காற்று மாசை குறைக்கும் வெங்காயம் பயன்படுத்துங்க

  • by

கொரானா வைரஸ் அனைவருக்கும் பேராபத்தாக இருக்கின்றது. இவ்வேளையில் நாம் முக்கியமாக இங்கு கண்காணிக்க வேண்டியது.  நோய் தொற்று காற்று மூலம் பரவுகின்றது. உங்கள் வீடோ அலுவலகமோ அங்கு காற்றினால் ஏற்படும் மாசை நாம் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 

காற்று மாசு தீர்க்கும் நீக்கும் வெங்காயம்:

விட்டை சுத்தம் செய்யலாம் ஆனால் காற்று மாசை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்வி என்பது அனைவருக்கும் பொதுவானது ஆகும். ஆனால்  நம்மால் காற்றை சுத்தம் செய்து நமது சுவாசத்தை காக்க முடியும்.

மேலும் படிக்க: கர்ப்பிணி பெண்களே தாய் என்ற தைரியம் போதும்

வீடு, அலுவலகங்கள் எதுவானாலும் அங்கு வெங்காயம் உரித்து வையுங்கள். அது வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் உள்ள காற்றை சுத்தம் செய்து நமக்கு சுவாசத்தை  நல்வழியில் கொடுக்கின்றது. 

வெங்காயத்தை தோலுரித்து உங்கள் அறையில் வைக்கவும் அது காற்றிலுள்ள மாசை ஈர்க்கும். மற்றும் சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும். அந்த வெங்காயமானது நிறம் மாறும் வெண்மை பூத்து நிறமாறிய வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம். வெங்காயம் காற்றிலுள்ள பூஞ்சை, பாக்டீரியா தொற்றுக்களை  ஈர்க்கும். அம்மை வந்தவர்களுக்கு வெங்காய மாலை போடுவது இதனால்தான். உடல் சூடு குறைக்கும். வெங்காயம் தாயுக்கு நிகரானது என ஆந்திர பழமொழிகளில் வழங்கப்படுகின்றது.

மேலும் படிக்க: வீட்டிலே செய்யுங்க கிருமி நாசினி சுத்தப்படுத்தி!

பூரான் கடி, பூச்சி விசக்கடிகளின் பொழுது வெங்காயம் அறைத்து பூசுவார்கள். காலிலுள்ள சேற்றுப்புண் ஆறவும் வெங்காயம் மஞ்சள் அறைத்து வைத்து கட்டுகின்றனர். இது அனைத்து தொற்றுகளை நீக்கும் அருமருந்தாகும். வெங்காய பூஞ்சை தொற்றுக்ளான படை, தேமல்  ஆகியவற்றைப் போக்கும். ஜலதோச பாதிப்பு உள்ளவர்கள் வெங்காயத்தை முகர்ந்து வர உடனடியாக ஜல தோசம் சரியாகும். பாம்பு கடித்தவுடன் அதிகளவில் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர விஷமானது இறங்கும். வெங்காயம் டி.பி நோயையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.

விசம் முறிக்கும் வெங்காயம்:

தேள் கொட்டிய இடத்தில்   சின்ன வெங்காயத்தை அரைத்து தேய்க்க அது விசத்தை இறங்கச் செய்யும். நாய் கடித்தவர்கள் வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி வெங்காய சாற்றை குடித்து விட்டு மருத்துவர் இடம் செல்லலாம். இது விசத்தை இறக்கி விடும். காலரா தொற்றுகள் பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா நம்மை  நெருங்காது. வெங்காயம் மூர்ச்சை அடைவோரையும் குணப்படுத்துகின்றது. மூர்ச்சை அடைந்தோரை வெங்காயத்தை அரைத்து சாரெடுத்து அதனை மூர்ச்சை அடைர்ந்தோர் முகரச் செய்தால் அது அவரை கண் விழிக்கச் செய்யும். 

ஆரோக்கியம் நிறைந்தது:

உடலில்  கழிவுகள் நிறைந்து காணப்படுவதால் நெஞ்சு சளி அதிகம் ஏற்படும் அதனை தடுக்க சின்ன வெங்காயம் அதிகம் உணவில் சாப்பிட்டு வர அது சளி, தொண்டைவலி, ஜல  தோசம், தலைவலி ஆகியவற்றை எல்லாம் குணப்படுத்தும் உடலை குளிர்ச்சிப்படுத்தும். வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டைசல்பைடு எண்ணெய் காரத்தன்மை கொண்டதாக இருக்கச் செய்கின்றது. இதனால்தான் கண்ணீர் பொங்கச்  செய்கின்றது. வெங்காயத்தில் புரச சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், உள்ளதால் உடலில் உள்ள ஊட்டச்சத்துகளை பலமாக்குகின்றது.

பாட்டி, வீட்டு வைத்தியம் எதுவானாலும் வெங்காயம் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மாரடைப்பு கொண்டவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் சிறுநிர்ப் பையில் சேரும் யூரில் அமிலத்தால் உருவாகும்  சிறுநீர் கற்களை இது கரைத்துவிடும். 

மேலும் படிக்க: உயிரியல் போரில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன