கொரோனாவுக்கு மீண்டும் பிசிஆர் சோதனை..!

  • by
pcr testing is used again to check corona

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக நாம் முதலில் பயன்படுத்தி வந்த சோதனை முறை தான் இந்த பிசிஆர். ஆனால் இந்த சோதனையின் முடிவு வருவதற்கு ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை தேவைப்படும், இதனால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை தடுப்பதற்கு ராபிட்கிட் என்ற சிறிய வகை சோதனைக் கருவியை நாம் பயன்படுத்தினோம், ஆனால் மத்திய அரசு இந்த ராபிட்கிட்டை இப்போது தடை செய்துள்ளது.

ராபிட்கிட்

சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராபிட்கிட் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் கொரோனாவின் பரிசோதனை முடிவை அளித்துள்ளது. ஆனால் ராஜஸ்தான் மருத்துவர்கள் செய்யப்பட்ட ஆய்வில் இந்த ராபிட் மூலமாக செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் தவறாக காண்பிக்கிறது என்றுள்ளார்கள். இதனால் கிட்டத்தட்ட 9 சதவீதம் மட்டுமே இது செயல்படுகிறது, அதைத் தவிர்த்து இதன் முடிவுகள் அனைத்தும் தவறாக உள்ளது என்றார்கள். இதனால் மத்திய அரசு இந்த ராபிட்கிட்டை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் படிக்க – ஊரடங்குக்குப்பின் இயற்கையோடு இணைந்த வாழ்வு

பிசிஆர் சோதனை

ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிசிஆர் பரிசோதனையை செய்து வந்தார்கள். ஆனால் பரிசோதனைக்கான முடிவு வருவதற்கு அதிக அளவிலான நேரத்தை எடுப்பதினால் இந்த முறையை தற்காலிகமாக கைவிட்டார்கள். ஆனால் இப்போது ராபிட்கிட் சரியான முடிவைத் தராததினால் மீண்டும் பிசிஆர் முறையையே பின் தொடர வேண்டும் என மத்திய அரசு அனைத்து சுகாதார துறைக்கு அறிவுரை கூறியுள்ளது. இதனால் பரிசோதனை செய்யும் எண்ணிக்கைகள் குறைய வாய்ப்புள்ளது, அதை தவிர்த்து நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இருந்தும் பிசிஆர் வழிமுறை தெளிவான முறையாகும். இதனால் வைரஸ் தொற்று உள்ளவர்களை நாம் எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

தமிழ்நாட்டில் பிசிஆர்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவிலான பரிசோதனைகளை செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அதை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதிலும் தமிழகம் முதலில் உள்ளது. எனவே பிசிஆர் சோதனை முறை இவர்களுக்கு சற்று பின்னடைவை தந்தாலும் தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து மருத்துவர்களும் மிக வேகமாக இந்த பரிசோதனையை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – லாக்டவுனில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்

மே மாதம் 10ஆம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறையும் என தமிழக சுகாதாரத்துறை தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளது. இதைத் தவிர்த்து மே மாத இறுதிக்குள் அனைத்து நோயாளிகளும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருப்பார்கள் என நம்பிக்கையும் அளித்துள்ளது. இதற்கு மக்களாகிய நாமும் ஒத்துழைத்து சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிகளை பின்தொடர்ந்து வாழவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன