பெண்களுக்கான அந்த நாட்கள் நிவாரணி

  • by

பெண்களுக்கு  இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்று மாதவிடாய். இது குறித்து முறையான புரிதல் இருக்கும் பொழுது பெண்கள் இதை இன்றைய நிலையில் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பூப்பெய்தி காலச் சுழற்சியை அறிந்து கொள்கின்றனர். 

மாதவிடாய்: 

உடலில்  கருமுட்டையானது 28 நாட்களுக்கு  ஏற்படும் முதிர்ச்சி காரணமாக இந்த மாதவிடாய் சுழற்சியானது ஏற்படுகின்றது. சரியான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெண்கள் தங்கள் உடல் நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்கின்றனர். 

மகளிர் நலன்

மாதவிடாய்  காலத்தில் கருமுட்டையானது முதிர்ச்சி அடைந்து  உதிரப்போக்காக வெளியேறும். அப்பொழுது கருப்பையானது சுருங்கி விரியும் அந்த நேரத்தில் வலியானது பெண்களுக்கு ஏற்படும் சிலருக்கு வலியை தாங்கி கொள்ள முடியும் சிலருக்கு ஏற்படும்  வலியானது மிகுந்த சிரமத்தை கொடுக்கும். அப்பொழுது வெந்தயம் ஊரவைத்து சாப்பிட கொடுப்பார்கள். உளுந்த கஞ்சி அல்லது உளுந்து சார்ந்த உணவுகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. 

மேலும் படிக்க: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை போக்கும் வழிகள்.!

ஓய்வு: 

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஓய்வு எடுப்பது சிறந்த ஒன்றாகும். முடிந்த அளவிற்கு வேலைப்பளு குறைத்து கொண்டு  ஓய்வு எடுக்க வேண்டும்.. அதிக மன அழுத்தம் தரும் எந்த ஒன்றையும் பற்றி யோசிக்க கூடாது. சரியாக பசித்து சாப்பிட்டு வர வேண்டும். 

உடலின் வலிமையாக வைத்திருக்க வேண்டும். 

 மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழ சித்தர்கள் கொடுத்த அருமருந்தை சாப்பிட்டு வரலாம். 

மகளிர்

. அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் சாப்பிட்டால் தள்ளாடும் வயதுக்காரரும் தகுதித்தம் ஆடுவார் என்பது வழக்கில் உள்ளது.  

கடுக்காயானது  நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர். பெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கச் செய்யும். தேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் ஒன்றாகும். 

மேலும் படிக்க: இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

கடுக்காய் நீரினை   மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வர  உடலில் ஏற்படும் வெப்பம் கட்டுக்குள் வரும். வலி நிவாரணி  ஆகும். உடலில் உள்ள கழிவை அகற்றும். கருப்பையில் உள்ள கோளாறுகளைப் போக்கும். ஆரோக்யம் பெருகச் செய்யும்.  ஒழுங்கற்ற மாதவிடாய் சிக்கலைப் போக்கும்.  வெந்தயத்தை ஊரவைத்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன