ஒழுக்கமற்ற இளைஞர்களினால் ஏற்படும் விபரீதம்..!

  • by
problems that occur because of irresponsible youngsters

கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைப்பதற்காக இந்தியா முழுவதும் முழு அடைப்பில் இருக்கிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் எது நடந்தாலும் எனக்கு கவலை இல்லை என்ற எண்ணத்தில் வாழும் இளைஞர்கள் தடைகளை மீறி வெளியே சுற்றுகிறார்கள். இவர்களின் பொறுப்பின்மை காரணத்தினால் இந்த வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தமிழக இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக ஒன்றிணைந்து தமிழர்களின் குணத்தை உலகிற்கு கொண்டு சென்றவர்கள் தமிழக இளைஞர்கள். ஆனால் இதே வயது கொண்ட பொறுப்பற்ற இளைஞர்களால் தமிழர்களின் மானம் இந்தியா முழுவதும் பரவிக் கொண்டு வருகிறது. இவர்கள் செய்யும் குறும்புத்தனம், வேடிக்கை, இதனால் காவல்துறையினரால் வாங்கும் அடி என அனைத்தும் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. சமூகவலைத்தள புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யும் இதுபோன்ற செயலினால் அவர்கள் மானம் மட்டும் அல்லாமல் நம்முடைய நாட்டு மனமும் சேர்ந்து செல்கிறது.

மேலும் படிக்க – ஆஸ்துமாவை  அடியோடு அழிக்கும் பாரம்பரிய பாட்டி வைத்தியம் இதுதாங்க……!

பிற மாநில மக்கள்

இதுபோன்ற பொறுப்பற்ற இளைஞர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா மாநிலத்திலும் இருக்கிறார்கள். மனித உரிமை, தனி மனித சுதந்திரம், யாருக்கும் அடிமை இல்லை என்று கருத்துக்களை பேசிக்கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தை இது போன்ற இளைஞர்கள் அழிக்க நினைக்கிறார்கள். அரசாங்கம் தன்னுடைய சுய லாபத்திற்காக நமக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை, மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் இந்த கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டு வந்தது. இதை அறியாத முட்டாள் இளைஞர்களினால் நம்முடைய நாடு பாதாளத்திற்குள் செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

விளைவுகளை அறியாதவர்கள்

சொல்வதை கேட்க வேண்டும் என்பதைதான் எல்லோர் குடும்பத்திலும் கற்பித்து வளர்கிறார்கள். உங்களுக்கு ஏதேனும் தவறாக தோன்றினால் மட்டுமே எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். ஆனால் உலகம் முழுக்க பேரழிவில் இருக்கும் இந்த சூழ்நிலையில் உங்கள் குரல் மட்டும் தனித்து ஒலித்தால் அது உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தையும் அழித்து விடும். எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து அதன்பின் உங்கள் குரலை உயர்த்துங்கள். எதுவும் தெரியாமல் உணர்வுகளின் அடிப்படையில் செய்யும் செயல்களில் உங்கள் தரத்தையும், உங்கள் வாழ்க்கையையும் பின்னோக்கி கொண்டு செல்லாதீர்கள்.

மேலும் படிக்க – தொட்டாச்சிணுங்கி செடியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

இதுபோன்ற தடைகளை மீறி வெளியே வருபவர்களுக்கு ஓராண்டு வரை சிறையும், 1000 ரூபாய் அபராதமும் தண்டனையாக கிடைக்கும். அதேபோல் கொரோனா வைரஸ் பற்றி தவறான வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பரப்புபவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன