ஊரடங்கின் பொழுது செடிகளை வளருங்கள்..!

  • by
plant trees during this lockdown

கொரோனா வைரஸ் மக்களை தாக்காமல் இருப்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஊரடங்கை பின்பற்றி வருகிறார்கள். கடந்த மூன்று வாரங்களாக அனைத்து மக்களும் ஊரடங்கிள் இருப்பதினால் அவர்கள் மனநிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வீட்டிற்குள் நடக்கும் சண்டை, சச்சரவுகள் மற்றும் சங்கடமான நிலைகள் அதிகரித்துள்ளது. இது அனைத்திற்கும் காரணமாக பார்க்கப்படுவது மக்களுக்கு போதுமான அளவு ஊக்கம் வீட்டில் கிடைப்பதில்லை. எனவே உங்களை நீங்களே ஊக்கமளித்து ஒரு சில செயல்களில் ஈடுபட வேண்டும், அதில் உங்கள் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல் தான் செடிகளை வளர்ப்பது.

மாடித் தோட்டம்

தமிழகத்தில் ஏராளமான நகரவாசிகள் அவரவர் மாடிகளிலேயே தோட்டங்களை வைக்க தொடங்கிவிட்டார்கள். இதன்மூலமாக வீட்டு மாடியில் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய் போன்றவர்களை விளைவிக்கிறார்கள். இதை நாமும் பின்தொடர்ந்து நம் வீட்டு மாடிகளில் தோட்டங்களை அமைத்திட வேண்டும். இதன் மூலமாக உங்கள் மன அழுத்தம் அனைத்தும் குறைந்து நீங்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கலாம்.

மேலும் படிக்க – கொரானாவிலிருந்து முதியோர்களை பாதுகாக்கவும்

தேவையானவை

மாடி உள்ளவர்கள் மாடி தோட்டத்தை அமைக்கலாம், இல்லை எனில் வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் ஓரமாகவும் அல்லது பால்கனிகள் போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம். நீங்கள் காய், கனி, பூக்கள் போன்ற எந்த செடி வேண்டுமானாலும் வளர்க்கலாம். அதற்கு நாம் செடிகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் மண்ணை வாங்க வேண்டும். அப்படி இது போன்ற மண் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நம் சாதாரண மண்ணுடன் களிமண், முட்டை ஓடு, மாட்டுச்சாணம் போன்றவைகளை ஒன்றாக சேர்த்து இயற்கையான மண்ணை நீங்களே தயாரிக்கலாம்.

மாடியில் அமைத்திடுங்கள்

உருவாக்கிய மண்ணை மாடி முழுவதும் கொட்டி விடுங்கள், பிறகு அதில் உங்களுக்கு விருப்பமான செடிகளின் விதயை போடலாம். நாம் வாங்கப்படும் ஒவ்வொரு காய் மற்றும் பழங்களிலும் அதன் விதைகள் இருக்கும் எனவே அதை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து பின்பு மணலில் புதைக்க வேண்டும். ஒரு சில நாட்களில் இதன் செடிகள் மெதுவாக வெளியே வரும், அதன் பிறகு தொடர்ந்து அதற்கு தேவையான நீரை ஊற்றி வளர்க்க வேண்டும். நீங்கள் இது போன்ற தோட்டங்களை சூரியன் படும் இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல் நீங்கள் ஊற்றும் தண்ணீர் வெளியிடுவதற்கான பாதைகளையும் அமைத்திட வேண்டும்.

ஏராளமான பயன்கள்

இனி வரப்போகும் காலங்களில் உங்கள் நாட்களை அமைதியாக கழிப்பதற்காக இதுபோன்ற செடிகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அதற்கு நீரை ஊற்ற வேண்டும், அதேபோல் அதை எந்த ஒரு பூச்சிகளும் பாதிக்காமல் இருப்பதற்கான பராமரிப்பு வேலைகளையும் செய்ய வேண்டும். மீண்டும் மாலை வேளைகளில் சிறிதளவு நீரை அதற்கு ஊற்ற வேண்டும். இதை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் வீட்டின் மாடியில் ஒரு அழகான தோட்டம் உருவாகும். அதைத் தவிர்த்து உங்களுக்கு தேவையான காய்கறிகள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும்.

மேலும் படிக்க – அமெரிக்காவைவிட இந்தியா பாதுகாப்பானது அமெரிக்கர்கள் கருத்து

சிறிய செடிகள்

ஒருசிலர் பூக்களை வளர்க்க விரும்புவார்கள், இவர்கள் ரோஜா, மல்லி போன்ற செடிகளின் விதையை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையெனில் செடிகளாக விற்கப்படும் இதுபோன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு உள்ளே வளர்க்கப்படும் கள்ளிச்செடி மற்றும் கண்ணாடி பாட்டில்களில் போட்டு வளர்க்கப்படும் மணி பிளான்ட் போன்றவைகளும் வளர்க்கலாம். கோடைக்காலம் வருவதினால் இதுபோன்ற செயல் உங்கள் வீட்டை குளிர்ச்சி அடையச் செய்து உங்கள் மனநிலையை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.

மாடித் தோட்டத்தை எப்படி அமைக்கலாம் என்பதற்கான ஏராளமான காணொளிகள் இணையதளத்தில் இருக்கிறது. அதை பார்த்து உங்கள் வீட்டில் அல்லது மாடியில் உங்களுக்கு பிடித்தமான காய்கறி செடிகளை வைத்திடுங்கள். அதே போல் உங்கள் வீட்டை அழகூட்டும் பூக்கள் செடிகளையும் வைத்து உங்கள் மனநிலையை எப்போதும்  உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன