வெகு விரைவில் பெரிய திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!

  • by
padian stores mullai to act in silver screen

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் அசத்தி வரும் சித்ரா இப்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார். கதிர் முல்லை ஜோடி பலராலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

தொகுப்பாளராக அறிமுகம் 

இவர் மே 2, 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் தனது இளநிலை படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் முதுகலை படிப்பையும் சென்னையிலேயே முடித்திருக்கும் இவர் முதன்முதலாக தொகுப்பாளராக மக்கள் டிவியில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களை இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். 

மேலும் படிக்க – அட்டு ஆனந்தியான “அறந்தாங்கி நிஷா”.!

அதன்பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மன்னன் மகள் சீரியலில் நடித்தார்.  பல திறமைகளைக் கொண்ட வி ஜே சித்ரா நடனம், பாடல், காமெடி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்  சீரியலில் இவருக்கும் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். குமரன் மற்றும் சித்ரா இருவருக்கும் இடையில் சில சலசலப்புகள் இருந்தாலும் இவர்கள் நடிப்பில் அதை காண்பிப்பதில்லை.

பல்வேறு நிகழ்ச்சி பயணங்கள் 

2013 ஆம் ஆண்டு தனது கலையுலக வாழ்க்கையை துவங்கிய சித்ரா, 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி அண்லிமிடெட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். 

2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜீ டிவியில் ஒளிபரப்பான அஞ்சரை பெட்டி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 2, 2016 முதல் 17 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற டார்லிங் டார்லிங், டான்ஸ் ஜோடி டான்ஸ் நண்பேண்டா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுமட்டுமல்லாமல் சரவணன் மீனாட்சி சீசன் 3 -யில் இவர் சிறப்பு விருந்தினராக நடித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜீ டான்ஸ் லீக் என்ற நடனம் சார்ந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழில் பங்கேற்றிருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி என்ற தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆரம்பக்கட்டத்தில் மக்கள் டிவியில் தொடங்கிய இவரது இந்த தொகுப்பாளர் பயணம் பல முயற்சிகளுக்குப் பின் 2019ஆம் ஆண்டு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரின் மூலம் வெற்றி பெற்று இருக்கிறது என்றே கூற வேண்டும். 

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

போட்டோ ஷூட் 

தற்போது வி ஜே  சித்ரா அவர்கள் அதிகமான புகைப்படங்களை எடுத்து வருகிறார். ஒருவேளை இது சினிமாவில் நடிப்பதற்காக களத்தில் இறங்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

தற்போது அவர் இன்ஸ்டகிரம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. கருப்பு நிற வெஸ்டன் உடையில் மிக அழகாக தேவதை போல் காட்சியளிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் பழைய படங்களின் கதாநாயகிகள் போல மேக் அப் போட்டு ஒரு போட்டோ ஷூட் நடத்திமுடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் போடும் புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள் ஏராளம். இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றே கூறலாம். இவரது ஹேர்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேலும் இவர் போடும் மேக்கப் ஆகியவை பெண்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. 

மிக விரைவில் இவர் பெரிய திரையில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் சின்னத்திரையில் அறிமுகமான பலர் பெரிய திரையில் சாதித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா  போன்றவர்களின் வரிசையில் இப்போது பாண்டியன் ஸ்டோர் சித்ராவும் களமிறங்கப் போகிறார். அதற்காகவே இந்த போட்டோ ஷூட் களை அவர் நடத்தி வருகிறார் என பட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றமளிக்கும் சித்ரா சினிமாவில் ஜெயித்தால் அது ஒரு சாமானியனுக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். பெரிய திரையில் சாதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன