நேர்காணலுக்கு செல்லும் போது எந்தவிதமான ஒப்பனைகளை செய்ய வேண்டும்.!

Put This makeup To Get Job In Interview

மேக்கப் என்பது இப்போது இருக்கும் அனைவரும் செய்ய கூடிய ஒன்றாகும். அது உங்களின் நேர்மறை சக்திகளை அதிகரிக்கிறது. எப்போதெல்லாம் ஒரு ஆண் அல்லது பெண் அதிகளவில் ஒப்பனை செய்து கொண்டு வெளியே செல்கிறார்களோ அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். எதையும் சரியாகவும், முழு உத்தியோகத்திலும் செய்யக் கூடிய தைரியம் அவர்களுக்கு கிடைக்கிறது. இப்படி ஒப்பனைகள் செய்வதன் மூலம் இவர்கள் தன்னம்பிக்கை பெறுகிறார்கள். அப்படி இருக்கையில் இவர்கள் ஏதாவது நேர்காணலுக்குச் சென்றாள் எந்த விதமான ஒப்பனைகளை செய்து செல்ல வேண்டும் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.

ஒருவரை கவர வேண்டுமென்றால் முதலில் உங்கள் தோற்றம் அழகாக இருக்கவேண்டும் அதை பொறுத்துதான் உங்கள் செயல் மற்றும் உங்கள் திறமையை கணிக்கிறார்கள் உங்கள் தோற்றத்தை முதலில் அற்புதமான ஒன்றாக காண்பித்து விட்டீர்கள் என்றால் பின்னர் அவர்கள் மனதில் நீங்கள் ஒரு சிறந்த தொழிலாளி என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிவிடும். இதனால் நீங்கள் நேர்காணலில் சொதப்பினால் கூட உங்களை தேர்வு செய்து விடுவார்கள். இதற்கு நீங்கள் சரியான மேகங்களை தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிலரும் முகம் முழுக்க எல்லாவற்றையும் அப்பிக் கொண்டு செல்வார்கள் இதை தவிர்த்து எது போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க – முகப்பருக்களை வருமுன் தடுப்பது எப்படி?

உங்கள் முகத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளை மறைப்பதற்காக நாம் பிரைமரை முதலில் பயன்படுத்த வேண்டும். நேர்காணல் பொழுது ஒப்பனைகள் கலையாமல் இருப்பதற்காக முதலில் இதை உங்கள் சருமத்தில் சமநிலையில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பவுண்டேஷன் அல்லது பிபி க்ரீம்களைப் உங்கள் முகத்தில் போட்டுக் கொள்வது நல்லது. இது உங்கள் முகத்தின் சீரான நிறத்தை தரக்கூடியது. இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷனய் தேர்வு செய்து கொள்வது மிக அவசியம். ஒரு சிலருக்கு பவுண்டேஷனை சரியாக பயன்படுத்த தெரியாது இவர்கள் பிபி கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.

உங்கள் கண்களுக்கு கீழே கருவளையமும் அல்லது முகத்தில் ஏதாவது காயங்கள் இருந்தாலும் நீங்கள் கன்சீலரை பயன்படுத்தலாம். இது உங்கள் தோற்றத்தை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கும்.

மேலும் படிக்க – ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

உங்கள் கண்களை அழகு படுத்துவதற்காக ஐப்ரோ பென்சிலை வைத்து கண்களின் மேல் அழகான கருமையான வளையங்களை வரையலாம். நீங்கள் பின்பு ஃபிளாஷ் பயன்படுத்தி உங்கள் கண்களை அழகுபடுத்தலாம். அதன்பிறகு ஐ ஷேடோ போன்றவற்றை உங்கள் கண் முடிகளுக்கு பயன்படுத்துங்கள் பிறகு மஸ்காராவை பயன்படுத்த வேண்டும் இதுதான் உங்கள் கண்களுக்கு அழகை தரக்கூடிய பொருள். இதன் மூலம் உங்கள் கண்கள் மிக அழகாக காண்பிக்க முடியும். கண்கள் தான் உங்கள் முகத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி என்பதால் அதிக கவனம் தேவை.

கடைசியில் இது அனைத்திற்கும் ஏற்றார்போல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது மிக அவசியம். இது போன்றவற்றை சரியான அளவில் சரியான விதத்தில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் உங்கள் முகம் மிக அழகாக தெரியும் இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நேர்காணலில் நீங்கள் எல்லாவித கேள்விகளுக்கும் பதில் அளிக்க உதவும். இதை மட்டுமே நம்பி இருக்காமல் நேர்காணலுக்கான பதில்களையும் தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன