மன சோர்வு மற்றும் மன பதட்டத்தை போக்கும் மந்திரங்கள்..!

Prayers to get rid of depression and anxiety

ஒரு சிலருக்கு வீட்டை விட்டு வெளியேறுவது என்பது பிடிக்காது. அப்படி அவர் வெளியேறி விட்டாலும் எதைப் பார்த்தாலும் பதட்டத்துடன் இருப்பார்கள். இது போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு கசப்பான அனுபவத்தினால் நாம் மனச்சோர்வு மற்றும் மன பதட்டத்திற்கு செல்கிறோம். இதைத் தடுப்பது என்பது ஆரம்பத்தில் இயலாத காரியமாக இருக்கிறது. காலப்போக்கில் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் மூலமாக இதிலிருந்து மீண்டு வருகிறோம். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கை இதிலேயே முழுகி விடுகிறது, இதை தடுப்பதற்கு, ஆரம்பத்தில் இதில் இருந்து விடுதலை ஆவதற்கு சில மந்திரங்கள் இருக்கிறது.

தனிமையைப் போக்கும் மந்திரங்கள்

ஒரு சிலருக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதினால் அவர்களிடம் பேசுகையில் அவர்களின் மனச்சோர்வு மற்றும் மன பதட்டம் விலகும். ஆனால் இதனாலே ஒரு சிலருக்கு நண்பர்களை உருவாக்குவது கடினமாகிறது. இது போன்றவர்கள் ஒரு சில மந்திரங்கள் மூலமாக தங்களின் மனதை முழுமையாக மாற்ற முடியும். மற்றவர்களின் வாழ்க்கையை போல் உங்கள் வாழ்க்கையிலும் நண்பர்கள், காதல், உரையாடல் என எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்காக உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் காலையில் எழுந்து இங்கே குறிப்பிட உள்ள மந்திரங்களை உச்சரித்தால் உங்கள் மனதில் இருக்கும் அனைத்து பட்டங்களும் விலகி தெளிவுடன் உங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள வைக்கும்.

மேலும் படிக்க – காதல் வாழ்கையில் வெற்றி பெறும் வழிமுறைகள்

ஹரே ஹரே வஹேகுரு

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன நோய் விலகும். அதே போல் உங்கள் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரும்.

ஓம் நமோ குரு தேவ் நமோ

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் உங்களுக்கு மன சோர்வு மற்றும் மன பதட்டம் அதிகமாக இருந்தால் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மூலம் உங்கள் உணர்வுகளுக்கு அமைதியை இது அளிக்கும். உங்கள் வலிகளைப் போக்கி உங்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்ல உதவுவது இந்த மந்திரம்.

மேலும் படிக்க – செவ்வாயில் முருகனின் அருள் பெற பின்பற்றுங்கள்

தயாத்தா ஓம் கத்தோ கத்தோ பரகத்தோ, பரசம் கத்தோ போதி சகோ

ஒவ்வொரு விடியலும் தனிமையில் இருக்கிறதா சூரியனைப் போல நீங்களும் துணை இல்லாமல் எழுந்தோம், இறங்கினோம் என்று உங்கள் வாழ்க்கை நரகத்தை நோக்கி செல்கிறதா.? அந்த அனைத்து கஷ்டத்தையும் போக்குவதற்கு ஏற்ற மந்திரம் இது. இதை சொல்வதன் மூலம் உங்கள் மன சோர்வு அனைத்தையும் போக்கி எல்லாவற்றையும் புதிதாக பார்க்க முடியும்.

ஓம் க்ரீம் கணபதியே

இது ஒரு கணபதி மந்திரம், நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் ஏதேனும் தடங்கல்கள் உங்கள் மனதிற்கு தோன்றினால் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் அனைத்து தடைகளையும் நீக்கி, நீங்கள் நினைத்த செயலை செய்ய முடியும்.

மேலும் படிக்க – அஷ்டமியில் யாருக்கு என்ன செய்யனுமுனு பார்போம்

ஓம் சாந்தி ஓம் சாந்தி

இது அனைவரும் அறிந்த மந்திரமாகும் நாம் பதற்றமாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையுடன் உச்சரித்தால் நம் மூளை நம்மை அமைதியாக வைக்கச் சொல்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கும். இதன் மூலமாக நீங்கள் அமைதியாகலாம்.

இந்த மந்திரங்களை நீங்கள் முதலில் நன்கு பயின்று கொள்ள வேண்டும். இதற்காக இந்த மந்திரங்கள் ஒலிக்க செய்யும் பாடல்களை அதிகாலையில் எழுந்து ஒலிக்க செய்யவேண்டும் முதல் சில நாட்கள் அதை உற்று கவனித்து அதற்கு ஏற்றார் போல் நீங்களும் மந்திரத்தை ஒலித்து வந்தால் உங்கள் மனச்சோர்வு, மனப்பதற்றம் அனைத்தும் விலகி, எந்த ஒரு தடைகளும் இல்லாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி செல்ல முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன