கொரானா நிவாரண கொடை கோடிகள் கொடுத்த லாரன்ஸ்

  • by

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோரை கொன்று  குவித்துள்ளது. இது இந்தியாவில் தற்பொழுது கால் பதித்துள்ளது. இதனால் ஊரடங்கு இந்தியாவில் மேலோங்கியுள்ளது.   இந்த கொரானா தொற்றிலிருந்து இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதை தடுக்க மக்களுக்கு அதிகமான நெருக்கடியுடன்  கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரானா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேல் போகின்றது. 

இந்தியா போன்ற   மிகப்பெரிய ஜன நாயக நாட்டில் உள்ள  நடைமுறை சிக்கலைப் போக்க இந்தியாவில்  தேவைப்படும் சிகிச்சையானது அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை அதிகருக்கும் பொழுது இந்தியா முழுமையாக  அதனை வெல்ல முடியும். சிகிச்சைக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வசதிப்படை நிறுவனங்கள் மனிதர்களிடம் இருந்து பெறப்படுகின்றது. அதற்கு முதன் முதலில்  நன்கொடையாக பிராபாஸ் 4 கோடி மற்றும் சிரஞ்சீவி குடும்பத்தினர் 5 கோடிக்கு மேல் மற்ற தெலுங்கு நடிகர்களும் அவர்வர்களுக்கு ஏற்ப கொரானா சிகிச்சைக்காக   நிதி அளித்துள்ளனர். தமிழ் நாட்டில் இந்த நிதியுதவியை சினிமா துறையினர் வழங்க வேண்டும் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதனை முதன் முதலாக கொடுத்து சிவக் கார்த்திகேயன் மற்றும் அஜித் போன்றோர்  கொடுத்தனர். அஜித் கோடி மேல் கொடுத்தார் அதனை அடுத்து ராகவா லாரன்ஸ் 3 கோடி கொடுத்து அறிவித்தார். 

ராகவா லாரன்ஸ்:

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் சிறந்த முன்னேற்றம் அடைந்த இயக்குநர் நடிகராக உள்ளார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றார்.  பலர் ராகவா லாரன்ஸ் பலருக்கு ஆதரவு அளித்து வருகின்றார். இவர் ஜல்லிக்கட்டு சமயத்திலும் சென்னையில் அதிக அளவில் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதே போல்  கொரானா சிகிச்சையை அளித்துள்ளார். 

மேலும் படிக்க:வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

அரசுக்கு லாரன்ஸ் கோரிக்கை:

ராகவா லாரன்ஸ் தமிழக அரசுக்கு விடுத்த வேண்டு கோளின்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொண்டு பணியாளர்கள் மூலம்  சென்னையில் உணவளிக்க திட்டமிட்டு கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த நேரத்தில் அரசு அதற்கு தடை வித்தித்துள்ளது இதனை அரசு தளர்த்த வேண்டும் அரசு மட்டுமே அனைத்து செய்யும் என  நாம் காத்திருக்க முடியாது அரசுக்கு உதவிகரமாக இருக்கவே இதனை கேட்டுக் கொள்வதாக அறிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க:ஒரே குடும்பத்தில் கொரானாவிலிருந்து குணமடைந்தனர்

தமிழ் புத்தாண்டில் புதிய அறிவிப்பு:

தமிழ் புத்தாண்டில்  இன்னும் நிறைய கொடுக்க உள்ளதாகவும் அது குறித்த அறிவிப்பை  கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இது சிறப்பான நடவடிக்கையாகும் இதனை  முழுமையாக வரவேற்க வேண்டும் என மக்களும் ஆதரித்துள்ளனர். ஆனால் இதில் உள்ள நடைமுறை சிக்கலை  அரசு ஆலோசித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதே சமயத்தில் உதவி செய்வதை அரசு தடுக்காது. ஆனால் இதன் மூலம் ராகவா பொருட்களை  அரசு அனுமதியுடன் அரசு துணை கொண்டு வீதியில் வாழ்வோர்க்கு தேவையானவற்றை வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பல திரையுலகினர் அமைதி காக்கும் இந்த நேரத்தில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என துடிக்கும் இது போன்ற  மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

திரையுலகனர்  இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு  என தனித்தனியாக நிவாரண நிதி அளிக்கின்றனர்.  

மேலும் படிக்க: கொரானா போராட்டத்தில் நாட்டின் பெண்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன