சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இளநீர்..!

people with diabetes can drink tender coconut

இயற்கை பானங்களில் மிக ஆரோக்கியமான பானமாக கருதப்படுவது இளநீர் இது குடிப்பதன் மூலமாக நம் உடல் குளிர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கையாகவே சர்க்கரை சுவை இதில் இருப்பதினால் சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை அருந்தலாமா வேண்டாமா என்ற கேள்விகள் அவர்கள் மனதில் ஊடுருவுகிறது. இதற்கான தீர்வு இந்த பதிவில் பார்க்கலாம்.

இளநீரில் தேங்காயின் நன்மைகள் அதிகமாக இருக்கிறது. இது ஒரு இயற்கை பானமாகும் இதில் எந்த ஒரு செயற்கையான பொருள்கள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை கலக்காமல் இயற்கை முறையில் உருவாவதினால் இதிலிருக்கும் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீ,சு இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அடிப்படை அமினோ அமிலங்கள் உடன் பொட்டாசியம் மற்றும் சோயா ஆகிய இரண்டு அத்தியாவசிய சத்துக்கள் இருப்பதினால் இதை பெரும்பாலானவர்கள் வாங்கி அருந்துகிறார்கள்.

மேலும் படிக்க – தூங்குவதற்கான எண்ணங்கள் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளதா..!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா வேண்டாமா என்று கேட்டறிந்த போது பல மருத்துவர்கள் இதை குடிக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்காக செய்யப்பட்ட ஆய்வில் சர்க்கரை நோயுள்ளவர்கள் இளநீர் குடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதி அளித்துள்ளார் ஆனால் நாம் இதை சரியான அளவே உட்கொள்ள வேண்டும். இது சர்க்கரை நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் இளநீரை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்வதே நல்லது.

மேலும் படிக்க – அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்.!

இளநீர் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி நமது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மோசமான ரத்த ஓட்டத்தில் பாதிப்படைகின்றனர் இதனால் அவர்கள் ஏகப்பட்ட பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் இளநீர் குடிப்பது மூலம் உங்கள் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதை தவிர்த்து உங்களின் சிறுநீரக பிரச்சனை, உணர்வின்மை, மங்கலான பார்வை போன்ற அனைத்திற்கும் இளநீர் ஒரு தீர்வாக இருக்கிறது. எனவே இளநீரை தினமும் 250 மில்லி குடித்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் உங்கள் உள்ளுறுப்புகளை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன