நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மஞ்சள் பானம்..!

  • by
orange,lemon and turmeric drink to build immunity

உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தான் உங்கள் ஆரோக்கியம் அமைகிறது. யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ அவர்களை மிக எளிதில் வியாதிகள் மற்றும் நோய்கள் தாக்குகிறது. இதன் மூலமாக உங்கள் இளமை மற்றும் முதுமை காலம் மருந்து, மாத்திரைகளுக்கு இடையே சென்று விடும். எனவே உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வைத்துக் கொள்ள இந்த பானத்தை அருந்துங்கள்.

ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை

ஆரஞ்சு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் பானத்தை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைத் தவிர்த்து அதீத நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். ஆரஞ்சு பழச் சாறையும், எலுமிச்சை சாறையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மஞ்சள்தூள் சிறிதளவு கலந்து சற்று தண்ணீர் கலந்து தினமும் காலையில் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ஆரோக்கியமான முறையில் பொதுத் தேர்வை எப்படி எழுதுவது..!

மருத்துவ குணங்கள்

மஞ்சளில் ஏராளமான எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது உங்கள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும், உங்கள் ஆயுள் காலத்தை அதிகரிக்கும், செரிமானத்திற்கு உதவும், உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் குறைக்கும் பண்பை கொண்டது தான் மஞ்சள்.

சிட்ரிக் பழங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட இந்த பழத்தினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. புற்று நோய் உண்டாக்கும் செல்களை தடுக்கும் பண்பு ஆரஞ்சில் உண்டு. அதே போல் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமமாக வைத்துக் கொள்கிறது. எலுமிச்சை உங்கள் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுகிறது.

மேலும் படிக்க – யோகி ராம் தேவ் குருவின் கொரானா தடுப்பு அறிவிப்புகள்

கலவை பானம்

இது மூன்றும் சேர்த்து செய்யப்படும் பானத்தில் உங்களுக்கு தேவை என்றால் தேன் கலந்து குடிக்கலாம். இதை தினமும் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகும், இரத்தசோகை உள்ளவர்களை குணப்படுத்தும். எனவே அதிக ஆரோக்கிய குணத்தை கொண்ட இந்த பானத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்கும் பரவு வருவதினால் அதைத் தடுக்கும் ஒரே வழி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான். எனவே இதைக் கருத்தில் கொண்டு இது போன்ற இயற்கை குணங்களைக் கொண்ட பழங்களை அருந்தி எல்லா தொற்றுகளில் இருந்து விலகியிருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன