விகடன் விருதை புறகணித்து புதிய பாதை எடுத்த பார்த்திபன்!

  • by

இராதகிருஷ்ணன் பார்த்திபன் என்ற ஒரு நடிகரை தெரியாது என்று சினிமா மீது ஆர்வம் கொண்ட எவரும் செல்ல முடியாது. ஆம் அவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் புதிய பாதையாக இருக்கும்.

 முதல் படமான புதியபாதை – தேசிய விருது 

1989 ஆம் ஆண்டு புதிய பாதை என்ற  தனது முதல் திரைப்படத்திற்காக சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதினை பெற்றார். இயக்குனராகவும் நடிகராகவும் அந்த திரைப்படத்தில் அவரது பரிமாணம் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெயர் சொல்லக்கூடிய வகையில் பல படங்களில் நடித்திருந்தாலும் “அழகி”பார்த்திபனின் வாழ்நாளில் மற்றுமொரு சிறந்த படம் என்றே கூறலாம். பன்முகத் திறமை படைத்த ஒரு நடிகர், இயக்குனர் பார்த்திபன். இவர் எழுதிய கிறுக்கல்கள் என்ற கவிதை நூல் கவிதை சாம்ராஜ்யத்தில் ஒரு வித்தியாச முயற்சி. எனவே வித்தியாசமாக தன் சிந்தனையை சரியாகப் பயன்படுத்தும் பார்த்திபன் அவர்களின் அடுத்த ஒரு முயற்சிதான் ஒத்த செருப்பு சைஸ் 7,

ஒத்த செருப்பு சைஸ் 7

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் வெளிவந்த படம் ஒத்த செருப்பு சைஸ்7. இது ஒரு உளவியல் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தை பார்த்திபன் அவர்கள் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். பின்னணி இசை சத்யா அவர்களும், ஒரு பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் அவர்களும் இசை அமைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை பார்த்திபன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பயாஸ்கோப் ப்ரோமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை இவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்ததற்காக ஆசிய சாதனைகள் புத்தகத்திலும், இந்திய சாதனைகள் புத்தகத்திலும் இத்திரைப்படம் இடம்பெற்றுள்ளது.


இந்த திரைப்படம் 30 ஆகஸ்ட் 2019 அன்று சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் செப்டம்பர் 20ஆம் தேதி 2019 அன்று திரையிடப்பட்டது.  இத்திரைப்படத்தை மதிப்பாய்வு செய்த சென்னை விஷன் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு அரிய முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் இது ஒரே ஒருவரின் முயற்சி கொண்டு எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் முழுவதும் ஒரே ஒரு நபரைக் கொண்டு நகர்கிறது படம் முழுவதும் நாம் வேறு எந்த முகங்களையும் பார்க்க முடியாது . பார்த்திபன் அவர்கள் இந்த கதையை மிக தைரியமாக இந்திய சினிமா உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று கூறலாம். சினிமாவை நேசிக்கும் பலரின் வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம்.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

சினிமாவின் மீது ஒரு கலைஞனுக்கு எவ்வளவு ஆர்வமும் பிணைப்பும் இருந்தால், “ஒத்த செருப்பு சைஸ் 7” மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும் என்று எண்ணி பார்க்க தோன்றுகிறது. ஆஸ்கார் எலிஜிபிள் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் இந்த ஒத்த செருப்பு படம், விகடனின் நாமினி லிஸ்டில் கூட இடம்பெறவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி

விகிடன் விழாவில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய விதம் 

விகடன் விருது விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் அவர்கள் தனக்கு விருது கிடைக்காதது பற்றி மிக நாசுக்காக எடுத்துக் கூறியிருப்பது எல்லோராலும் வரவேற்கப்பட்டது. அவர் கூறியதாவது, ஆஸ்கார் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் விகடனில் நாமினி லிஸ்டில் கூட இடம்பெறவில்லை என்பதுதான்.  மேலும் அதில் அவர் புதியபாதை படம் எடுத்தபோது விகடன் அப்போது அவருக்கு உதவி செய்ததை பற்றியும், இன்னும் நன்றிமறக்கவில்லை என்பதை பற்றியும் தெரிவித்திருந்தார். மேலும் அதன்பிறகு அவரது முகநூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஆஸ்கார் பிலிம்ஸ் லிஸ்டில் இருந்த ஒத்த செருப்பு விகடனின் நாமினி லிஸ்டில் இல்லை. அதுவே பெரிது மகிழ்ச்சி. விகடன் குறித்து பேசியதில் 2 தேசிய விருது என சொன்னது இதுவரை நான் பெற்றது ஆனால் அது ஒத்த செருப்பு என்ற படத்துக்கு இல்லை என்றும், இப்போதுதான் ஆஸ்கார் நாமினேஷன் விண்ணப்பமே வருகிறது என்றும், தகுதியான படைப்பு என்பதால் இயன்றதை முயலப் போகிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் முழுமையாக மக்களை போய் சேர்வதற்காக உங்களது லிங்கை பயன்படுத்துகிறேன் என்று விகடனில் காட்சிப் படுத்தப் பட்டிருந்த அந்த வீடியோவின் லிங்கை ஷேர் செய்திருக்கிறார். 

மேலும் படிக்க – இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

ரசிகர்கள் கொண்டாடிய பிறகு விகடன் ஸ்பெஷல் மென்ஷன் என்ற பெயரில் வரைந்து கொடுத்தது இன்செல் செய்வதாய் இருந்ததாகவும், இனி வாழ்நாளில் விகடனின் விருதே வேண்டாம் என்றும், ஒரு கலைஞனின் ஆதங்கம், விருதுகள்  மீதான அவனின் மரியாதை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பதிவிட்ட பிறகு முகநூலில் அவருக்கு பல வரவேற்பும் ஆதரவாளர்களும் பெருகி உள்ளனர் என்றே கூறலாம். எங்கோ இருக்கும் கலைஞர்கள் நம் படைப்பாளியின் முயற்சியை கௌரவிக்கும் போது,முதலில் கௌரவிக்க வேண்டிய நாம் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது ” தூங்குவது போல் நடிப்பவரை எவ்வாறு எழுப்ப முடியும் என்பது போல் இருக்கிறது. அந்த கலைஞனின் படைப்பு நிச்சயமாக போய் சேர வேண்டிய இடத்தில் போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன் நன்றிமறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன