ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.!

people suffering from asthma should avoid these food habits

ஆஸ்துமா என்பது சுவாசப் பிரச்சினையாகும். நாம் எப்போது மாசற்ற காற்று மற்றும் நமக்கு ஏற்றுக் கொள்ளாதவைகளை சுவாசிக்கும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது, இதனால் நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். இந்த பிரச்சனையை நாம் சரியான முறையில் எதிர்கொண்டால் இதிலிருந்து நாம் விடுதலையாக முடியும்.

ஆஸ்துமா உள்ளவர்கள், தங்களைச் சுற்றி உங்கள் பொருட்கள் அனைத்தையும் சுத்தமாக வைப்பது நல்லது ஏனென்றால் இதில் இருக்கும் அழுக்குகள் உங்கள் சுவாசப் பையை பாதிப்படைய செய்து  ஆஸ்துமா பிரச்சனையை அதிகரிக்கிறது. ஆஸ்துமா என்பது சுவாசத்தினால் மட்டும் வருவதல்ல நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளிலும் இந்த பிரச்சினை வருகிறது.

மேலும் படிக்க – உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

ஆஸ்துமா உள்ளவர்கள் பால் பொருட்களினால் உருவான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முட்டை, கோதுமை மற்றும் சிட்ரஸ் பழங்கள் ஆத்துமாவைத் தூண்டவுள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது இல்லை எனில் உங்களுக்கு இருமல், ஜலதோஷம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு ஆஸ்துமா தாக்கம் அதிகரித்து விடும்.

நட்ஸ், பாஸ்ட்புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆஸ்துமாவை அதிகரித்துவிடும் எனவே இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. நட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு தான் ஆனால் இது ஆஸ்துமாவை  தூண்டிவிடும் எனவே இதை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

எனவே ஆஸ்துமா நோயாளிகள் ஒரு குழந்தையை போல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் இல்லையெனில் அவர்களே தங்களை மென்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று சுவாசிப்பது அதில் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் பல இன்னலுக்கு ஆளாவார்கள் எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து நமது உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன