நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அண்ணாச்சி பூ..!

  • by
pineapple flower to increase immune power

அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பை நாம் பிரியாணியில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் ஒன்று, ஆனால் இந்த அண்ணாச்சி பூ சீனாவை சார்ந்தது. சீனாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சென்று இந்தியாவில் இது தவிர்க்க முடியாத ஒரு மசாலா பொருளாகும் மாறி உள்ளது.

நட்சத்திர சோம்பு

நட்சத்திர வடிவத்தில் இருக்கும் இந்த அன்னாசிப்பூ பிரியாணி போன்ற உணவுகளில் சேர்த்து பயன்படுத்துவோம், அதைத் தவிர்த்து முதியவர்கள் இதை கொதிக்க வைத்த நீரில் சேர்த்து அந்த நீரை அருந்தி வருகிறார்கள். அனைத்திற்கும் மேலாக நாம் தினமும் பயன்படுத்தி வரும் கரம் மசாலா போன்ற பொடிகளிலும் இதை சேர்க்கிறார்கள். இந்தியர்கள் சமைக்கப்படும் அனைத்து உணவிலும் இந்த அன்னாச்சி பூ இருக்கிறது.

மேலும் படிக்க – கொரோனாவை கொள்ளுமா கபசுரக் குடிநீர்..!

வாயுக்கோளாறு

அன்னாசிப் பூவில் இனிப்பு சுவை கொண்ட மசாலா இருக்கிறது, எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்கு இரண்டு வகையான ருசியை தருகிறது. இதைத் தவிர்த்து இது நமக்கு ஏற்படும் வாயு பிரச்சனையை முழுமையாக குறைத்து நமது உணவை மிக எளிதில் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 23 சதவீத மக்கள் வாயு மற்றும் செரிமானப் பிரச்சனைகளில் தவித்து வருகிறார்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அண்ணாச்சி பூ மிகப்பெரிய தீர்வாக இருக்கும்.

நரம்பு பிரச்சினை

உடல்நிலை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் அன்னாசிப்பூவாள் செய்யப்பட்ட கசாயத்தை கொடுக்கிறார்கள். துருக்கி, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உணவு செரிமானத்திற்கு அண்ணாச்சி பூ அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். வாந்தி, குமட்டல், வலிப்பு, தன்மை போன்ற அனைத்தையும் தடுத்து உங்கள் நரம்பு பிரச்சனைகளை குணப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க அண்ணாச்சி பூ உதவுகிறது.

எதிர்ப்பு பண்பு

அன்னாசிப் பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொள்ளும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவியாக இருக்கிறது. நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.

மேலும் படிக்க – கொரோனா வைரஸின் தற்போதைய நிலை..!

அண்ணாச்சி பூவின் எண்ணெய்

அண்ணாச்சி பூக்களின் மூலமாக எண்ணெய்களையும் தயாரித்து வருகிறார்கள் இதை நம் சருமத்தில் பயன்படுத்துவதன் மூலமாக சரும அலர்ஜி அனைத்தும் தீர்கிறது. உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளின் வலுவாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், ஃபோனிகுலின், லிமோனீன், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் உள்ளன. எனவே நாம் அறிந்திராத ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள இதை உணவில் சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

இப்போது இருக்கும் காலத்தில் ஏராளமான தொற்றுகள் மனிதர்களை தாக்கி வருகிறது. இது அனைத்தையும் செயலிழக்க செய்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்து இது போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன