நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பஞ்சாமிர்தம்..!

  • by
panchamirtham helps in boosting immune power

இந்துக்கள் வழிபாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரசாதம் தான் இந்த பஞ்சாமிர்தம். சாதாரண பஞ்சாமிரதத்திற்கும், கேரளாவில் தயாரிக்கப்படும் பஞ்சாமிரதத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. பால் பொருட்கள் மூலமாக செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை தான் இந்தியாவில் பல பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்த்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கும் இந்த பஞ்சாமிர்தத்தையே முதன்மையாக பயன்படுத்துகிறார்கள். இதை அபிஷேகம் செய்வதை தவிர்த்து இதை பிரசாதமாக சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏராளமான எதிர்ப்பு சக்திகள் உண்டாகிறது. எனவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பஞ்சாமிர்தத்தை வீட்டிலேயே செய்து பயன்பெறுங்கள்.

பஞ்சாமிர்தம்

ஐந்து விதமான அமிர்தத்தை சேர்ப்பதிலேயே இதற்கு பஞ்சாமிர்தம் என்ற பெயர் வந்தது. இதில் பால், தயிர், நெய், சர்க்கரை மற்றும் தேன் போன்றவற்றை முதன்மையாக சேர்க்கிறார்கள். ஒரு சிலர் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை அல்லது நாட்டுச் சர்க்கரையையும் பயன்படுத்துவார்கள். இதில் பாதாம் மற்றும் துளசி இலையையும் சேர்க்கலாம். பாலை நன்கு கொதிக்க வைத்து அதில் நெய், தேன், சக்கரை மற்றும் தயிர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் துளசி இலைகளை தூவி அதை அப்படியே எடுத்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – இந்திய ராணுவம் கொரோனாவுக்கு எதிராகப் போராடத் தயாரா..!

ஆரோக்கியமான பிரசாதம்

பஞ்சாமிர்தத்தை சிறியவர்களுக்கு கொடுப்பதன் மூலமாக அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதைத் தவிர்த்து எல்லா வயதானவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க பஞ்சாமிர்தம் உதவுகிறது. பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கிறது. கூந்தல் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது. இதைத் தவிர்த்து உடலுறவுக்கு தேவையான ஆற்றலையும் மற்றும் வலிமையையும் தருகிறது.

ஆன்மிகப் பயன்

ஆன்மீகத்தின் கடவுளாக பார்க்கப்படும் கால்நடைதான் பசு. இதன் மூலமாக கிடைக்கப்படும் பால் அதிலிருந்து எடுக்கப்படும் நெய் மற்றும் தயிர் நமக்கு புனிதத்தை தருகிறது. பின் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது, சக்கரை மகிழ்ச்சி அளிக்கிறது, நெய் உங்களுக்கான அறிவை தருகிறது. இனிமே இது அனைத்தையும் ஒன்றிணைத்து சாப்பிடுவதன் மூலமாக நமது மனம் ஆன்மிக முறைப்படி வலிமை அடைகிறது.

மேலும் படிக்க – இந்தியா மூன்றாம் நிலையை எப்படி கட்டுப்படுத்தும்..!

கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் இந்த பஞ்சாமிர்தத்தை சிறுதுளி எடுப்பதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. எனவே இதை உங்கள் வீட்டில் அதிக அளவில் செய்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன