பிரணயமா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

  • by
pranayama breathing exercise will improve your immunity power

நாம் தினமும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதுதான் சுவாசிப்பது, நம்முடைய நுரையீரல் இடைவிடாமல் நம்மை சுவாசிக்க வைக்கிறது. ஆனால் அதன் ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் நாம் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். அதைதான் மூச்சுப்பயிற்சி என்பார்கள். இதை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் அதை ஒவ்வொன்றாக காணலாம்.

நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும்

தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலமாக உங்களின் நுரையீரலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பொதுவாகவே எல்லா மனிதர்களும் தாங்கள் சுவாசிக்கும் எண்ணிக்கையை குறைத்து உள்ளார்கள். இதற்கு காரணம் இவர்களுக்கு போதுமான அளவு மூச்சுப்பயிற்சி இல்லாததுதான். எப்போது நாம் ஆழமாக மூச்சு பயிற்சியை மேற்கொள்கிறேமோ அப்போதுதான் உங்கள் உடலில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதைத் தவிர்த்து மூச்சு பயிற்சி பெறுவதன் மூலமாக உங்கள் நரம்பு மண்டலம் வலுவாக்குகிறது.

மேலும் படிக்க – சுத்தமற்ற உணவுகளை சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள்..!

சீரான இதயத் துடிப்பு

உங்களுக்கு சீரான இதயத் துடிப்பு இருக்க வேண்டுமென்றால் மூச்சுப்பயிற்சி மிக முக்கியம். இதில் பலவிதமான வகையில் உள்ளது. இது ஒவ்வொரு விதமான நன்மையை நமக்கு அளிக்கிறது. அதில் மிக முக்கியமான நன்மை தான் நமது இதயத்தை வலுவாக வைக்கிறது. மூச்சு பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் இதயத்துடிப்பு சீராகும், அதேபோல் இதயத்தின் ரத்த ஓட்டம் சமநிலையில் வைத்து இதய நோயை வரவிடாமல் தடுக்கும்.

பிரணயமா வகைகள்

பிரணயமாவில் கிட்டத்தட்ட இரண்டு வகையான மூச்சு பயிற்சி இருக்கிறது அதில் முதலாவது யோகேந்திர பிரணயமா, மற்றொன்று பிரமரி பிரணயமா. யோகேந்திர பிரணயாமை நாம் செய்வது சற்று கடினமாக இருக்கும் ஏனென்றால் நாம் யோகாவில் அமர்வது போல் காலை மடித்து அமர்ந்து கொண்டு நமது வலது கையைக் கொண்டு ஒரு மூக்கை மூடிக் கொண்டு மூச்சை நன்கு இழுக்கவேண்டும். சிறிது நேரம் மூச்சை உள்ளே வைத்துக் கொண்டு மற்றொரு மூக்கை அடைத்துக் கொண்டு மூச்சை இழுத்து முக்கில் திரும்பிவிட வேண்டும். இதை தொடர்ந்து 15 நிமிடங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பிரமரி பிரணயமா என்பது மேலே குறிப்பிட்டுள்ள பிரணயமா போல் தான் ஆனால் மூச்சை வெகுநேரம் நம் பிடித்து வைக்க அவசியமில்லை. உடனடியாக நாம் மூச்சை எப்படி விடுவோமோ அப்படி மூச்சை உள்ளிழுத்து வெளியே விடலாம்.

மேலும் படிக்க – சுத்தம் சுகாதரம் பேணி வருதல் சிறப்பு

இதனால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் நுரையீரலை வலுவாக்கும், சுவாச பிரச்சனையை தடுக்கும், கல்லீரல், மண்ணீரல் போன்றவைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், இருதயப் பிரச்சினை ஏற்படாது, நரம்பு மண்டலத்தை உறுதி ஆக்கும், ரத்த ஓட்டம் சீராகும். ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பயிற்சியை ஈடுபட்டு அவர்களின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதை பின் தொடர்வதன் மூலமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உங்களை எந்தவொரு நோய்த்தொற்றும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும். இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த பிரணயமா பயிற்சியினால் நமக்கு கிடைக்கிறது.

யோகா வகையை சேர்ந்த இந்த மூச்சுப் பயிற்சியை நாம் தினமும் எளிமையான முறையில் மேற்கொள்ளலாம். இதற்காக நாம் உடல் ஆற்றலை பயன்படுத்த தேவையில்லை. எனவே இதை பின்தொடர்ந்தது உங்கள் சுவாசத்தின் சக்தியை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன