மாமனார் மருமகனில் பட்டாஸ் கிளப்பபோரது யாருங்க..!

pongal festival movie competition between darbar and pattas

ஜனவரி 9ஆம் தேதி தர்மர் திரைப்படம் வெளியானது, அதை தொடர்ந்து பொங்கலன்று பட்டாஸ் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு கதாநாயகன்கள் நடித்த திரைப்படங்கள் இதுவாகும். தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த் தனது அனுபவம் மற்றும் வயதிற்கு ஏற்றார் போல் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவரின் திரைப்படத்தை வெளியிட்டார். அதேபோல், பெரியவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தனுஷும் சில நாட்கள் கழித்து பொங்கல் அன்று தன் படத்தை வெளியிட்டார். படத்தை வெளியிடுவது இவர்கள் கையில் இல்லை என்றாலும் ரசிகர்கள் பார்வையில் இது போன்றுதான் தெரிந்தது. இந்த இரண்டு படங்களும் பொழுதுபோக்குக்கான போதுமான கதை மற்றும் திரைக்கதையை கொண்டுள்ளதால் வசூல் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதிலும் தர்பாரை பற்றி சொல்லவே வேண்டாம். பழைய ரஜினியை நம் கண்முன் காண்பதுபோல் இந்த திரைப்படம் இருந்தது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக மீண்டும் களம் கண்டிருக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியான முதல் வாரத்திலேயே 100 கோடியை தாண்டியது. இன்றுவரை இந்த படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் இந்த படம் 200 கோடியை இன்னும் இரண்டே நாட்களில் தொட்டு விடும் என்கிறார்கள். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 13 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் 14 கோடியை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

பட்டாஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 450 திரையரங்குகளில் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகின. முதல் நாளில் மட்டும் 6.5 கோடி வசூல் செய்தது. பொதுவாகவே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் இரண்டாம் நாளில் குறைவாகவே இருக்கும் ஆனால் இந்த திரைப்படம் முதல் நாள் போலவே நல்ல வசூலை இரண்டு நாளிலும் வசூலித்தது. மிகப்பெரிய படமான தர்பார் படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படம் வெளியாகின. இதனால் திரையரங்குகள் அதிகமாக ரஜினிகாந்த் படத்தை வெளியிட்டனர். இருந்தாலும், பட்டாஸ் திரைப்படம் நல்ல வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட முதல் வாரத்தில் 20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தர்பார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 200 கோடிக்கு சேட்டிலைட் உரிமையை வியாபாரம் செய்யப்பட்டுவிட்டார்கள். அதேபோல்தான் தனுஷின் திரைப்படமும் வியாபாரமாகி உள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்பது சரியாக தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லாமல் இந்த பொங்கல் சிறப்பாக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு படத்திற்கும் போட்டியாக வேறு எந்த படமும் திரையிடப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன