உங்கள் அழகை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்..!

  • by
orange face mask to improve your beauty

ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகள் ஆப்பிள் ஜூஸ்ற்க்கு பதிலாக இப்போது ஆரஞ்சு ஜூஸை வாங்கி அருந்துகிறார்கள். இதற்குக்காரணம் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் நமது சருமம் பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே சினிமா துறையில் உள்ளவர்கள் ஆரஞ்சு பழங்களை அதிகமாக உண்கிறார்கள். நீங்களும் அவர்களைப் போல் எப்போதும் சிகப்பாகவும் பலபலவென்று இருக்க வேண்டும் என்றால் தினமும் ஆரஞ்சு பழத்தை கொண்டு இது போன்ற ஃபேஸ் பேக் போடுங்க.

சரும அழகை அதிகரிக்கும்

ஆரஞ்ச் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதான் மூலம் நம் சருமத்தின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சருமத்தை பாதிக்காமல் எப்போதும் பாதுகாக்கும்.

மேலும் படிக்க – மாடர் மங்கையரே லெகிங்ஸின் டிரெண்டிங் பார்போமா

ஆரஞ்சு தேன் மஞ்சள்

ஆரஞ்சு சாறுடன், சிறு துளி தேன் மற்றும் மஞ்சள் கலந்து அதை நன்கு குழைத்து உங்கள் சருமத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அதை குளிர்ந்த நீரால் கழுவி மென்மையாக தொடைக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

ஆரஞ்சு மற்றும் தயிர்

ஆரஞ்சு தோலினை உரித்து அதை வெயிலில் நன்கு காயவைத்து அதை பொடியாக்கி அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு கழுவினால் உங்கள் முகம் பொலிவாகும். அதைத் தவிர்த்து இது உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளித்து உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – சருமத்தில் ஏற்படும் வெண் படைகளை போக்குவதற்கான எளிய வழிகள்.!

பால் மற்றும் ஆரஞ்சு, பருக்களைப் போக்கும்

உங்கள் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் என எதுவாக இருந்தாலும் அதை அகற்றுவதற்கு நாம் சிறிதளவு பால் மற்றும் ஆரஞ்சு பவுடரை ஒன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு அந்த மாஸ்க் நன்கு காய்ந்த பிறகு நம் முகத்தை நீர் கொண்டு கழுவ வேண்டும். இதன் மூலமாக உங்கள் முகம் அழகாகும்.

அரேஞ்ச், சந்தனம், ரோஸ் வாட்டர்

ஆரஞ்சு பொடியையும் சந்தன பொடியையும் ஒன்றாக சேர்த்து அதில் ரோஸ் வாட்டரை ஊற்றி நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும். அதை நம் சருமத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலமாக உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க – முகத்தில் ஏற்படுவதை போல் உச்சந்தலையிலும் பருக்கள் உண்டாகும்.!

எனவே இத்தகைய குணங்களைக் கொண்ட ஆரஞ்சு பழம் மற்றும் அதன் தோல்களை கொண்டு உங்கள் சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் உங்கள் நிறத்தை அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இனிமேல் ஆரஞ்சு தோலை தூக்கி எறியாமல் இது போன்ற வகைகளில் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன