பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாசின் செயல்..!

  • by
prakash and karunas donates for corona virus relief

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. மே மாதத்திற்கான உணவுப் பொருட்களை வாங்குவதற்கான டோக்கன்களை மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வீடு வீடாக வந்து வழங்க உள்ளார்கள். இப்படி வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் மற்றும் அன்றாட உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தமிழக அரசு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. அதை தவிர்த்து தங்களை சார்ந்து வாழ்பவர்கள் மற்றும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை பாதுகாக்கும் முயற்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாஸ் இறங்கி உள்ளார்கள்.

பிரகாஷ்ராஜ்

தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் தன் வீட்டை சுற்றி ஏராளமான செடி கொடிகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இதனால் அங்கு பணிபுரியும் அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த மூன்று மாதத்திற்கான ஊதியத்தை அளித்துள்ளார். அதைத் தவிர்த்து அவரின் அடுத்த மூன்று படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மறக்காமல் சம்பளப் பணத்தை அளித்து வருகிறார். அதைத் தவிர்த்து சினிமாவில் கஷ்டப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் இவர் ஏராளமான நன்கொடைகளை செய்து வருகிறார். தினக்கூலி வாங்கி தன் குடும்பத்தை நடத்தி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இவர் உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் படிக்க – மகனுடன் குத்தாட்டம் போடும் நடிகை..!

கருணாஸ்

நந்தா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று அரசியலில் தனது கால் பதித்துள்ள நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவர்கள் அவ்வப்போது ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும், தேவைப்படும் சமயங்களில் மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இப்படி தனது மனைவி மற்றும் மகளின் உதவியுடன் கிட்டத்தட்ட 500 கிலோ அரிசியை இல்லாதவர்களுக்கு அளித்துள்ளார். அதைத் தவிர்த்து நாடகக் கலைஞர்கள் மற்றும் மேடைகளில் கச்சேரி செய்பவர்கள் போன்ற அனைத்து கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகையாக 5 ஆயிரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

துறை சார்ந்த உதவி

இப்படி மக்கள் தங்கள் துறைகளில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவி செய்தாலே அனைத்து மக்களும் உதவி பெறுவார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நாம் நிவாரண தொகையை அளித்தாலும் அது சரி சமமாக பங்கிட்டு மக்களுக்கு சென்றடைகிறது. இருந்தும் உங்கள் துறையில் கஷ்டப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள், அதே செயலை அனைத்து தொழிலதிபர்களும் செய்தாலே நம் நாட்டில் வறுமை விலகி மக்கள் நிம்மதியாக மூன்று வேளை உணவை உண்பார்கள்.

மேலும் படிக்க – சசிகுமாரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

இது மிகப்பெரிய தொழிலாளர்களை சார்ந்தது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு கூட இது போன்ற சமயங்களில் உதவி செய்து அவர்களின் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள். அதேபோல் வீட்டு அருகே சிறிய கடைகள் வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள், வாட்ச்மேன், சைக்கிள் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, மூட்டை தூக்குபவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என அனைவருக்கும் உதவிகளை செய்து மனிதாபிமானமுடன் வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன