ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்..!

  • by
people should cooperate to lockdown

தமிழகத்தில் இன்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் இன்று வரை 900 திற்க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் கிட்டத்தட்ட ஆயிரத்து 128 பேருக்கும் மேல் குணமாகி வீடு திரும்பி உள்ளார்கள். இன்றுவரை தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளார்கள், இருந்தும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு ஊரங்கு நீட்டிக்க படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அதற்கு தயாராக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதா என்பதைப் எந்த அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இருந்தும் மக்கள் மனநிலையை மாற்றும் நோக்கத்தில் இதுபோன்ற செய்திகள் கசியத் தொடங்கி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு எப்படி ஊரடங்கை நீட்டித்தார்கலோ அதே வகையில் இந்த வாரமும் நீட்டிக்க உள்ளார்கள். இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். அதைத் தவிர்த்து அவர்களின் மனநிலையையும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – ஊரடங்கு நேரத்தில் உடல்எடை கட்டுப்பாடு அவசியமானது

நாட்டின் நன்மை

ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இதற்கு மக்களாகிய நாம்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வைரஸ் தொற்றின் எண்ணிக்கை குறைந்தது இதனால் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். இது அனைத்திற்கும் காரணம் அங்கே வாழும் மக்கள் ஊரடங்கை சரியாக பின்தொடர்ந்து வந்தார்கள். ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் ஊரடங்கை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலையாகி உள்ளார்கள், அதேபோல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.

மக்களின் அலட்சியம்

மக்கள் அலட்சியமாக இதுபோல் செயல்பட்டாள் ஊரடங்கை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறது. அதே போல் கிரீன் ஜோனில் இருக்கும் மாவட்டங்களை இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. எனவே இந்த ஊரடங்கையாவது மக்கள் அலட்சியப்படுத்தாமல் சரியாக பின் தொடர வேண்டும். இதன் மூலமாக உங்கள் மாவட்டமும் கிரீன் ஜோனுக்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

மேலும் படிக்க – திராட்சை வினிகர் தெரியுங்களா சத்துக்கள் நிறைந்தது!

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டு மென்றால் மக்களாகிய நாம் இனி வரப்போகும் நாட்களில் ஊரடங்கை சரியாக பின் தொடர வேண்டும். அதேபோல் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர்களுக்கு இடைஞ்சல்களை கொடுக்காமல் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன