பேருந்துகளை நிறுத்தியதால் பொதுமக்கள் அவதி..!

  • by
people are suffering because of bus strike

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காக மார்ச் 31ம் தேதி வரை ஏராளமான தடைகளை பிறப்பித்தார்கள், ஆனால் இந்தத் தடை ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைக்காட்சியில் வாயிலாக எல்லோருக்கும் தெரியப்படுத்தினார். இதன் மூலமாக மக்கள் இருக்கும் இடத்திலிருந்து பெரிய அவதிக்குள்ளாகி உள்ளார்கள்.

வேலை செய்யும் மக்கள்

பிழைப்புக்காக தங்கள் சொந்த கிராமத்தை விட்டு அருகிலுள்ள நகரத்திற்கு வேலைக்கு வந்த அனைத்து தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பதித்துள்ளார்கள். அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்..!

உணவுத் தட்டுப்பாடு

தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கான உணவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எதுவும் இவர்களுக்கு கிடையாது. ஏனென்றால் தமிழக அரசு அடையாள அட்டையை உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கும். எனவே இவர்கள் சொந்த ஊரில் கிடைக்கக்கூடிய உதவித்தொகை இவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. எனவே அவர்கள் கையிருப்பை வைத்து தான் இந்த 21 நாட்களை கடக்க வேண்டும். அப்படி இடையே அவர்களின் சேமிப்புகள் தீர்ந்து விட்டால் இவர்களின் நிலை மோசமாக மாறிவிடும்.

போக்குவரத்து தடை

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் போக்குவரத்து தடையை அமல் படுத்தி உள்ளார்கள். எனவே எவரும் தங்கள் இருக்கும் இடத்தை விட்டு மற்ற இடத்திற்கு செல்ல முடியாது இதனால் சென்னை கோயம்பேடு மட்டுமல்லாமல் மதுரையில் இருக்கும் பெரியார் பஸ் ஸ்டாண்ட், கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் என எல்லா இடத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்டத்தில் இருப்பவர் எவரேனும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் மற்ற அனைவருக்கும் பரவி விடும் இதன் விளைவுகளை எண்ணாமல் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கிராமத்திற்கு செல்கிறார்.

மேலும் படிக்க – சாப் ஸ்பார்கில் சரும கேசத்திற்கான சாம்பூ பார் வாங்கலாம்!

பாதிப்புகள் அதிகரிக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் இரண்டே வாரங்களில் எண்ணிப் பார்க்காத அளவில் அதிகரிக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது. எனவே இந்த எண்ணிக்கையை தடுப்பது நம் கையில் இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அவரவர் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து வைரஸ் தொற்றை மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் இந்த சூழ்நிலையை வெளியே வருவதன் மூலம் உங்களையும் இந்த வைரஸ் தொற்று தாக்கிவிடும் எனவே இதை கருத்தில் கொண்டு, எங்கும் செல்லாமல் நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள். தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் எப்போதும் திறந்திருக்கும் எனவே குறைந்த விலையில் கிடைக்கும் இந்த உணவுகளை உண்டு பாதுகாப்பாக இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன