களைகட்டும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள்!

  • by

கலைகட்டும் பொங்கல் விழா  வீடு காடு எங்கும் விழா கோலம் பூத்துக்கிடக்கின்றது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான வேலைகளில்   மக்கள் ஈடுபட தொடங்கிவிடட்னர். ஆன்லைன் மார்க்கெட்டிங் நுட்பம் எல்லாம் நம் பர்சை காலி செய்ய துணிந்துவிட்டன. 

தமிழகத்தில் அறுவடை காலத்தில் சூரியனுக்கு நன்றி கூற விவசாயிகள் சூரியனுக்கு பொங்கல் வைத்து  கொண்டாடுவார்கள். இத்திருநாளில் வீடுகள் மற்றும் கோவில்களில், சமூக கூடங்கள், சமுதாய பொங்கல்,  அமைப்பு பொங்கல் போன்றவற்றை கொண்டாடுவது வழக்கமாகவுள்ளது. மக்கள் அவர்கள் சார்ந்த அமைப்பில் கொண்டாடி  மகிழ்வார்கள். இங்கு தமிழகத்தில் சிறப்பு மிக்க வித்தியாசமான பொங்கல்களைப் பற்றி விளக்கியுள்ளோம். 

பொங்கல்  பலவிதங்களில் தமிழ்நாட்டில்  கொண்டாடப்படுகின்றது. பொங்கல் தமிழ்நாட்டில்  கிராமப் பொங்கல், கருப்பட்டி பொங்கல், ஆண்கள் வைக்கும் பொங்கல், கனடா  பொங்கல், லிட்டில் இந்தியா பொங்கல் என உலகம் முழுவதும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றனர். 

பொங்கலுக்கு முன் போகி, வீட்டு பொங்கல், உழவர்களுக்கு உதவும் எருதுகள், பசுவை வணங்கி கொண்டாடும் பொங்கல்,  ஜல்லிகட்டு மற்றும் காணும் பொங்கல் ஆகியவை இங்கு வழக்கில் உள்ளது. 

பொங்கல் வழிபாடானது ஊருக்கு ஊர் மாறுபடும்,   பொங்கலுக்கு வெள்ளை அடித்து, பசுமாட்டுச் சாணம்  மொழுகி, கரும்பு, புதுப்பானைகள் கொள்முதல் செய்து, பச்சரிசி, கரும்புச் சக்கரை என அனைத்தும் புதிதாகப் பயன்படுத்துவார்கள். 

மேலும் படிக்க – சிறப்புமிக்க தைப்பூசத் திருநாள்..!!

புதுத்துணி, பொங்கல்,  பலகாரங்கள் செய்து அதனை காணும் பொங்கலில் மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவார்கள்.  அன்று சந்தையில் நடந்த வியாபாரம் இன்று இணைய உலகில் பிரபலம் அதுவும் பொங்கல் போன்ற பண்டிகைகள் 4 முதல் 5 நாட்கள் இருக்கும் என்பதால் அதன் மூலம் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகின்றது. 

பொங்கலுக்கு கரும்பு, புதுப்பானை,  கோலப் பொடி, ஊர் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடுதல், உரி  அடிக்கும் போட்டி, சாக்குப் போட்டி, ஸ்லோ சைக்கில் விளையாட்டுகள் ஊர்களில் பிரசித்தமாக கொண்டாடப்படுகின்றன. 

வீடு முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, பலகாரங்கள் நிறைந்து கிடந்த பொங்கல் வேறு, இன்று உள்ள உலகம் வேறு இருப்பினும் கொண்டாட்டங்கள் மாறவில்லை. அதனால் மக்களின்  மனமும் மாறவில்லை. மஞ்சள் கட்டி, புதுப்பானை வைத்து, பச்சரிசி வெள்ளம், கரும்பு, பலகாரங்கள், சூரியனுக்கு படைத்தல் ஆகியவற்றை செய்து மக்கள் கொண்டாடுவார்கள். 

மாட்டுப் பொங்கல்: 

மாட்டுப் பொங்கலில்  விவசாய மக்கள் தொழுவம் முழுவதும் சுத்தம் செய்து மாடுகளை குளிக்க வைத்து கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொங்கள் வைத்து படைப்பார்கள். சிலர் மாடுகளுக்கு என சால்வை  போர்த்தி வணங்குவார்கள். 

மேலும் படிக்க – தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் அந்நாளில் என்னவெல்லாம் செய்யலாம்.!

ஜல்லிக்கட்டு: 

இந்த நாளில் ஊர்களில் விளையாட்டுகள் மிகுந்து நடைபெறும். வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்க இளம் வீரர்கள் பங்குபெறுவார்கள். அதற்காகவே பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி காளைகளை அடக்க வாடிவாசல் புகுவார்கள். சில ஊர்களில் வழுக்க மரம் ஏறுதல் மற்றும்    எடைக்கல் தூக்குதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடத்துவார்கள். 

காணும் பொங்கல் அன்று  பீச் என அழைக்கப்படும் மெரினா  கடற்கரை சென்னை போன்ற ஊர்களில் கொண்டாடப்படுகின்றது. மாவட்டங்களில் பல பகுதிகளில் ஆற்றங்கரையோரம் அல்லது  ஒரு சில சந்திப்புகளில் மக்கள் பலகாரங்களை பகிர்ந்து உண்ணுவது வழக்கம் அதனை பூ பரிக்கும் நோம்பு என்றும் அழைப்பார்கள். 

பொங்கலை வரவேற்கும் விதமாக பொங்கலுக்கு முந்தய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்து ஒதுக்கிய பொருளை ஒன்று சேர்த்து எரித்து புதுமையை வரவேற்கும் போகியை வரவேற்பார்கள் பழையன கழிதலும் புதியன புகுதல் ஆகிய  முறையில் நடைபெறும். இ போகியன்று இரவு காப்புக்கட்டி வேப்பிலை, கோலப்பூ, வீட்டு முற்றம், சமையலரை, பூஜை அறைகளில் எல்லாம் வைத்து கொண்டாடுவார்கள். அன்று வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் சுத்தம் செய்து மாலை கூட்டு பருப்புகள் தோட்டத்தில் விளைந்த பூசணி, அவரைக்காய், அவரை விதை போன்றவற்றை வைத்து காய்கறி, கூட்டு, நெய் , வாழைப்பழம் நெய் கலந்த சாதம் சாப்பிடுவார்கள். போகி இரவில் அதனை முதலில் முன்னோர்களுக்கு படைத்து உண்ணும் வழக்கம் இருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன