பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பொங்கல்!

  • by

தை பிறந்தால் வழிப்பிறக்கும்,  நாம் தொடங்கும் எந்த ஒரு செயலையும்  ஆண்டவனை நினைத்து வணங்கிய நம்முன்னோர்கள் நாள் கிழமைப் பார்த்து செய்வது வழக்கம் ஆகும்.   ஒரு ஆண்டின், 12 மாதங்களில், தை மாதம், நல்ல செயலை ஆரம்பித்தால், அது நல்ல பயனை நமக்கு அளிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டு புதியது தொடங்கி வந்தோம். 

வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில் நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை ஆகும். 

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

கதிரவன் உச்சத்தைப் பெறும் முதல் ஆறு மாதங்கள், ‘உத்தராயணம்’ என்றும், சாந்தத்தைப் பெறும் அடுத்த ஆறு மாதங்கள், ‘தட்சிணாயணம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை, உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும். 

அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும் தட்சிணாயணம் முடியும் நாளும், பொங்கல் பண்டிகையே ஆகும். ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தை முதல்நாள். இது, நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு காரணமான சூரியனுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றியுணர்வாகும். 

தேசிய பொங்கல் தினம்:

பொங்கல்  நாளை தேசிய பொங்கல் தினம் என்று கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டுவருகின்றது. பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக் கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழாவாகும். உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா இந்த பொங்கல்விழா ஆகும்.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் நாளை மக்கள்களால் கொண்டாடப்படவுள்ளோம். . இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது அறுவடைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். 

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

பொங்கல் நன்நாளில் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல், உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் என நாம் அழைக்கின்றோம். 

பொங்கல் தினம்குறித்து சங்ககாலம் முதல் குறிப்புள்ளது.  அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர்.நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுவார்கள். 

போகியில் பழையன களையப்படும்:

பொங்கலுக்கு முந்தய நாள் போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதம் முடிந்தப் பின் அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், ‘பழையன கழித்து புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகும். இதனை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  கொண்டாடுகின்றனர். 

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாககருதப்படுகிறது. அன்று வீட்டின் கூரையில், பூலாப்பூ என்கிற மலரை சொருகி வைப்பர். போன ஆண்டு போல், ‘டிவி’ முன்பும், வாட்ஸ் ஆப், முகநுால் என்றும் இருந்த நம் நேரத்தை இந்த முறை களைந்து கழித்துவிட்டு, புத்தம் புதிதாய் அனைவருக்கும் போனில் வாழ்த்துவோம்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

பொங்கல் வைத்து குழவு பாடல்:

பொங்கல் அன்று அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும், மாட்டுக்கும் படைப்பதை மக்கள் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

பொங்கல் தின நன்நாளில் வடை, பாயசம், 21 வகையான நிலத்தில் விளைவித்த நாட்டு காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இது நன்றி மற்றும் சமர்ப்பணத்தை குறிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன