ஒருவரிடமிருந்து 400 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது..!

  • by
one person can spread corona virus to 400 members

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய மிக மோசமான வைரஸாகும். எனவே சராசரியாக இந்த வைரசின் மூலமாக பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கள் சமூகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 400 பேர் வரை பாதிக்க செய்கிறார்கள். இதன் மூலமாக முதல்வாரத்தில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது, அடுத்த மூன்றே வாரங்களில் இதன் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவிற்கு அதிகரித்தது. இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மகாராஷ்டிரா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக பார்க்கப்படுவது மகாராஷ்டிரா இங்கே கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதித்துள்ளார்கள். அதை தவிர்த்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள்தொகை அதிகமாக கொண்டுள்ள இந்த மாநிலத்தில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் மிக நெருக்கமான முறையில் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. இதனால் இந்த வைரஸ் தொற்று ஒருவரை தாக்கி இருந்தாலும் அவரை சுற்றி உள்ள அனைவரையும் மிக விரைவில் தாக்கிவிடுகிறது. இதனாலேயே இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மும்பையில் உள்ள தாராவியில் ஐந்துபேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள், ஆனால் தாராவி என்பது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழக் கூடிய இடமாகும் இந்த வைரஸ் தொற்று சமூக தொற்றாக இந்த இடத்தில் பரவியிருந்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ஆரோக்கியத்திற்கு சிறந்தது பச்சை மிளகாயா அல்லது சிகப்பு மிளகாயா..!

சமூக தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி. இங்கே இந்த கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியது. இதனால் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்கள் சரியான நேரத்தில் ஊரடங்கை அமல் படுத்திருந்தால் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்திருக்கும். இரண்டே வாரங்களில் இந்த தொற்றால் 1 இருந்து 40 ஆயிரம் வரை அதிகரித்தது. அதே நிலைமை தான் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நிகழ்ந்தது. இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே இது சமூக தொற்றாக மாறாது. இல்லையெனில் இது உங்களையும் உங்கள் குடும்பம் மற்றும் சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கும்.

பாதுகாப்பு அவசியம்

ஒருவேளை உங்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறது என்ற சந்தேகங்கள் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே சிறந்த வழியாகும். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக உங்களை குணப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த வைரஸ் தொற்றை நினைத்து பயந்து வீட்டிலேயே இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அதை தவிர்த்து உங்கள் மூலமாக உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவிவிடும். எனவே தவறே செய்யாமல் ஒரு சிலரின் வாழ்க்கையை அழிக்கும் பாவம் அனைத்தும் உங்களையே சேரும்.

மேலும் படிக்க – கொரோனா பாதிக்கும் சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கலாமா..!

பொறுப்புடன் செயல்படுங்கள்

கொரோனா வைரசினால் உலகில் இருக்கும் ஏராளமானவர்கள் உயிரிலிருந்து வந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்னும் ஒரு சிலர் ஊரடங்கை பின்பற்றாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வெளியே செல்வதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தாலும், உயிரை ஒப்பிடுகையில் இந்த காரணங்கள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகிறது. எனவே கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதை தவிர்த்து ஏராளமான வாகனங்களை காவல்துறையினர் சிறைப்பிடித்து வைத்துள்ளார்கள். எதைப்பற்றியும் கவலைகளும் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் இன்றும் ஊரடங்கு பின்பற்றாமல் சுற்றிதிரிகிறார்கள். இவர்கள் போன்றவர்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனவே அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும், தங்களால் மனித இனம் அழியக்கூடாது என்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும். சுயநலமாக இல்லாமல் பொதுநலமாக செயல்பட்டு உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் குணத்தை மற்றவர்களுக்கு புரிய வைத்து இந்த நோய்த் தொற்றை முழுமையாக அழிக்க உதவுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன