மன அழுத்தம், கவலை மற்றும் கோபத்தை சமாளிக்க மன சுவாசம் பயிற்சியை செய்யுங்கள்…!

 • by

நாம் அனைவரும் வழக்கமான சுவாசிப்பிற்கு பழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் மன சுவாசம் பயிற்சியை மேற்கொள்ளும்போது நமது மூளைக்கு புதுவிதமான ஒரு ஆற்றல் கிடைக்கும்; அது உங்கள் மூளைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் போது உங்கள் மூளை இருப்பதை விட மேலும் புத்துணர்வு பெறும், ஒரு செயலை நீங்கள் அணுகும் முறை மற்றும் கையாளும் விதம் என அனைத்தும் முற்றிலும் மாறுபடும்.

மன சுவாசம் :

மன அழுத்தம், பதட்டம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வழியாகும். மனிதருக்கு பள்ளி, கல்லூரி, வீடு மற்றும் அலுவலகம் என பல இடங்களில் இருந்து பிரச்சனைகள் ஏற்படும் அதை சமாளிக்க ஒரே வழியாக மன சுவாசம் பயிற்சி இன்றியமையாதது.

நீங்கள் வழக்கம்போல் வாசிக்கும் நிலையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து, நல்ல தளர்வான உடைகளை உடுத்தி, எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியான முறையில் கண்மூடி அமர்ந்து உங்கள் சுற்றுப்புறத்தை மறந்து யோசனை அன்றி இருப்பதுதான் மன சுவாச பயிற்சி.

இது ஒரு சிறந்த வழி என்று பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனநிறைவை அடைவது என்பது அடிப்படையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்தல் ஆகியவற்றில் முழுமையான கவனம் செலுத்தும் திறன் ஆகும்.

மேலும் படிக்க -> எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ 10 வழிகள்…!

மன சுவாசம் பயிற்சிகளைப் செய்வதன் நன்மைகள்:

மன சுவாசம் பயிற்சிகளைப் பயிற்சி செய்வது சிறந்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது, ஒருவரின் பதட்டத்தை குறைக்கிறது மற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது. திறன்களை மேம்படுத்துகிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. தவிர, நினைவாற்றலைக் கூட்டுவதும் ஒரு முக்கியமான சிறப்பு.

 • உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கவும்.
 • தூக்கத்தை மேம்படுத்தவும்.
 • உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்.
 • இரைப்பை குடல் சிக்கல்களை தீர்க்கவும்.
 • மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
 • உடல் கோளாறுகள், உறவுகளில் பிரச்சனை, கவலை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன சுவாசம் சிகிச்சையளிக்க உதவுகிறது.

மேலும் படிக்க -> நீங்கள் தனிமை மற்றும் மனச் சோர்வில் இருக்கும்போது செய்ய வேண்டியவை…!

மன சுவாசத்தின் நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள்:

மன சுவாசம் பயிற்சியில் பல்வேறு வகை சுவாசங்கள் இருக்கின்றது. இத்தகைய சுவாச பிரச்சனைகளை நீங்கள் மேற்கொள்ள ஒரு சிறந்த ஆசானிடம் சேர்ந்து இதனை கற்றுக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்போதுள்ள தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் இதற்கான வீடியோக்களை துறை சார்ந்த நிபுணர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர் அதையும் நீங்கள் கண்டு பயன்பெறலாம் இதில் குறிப்பிடத்தகுந்த சுவாசங்கள் மிகவும் பிரபலமானவை;

 • மலை சுவாசம்
 • மீன் சுவாசம்
 • பூ சுவாசம்
 • பலூன் சுவாசம்
 • கடல் சுவாசம்
 • வானவில் சுவாசம் மேலும் பல.

மன சுவாசம் பயிற்சி எவ்வாறு செயல்படுகிறது:

நல்ல சிந்தனையை அடைவது உண்மையில் மக்கள் தங்கள் தீய உணர்வுகளிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் தங்களைத் தூர விலக்க உதவுகிறது, இது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது மேலும் விரும்பத்தகாத நேரத்தில் அவர்களை சகித்துக்கொள்பவர்களாக மாற்றுகிறது.

அவர்களின் மனம் வேலை செய்யும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. அனைத்து வகையான உடல்நல பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது இந்த மன சுவாசம் பயிற்சி, ஆகையால் இந்த பயிற்சியை மேற்கொண்டு உங்களையும் உங்களை சார்ந்துள்ள சமூகத்தை மகிழ்வோடு வைத்திருக்க உதவுங்கள்.

மேலும் படிக்க -> வேலைச் சலிப்பிற்க்கான அறிகுறிகளை கண்டறிதல் மற்றும் வேலை தொடர்பான மன அழுத்தத்திலிருந்து மீளுதல்…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன