழு கிரகங்களின் தசைகளில் நாம் செய்யக் கூடிய குற்றங்குறைகளை எல்லாம் ராகு, கேது பகவான்கள் துப்பறிந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அவைகள் தமக்கு அதிகாரம் வரும்போது மற்ற கிரகங்களால் சலுகைப் பெற்ற அந்த ஜாதகரை வாட்டி வதைத்து விடுகிறார்கள் என்பது சாஸ்திர விதி. இது அந்த கிரகங்களைப் பழி வாங்குவது போன்றது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

எனவே ராகு-கேது நடக்கும் சமயங்களில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நம்முடைய நாள் எப்படி இருக்கிறது என்பதை நன்கு அறிந்து, அதற்கேற்ப தொழில்கள் அல்லது சுப காரியங்களை செய்வது சிறந்ததாகும். இல்லையெனில் ராகு கேது உங்கள் நேரத்திற்கு ஏற்றாற்போல் உங்களை வாட்டி வதைக்கும் செய்யும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன