கீட்டோ Vs பேலியோ உணவு முறைகள் பயனளிக்கிறதா?

மனிதர்கள் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் மிகவும் பிரபலமடைந்து கொண்டு வருகின்றது. இந்த இரண்டு உணவு முறைகளிலும் சில ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் அவை அனுமதிக்கும் உணவுகளிலும், உடலில் அவற்றின் விளைவுகள் மற்றும் முக்கிய சுகாதார விளைவுகளிலும் வேறுபாடுகள் உள்ளன.

கீட்டோ உணவு ஒரு குறிப்பிட்ட சமநிலையான மேக்ரோனூட்ரியன்களை மட்டும் சாப்பிடுவதில் அதிக கவனம் செலுத்துகிறது. அங்கு உடல் ஆரோக்கியம் அல்லது எடை இழப்புக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது.

பேலியோ உணவு கற்காலத்தில் மனிதர்கள் சாப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துகிறது. உடல்நலம் அல்லது எடை இழப்புக்கான நவீன பதப்படுத்தப்பட்ட உணவுகளை அகற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள்.

கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் :-

பொதுவாக கீட்டோ மற்றும் பேலியோ உணவு முறைகள் உடல் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அகற்றுவதற்கும், உடல் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன.

மேலும் படிக்க-> குறைந்த கார்போஹைட்ரேட் உணவு மட்டும் போதுமா?

கீட்டோ உணவு :

கீட்டோ உணவு என்பது ஒரு ஆரோக்கியமான உணவு முறை இதில் கொழுப்பு, சில புரதம் மற்றும் குறைந்தபட்ச கார்போஹைட்ரேட்டுகளை கொண்டிருக்கும். மனித உடல் பொதுவாக கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. ஒரு நபருக்கு போதுமான கார்ப்ஸ் கிடைக்காதபோது, உடலானது கொழுப்பு மற்றும் சில புரதங்களை உடலில் சேமித்துள்ளதை பயன்படுத்தத் தொடங்கும்.

உண்மையான கீட்டோசிஸில், கல்லீரல் சேமிக்கப்பட்ட கொழுப்பை எடுத்து கீட்டோன்களாக மாற்றும், இது உடல் ஆற்றலுக்காக பயன்படுத்துகிறது. கீட்டோசிஸின் இந்த நிலையை அடைவது கீட்டோ உணவின் குறிக்கோளாக உள்ளது.

கெட்டோசிஸ் அதிகப்படியான கொழுப்பை இழக்க மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க ஒரு திறமையான வழியாகும் என்று சிலர் நம்புகிறார்கள்.

 • 71-81% கொழுப்பு உள்ள உணவுகள்
 • 6-11% கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகள்
 • 21-26% புரதம் உள்ள உணவுகள்

கீட்டோ உணவை மேற்கொள்ளும் ஒருவர் மேற்சொன்னவைகளில் குறிப்பிட்ட அளவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேலியோ உணவு :

பேலியோ உணவு என்பது பாலியோலிதிக் மனிதர்களால் சாப்பிட்ட உணவுகளை மையமாகக் கொண்ட ஒரு உணவுத் திட்டம். இதை கற்கால உணவு என்றும் அழைப்பதுண்டு.

இப்போதுள்ள நவீன உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு மாற்றாக இந்த உணவு உள்ளது. பேலியோ உணவைப் பின்தொடர எண்ணுவோர் பழங்கால மக்கள் உட்கொண்ட உணவு முறைக்கு மாற வேண்டும். மனித உடல் நவீன கால உணவு முறைகளுக்கு ஏற்றதாக இல்லை என்று சிலர் நம்புகிறார்கள்.

உணவுசார் நிபுணர்களின் கூற்றுப்படி, பால், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை தங்களின் உணவிலிருந்து நீக்குவதால் ஒரு நபரின் உடல் எடையை குறைக்கவும், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுவதாக ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

ஒரு சில ஆய்வுகளின் படி, பேலியோ உணவில் வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதற்கான நன்மைகள் உள்ளதாக முடிவுகள் கிடைத்துள்ளன. இருப்பினும், இதை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் :- ஒற்றுமைகள்

மேலும் படிக்க-> பேலியோ உணவு: உடல் எடை குறைக்குமா?

கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் பல சத்தான முழு உணவுகளை உட்கொள்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளை அகற்ற துணைபுரிகின்றன. இரண்டுமே குறைந்த கார்ப் உட்கொள்ளலை ஊக்குவிக்கிறது.

பருப்புகள் மற்றும் தானிய வகைகளை உட்கொள்வதை அனுமதிப்பதில்லை. அவை புரதத்திற்கான இறைச்சியை உட்கொள்ள அனுமதிக்கிறது. சில வகையான கொழுப்புகள் மற்றும் காய்கறிகளையும் பரிந்துரைக்கின்றன.

பேலியோ மற்றும் கீட்டோ உணவு முறைகள் பின்வருமாறு:

 • நட்ஸ்
 • கடல் உணவு
 • பதப்படுத்தப்படாத இறைச்சி
 • மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
 • ஆலிவ் எண்ணெய், வெண்ணெய்
 • முட்டை

கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் :- வேறுபாடுகள்

கீட்டோ மற்றும் பேலியோ உணவுகள் பல்வேறு உணவுகளை அகற்றுகின்றன.

 • கீட்டோ உணவு அதிக பழங்கள் உட்பட அதிக சர்க்கரை உணவுகளை விலக்குகிறது.
 • பேலியோ உணவு அதிக பழங்களையும் சில இயற்கை இனிப்புகளையும் அனுமதிக்கிறது.

காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் மற்றும் பால் ஆகியவற்றிற்கும் வெவ்வேறு முரண்கள் இந்த உணவு முறைகளில் உள்ளன.

பின்வருபவை கீட்டோ மற்றும் பேலியோ உணவுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

இனிப்பு மற்றும் சர்க்கரை :

கீட்டோ உணவு சில செயற்கை இனிப்புகளில் எந்த சர்க்கரையும் இல்லாத வரை அனுமதிக்கிறது.

பேலியோ உணவு தேன் மற்றும் சில சிரப் போன்ற இயற்கை சர்க்கரைகளை அனுமதிக்கிறது.

 • கீட்டோ: எந்த சர்க்கரைகளையும் அனுமதிக்காது, ஆனால் ஸ்டீவியா மற்றும் சுக்ரோலோஸ் போன்ற சில செயற்கை இனிப்புகளை அனுமதிக்கிறது.
 • பேலியோ: தேன், மேப்பிள் சிரப், மற்றும் தேங்காய் சர்க்கரை ஆகியவற்றை அனுமதிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி :

கீட்டோ உணவு இறைச்சியில் சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத வரை அவற்றை அனுமதிக்கிறது. பன்றி இறைச்சி போன்ற சில பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சர்க்கரை இருக்கலாம், எனவே இந்த உணவு முறையை பின்பற்றுவோர் அதில் உள்ள லேபிள்களைப் படிக்க வேண்டும்.


பேலியோ உணவு பொதுவாக பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விலக்குகிறது, ஏனெனில் இவை நவீன உணவு பதப்படுத்தும் நுட்பங்களை கொண்டுள்ளது.

 • கீட்டோ: சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத எந்த இறைச்சியையும் அனுமதிக்கிறது.
 • பேலியோ: இயற்கை உணவில் கவனம் செலுத்துகிறது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி அனுமதிப்பதில்லை.

மாவுச்சத்துள்ள பச்சை காய்கறிகள் :

கீட்டோ உணவில் “மாவுச்சத்துள்ள காய்கறிகள்” அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் அவை கீட்டோசிஸை குறுக்கிடக்கூடும், மேலும் ஒரு நபர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த கார்போஹைட்ரேட்டுகளை விட அதிகமாக உட்கொள்ளக்கூடும்.சில ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் அதிக ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் உள்ளது.

பேலியோ உணவு சத்தான காய்கறிகளில் பலவற்றை மிதமாக அனுமதிக்கிறது. பேலியோ உணவைப் பின்பற்றும் ஒருவர் இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட் போன்ற பூமிக்கு அடியில் வளரும் உணவுகளை மிதமாக சாப்பிடலாம், ஆனால் குறைந்த கார்ப் காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பால் பொருட்கள் :

பாலியோலிதிக் மக்கள் பால் பொருட்களை உட்கொள்ளாததால் பேலியோ உணவு அனைத்து பால் பொருட்களையும் விலக்குகிறது. ஆனால் சீஸ், கிரீம் அல்லது பிற பால் கொழுப்பு பொருட்களை உட்கொள்ள அனுமதிக்காது.

இருப்பினும், பேலியோ உணவில் உள்ளவர்கள் இனிக்காத பால், தேங்காய் பால் மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்ளலாம்.

 • கீட்டோ: சர்க்கரை இல்லா பாலை அனுமதிக்கிறது, அதிக கொழுப்பு மற்றும் அதிக புரத வகைகளையும் அனுமதிக்கிறது.
 • பேலியோ: பால் பொருட்களை விலக்குகிறது.

மேலும் படிக்க-> நிம்மதி இல்லையா? இதை படியுங்கள்!

பக்க விளைவுகள் :-

 • இதய நோய், நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால பிரச்சனைகளை கொண்டுள்ளவர்கள் இதை நிச்சயம் தவிர்ப்பது நல்லது.
 • மக்கள் உண்ணும் முறைக்கு புதிய மற்றும் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கருத்தில் கொள்ளும் எவரும் முதலில் தங்கள் மருத்துவரிடம் இதை சரிபார்க்க வேண்டும்.
 • கீட்டோ காய்ச்சலின் அறிகுறிகளில் தூக்கமின்மை, தலைவலி, குமட்டல், மலச்சிக்கல், சோம்பல், மன மந்தநிலை, மற்றும் உடற்பயிற்சியின் செயல்திறன் குறைதல், ஆகியவை ஏற்படும்.
 • இந்த உணவு முறைகளை பின்பற்றுபவர்கள் தங்களுக்கு உள்ள குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக தங்களது அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை இந்த உணவு முறைகள் மூலம் பூர்த்தி செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • கீட்டோ உணவைப் பின்பற்றுபவர்கள் கீட்டோசிஸ் தொடர்பான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். கீட்டோ தோல் சொறி மற்றும் கீட்டோ காய்ச்சல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன