கொரோனா வைரஸை அழிக்கும் பிளாஸ்மா சிகிச்சை..!

  • by
plasma therapy to cure corona virus

கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பிளாஸ்மா தெரபி. சார்ஸ் வைரஸ் பரவுவது தடுத்து குணப்படுத்துவதற்கு பயன்படுத்தி வந்த இந்த பிளாஸ்மா சிகிச்சையை கொரோனா வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உலகில் உள்ள எல்லா நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த பிளாஸ்மா சிகிச்சை 100% வெற்றி அடையும் என்று கூறிவருகிறார்கள். இதைத் தவிர்த்து அவர்கள் பிளாஸ்மா சிகிச்சையை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

குணமடைந்த நோயாளி

பிளாஸ்மா சிகிச்சைக்கு முதன்முதலில் அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்கிய மாநிலமாக கேரளா கருதப்படுகிறது. ஆனால் இதை செயல் படுத்துவதற்காக ஏராளமான கட்டுப்பாடுகள் இந்திய சுகாதாரத் துறை விதித்துள்ளது. ஆனால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை இந்த பிளாஸ்மா சிகிச்சையை வைரஸ் பாதிக்கப்பட்ட 49 வயது நோயாளிக்கு அளித்துள்ளார்கள். கவலைக்கிடமாக இருந்த இவர் இரண்டே நாளில் வெண்டிலேஷன் உதவி இல்லாமல் சுவாசிக்கத் தொடங்கி விட்டார். அதை தவிர்த்து இப்போது அவர் முழுமையாக குணமடைந்து பரிசோதனையில் இருக்கிறார். டெல்லியில் உள்ள இந்த தனியார் மருத்துவமனை செய்த சாதனையை இந்தியா முழுவதும் பின் தொடர்ந்து கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வேண்டுமென அந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு சந்திப் புதிராஜா கூறியுள்ளார்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸின் தற்போதைய நிலை..!

பிளாஸ்மா சிகிச்சை

பிளாஸ்மா சிகிச்சை என்றால் கொரோனாவிள் இருந்து முழுமையாக குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் தனியாகப் பிரித்தெடுத்து அதை கொரோனா வைரஸில் பாதிப்பை சந்தித்து வரும் நோயாளிகளுக்கு அளிப்பார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட பிளாஸ்மா பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் சென்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதை தவிர்த்து கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதை முழுமையாக அழித்து விடும்.

பிளாஸ்மாவின் செயல்

சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கிட்டத்தட்ட 55 சதவீதம் பிளாஸ்மா இருக்கும். நம் உடலில் ஏற்படும் நோய்களை எதிர்க்கும் சக்திகளை இந்த பிளாஸ்மா உருவாக்குகிறது. இதைத்தவிர்த்து கொரோனா போன்ற வைரஸ் மீண்டும் மனிதர்களை தாக்கினால் அதன் வளர்ச்சியை தடுத்து, முழுமையாக அழிக்கும் தன்மை எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள பிளாஸ்மாவிள் இருக்கிறது. இதனால் கொரோனாவின் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவின் ஆன்டிபாடி என்று கருதப்படும் எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். எனவே இந்த பிளாஸ்மாவை அவர்கள் தானம் செய்தால் அதை பயன்படுத்தி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளித்து அவர்கள் ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

குணமடையும் நோயாளிகள்

பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாக 100% இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தலாம். ஆனால் இது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையை பொறுத்தது.  ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பிளாஸ்மா சிகிச்சையை அளித்து குணப்படுத்தலாம். அதுவே அவர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் வைரஸின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இருந்தும் இவர்களையும் வேறுசில சிகிச்சையை கொண்டு பிளாஸ்மாவையும் இணைத்து குணப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – சைனஸ் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டும்

தானம் செய்ய வேண்டும்

கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள், அவர்களின் ரத்தத்தை தானமாக அளிக்க வேண்டும். இதை ஒருவித சூழர்ச்சியின் மூலமாக ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்தெடுத்து அதை நோயாளிகளுக்கு பயன்படுத்துவார்கள். எனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களால் முடிந்த வரை தங்கள் ரத்தத்தை தானமாக அரசாங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

உலக நாடுகள் அதிகமாக பயன்படுத்தி வரும் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறைகளை இந்தியாவில் பயன்படுத்தி வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை நாம் குறைக்க முடியும். அதை தவிர்த்து இந்த வைரஸ் தொற்றினால்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலமாக மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸை முழுமையாக அழிக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன