தோட்டங்களை உருவாக்கி உங்கள் சமுதாயத்தை அழகாக்குங்கள்..!

  • by
plant trees and make your society beautiful

நம்முடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்றால் நாம் வீட்டிலோயே அல்லது வீட்டு மொட்டை மாடிகளிலும் பலவிதமான செடிகள் மற்றும் பூக்களை நடவேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் சிறிய செயல் தான். அதை சரியாக செய்தால் நம்முடைய சமூகம் மற்றும் வீடு அழகாகும்.

மாடித் தோட்டங்கள்

இப்போது தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அதிகமாக பரவி வரும் பழக்கம் தான் மாடி தோட்டம் அமைப்பது. இந்த கலாசாரம் இந்தியா முழுவதும் பரவியுள்ள நிலையில் எல்லோரும் தங்களுக்கு பிடித்த காய்கறிகளை மாடியிலேயே வளர்த்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இதைத் தவிர்த்து பூஜைகளுக்கும் மற்றும் பெண்களின் அழகுக்காகவும் பயன்படுத்தப்படும் பூக்களையும் அவர்களையே மாடியிலேயே வளர்க்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் இல்லத்தில் ஆரோக்கியமான சூழல் நிகழுகிறது. அதை தவிர்த்து அவர்கள் சுவாசிக்கும் காற்றும் தூய்மையடைகிறது.

மேலும் படிக்க – மகா சனி பிரதோச சிவபெருமான் வழிபாடு!

பூங்காக்களில் விதை இடுங்கள்

உங்கள் வீட்டில் செடி வளர்வதற்கு போதுமான இடம் இல்லை என்றால், இருந்தாலும் உங்களுக்கு சமூகமே அக்கறை இருந்தால், உங்கள் வீட்டு அருகே உள்ள தோட்டங்களில் விதைகளை தூவி விடுங்கள். இல்லையெனில் செடிகளை நடுங்கள். இதன் மூலமாக உங்கள் மனமும் திருப்தி அடைந்து உங்கள் சமுதாயமும் அழகாகும்.

இயற்கை பாதுகாப்பு

இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. இதை மனதில் ஏற்றிக்கொண்டு எல்லோரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதை தவிர்த்து இயற்கையைச் சீரழிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நாம் இயற்கைக்கு உதவிகள் செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கு எதிராக இருக்க கூடாது. எனவே நம் வீட்டில் உள்ள கழிவுகளை செடிகள் மேல் ஊற்றுவது, காரணமில்லாமல் செடிகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது போன்றவைகளை தவிர்ப்பது மூலமாக நாம் இயற்கையை பாதுகாக்கலாம்.

மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்

செடிகள் மற்றும் மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகளை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத் தாருங்கள். நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போது சிந்திக்கிறோமோ அப்போதே நம்முடைய சமுதாயத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அதனால் சிறியவர்களுக்கு நம்முடைய சமுதாயத்தை எப்படி பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். செடிகளின் அருமை, மரங்களின் அருமை, இயற்கையின் அருமை என எல்லாவற்றையும் அவர்களுக்கு உணர்த்தி அவர்களின் நிகழ்காலத்தை பசுமையாக மாற்றுங்கள்.

மேலும் படிக்க – மகத்துவமான மாசி மகம் கொண்டாட்டங்கள்

இயற்கை என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். எனவே அதை பாதுகாப்பது தான் சிறந்த வழியாகும். அதை தவிர்த்து அதை அழித்தலை தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மற்றவர்கள் யாராவது இயற்கையை அழித்தால் அவர்களை தட்டிக் கேட்க வேண்டும். இதுதான் நம்முடைய சமுதாயத்திற்கு நாம் செய்யும் கைமாறு. எனவே நீங்கள் இன்றே ஏதாவது ஒரு செடியை நட்டு அதைப் பராமரியுங்கள். இதை அனைவரும் செய்தால் நம்முடைய சமுதாயம் மற்ற நாடுகளைப் போல் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் பசுமையாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன