பல நோய்களை தீர்க்கும் ஒரே இலை அது என்னவென்று தெரியுமா???

  • by
துளசியிலை

பெரும்பாலும் துளசியிலை என்றாலே எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது கடவுளுக்கு மாலை அணிவிப்பது மட்டுமே! ஆனால் மூலிகைகளின் ராணியான துளசி அதன் மருத்துவ குணத்தால் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று. உங்கள் வீட்டில் துளசி இருந்தால் உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

துளசி இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா.

மேலும் படிக்க – அஜீரணத்தைப் போக்கும் அடுப்பங்கரை பொருட்கள்..!

காய்ச்சல் என்றாலே நாம் உடனே அணுகுவது மருத்துவரை தான். மாத்திரைகளை வாங்கிப் போட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஆனால் துளசி இலை 8 அல்லது 10 இலைகளை பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

தொண்டை புண்

தொண்டை புண் இருக்கும் போது துளசி இலையை 8 முதல் 10 இலைகளை எடுத்து ஒரு தம்ளர் நீரில் கொதிக்க வைத்து பின்பு, நீரை எடுத்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

தலைவலி 

உடலில் வெப்பம் அதிகம் இருப்பதால் தான் தலைவலி ஏற்படும். மன உளைச்சல் வேறு சில காரணங்களாலும் ஏற்படும் தலைவலிக்கு துளசி மிகவும் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. துளசி இலையுடன் சந்தனப் பொடி சேர்த்து கலந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். நல்ல நிவாரணம் கிடைப்பதோடு உடல் சூடும் குறையும்.

கண் பிரச்சனை

கருந்துளசி இலைச்சாறு கண்களில் ஏற்படும் பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால் அரிப்பு எரிச்சல் ஏற்படும் பொழுது துளசியின் சாற்றினை கண்களில் ஒரு சொட்டு ஊற்றினால் விரைவில் குணமாகும்.

வாய் துர் நாற்றம் 

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ அப்போது துளசி இலையை உலர வைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போல செய்து ஈறுகளில் தடவி நன்றாக கழுவி விடவேண்டும். இப்படி செய்வதால் வாய் துர் நாற்றம் வராது.

இதய நோய் 

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டு வந்தால் அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து இதய நோய் வரும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.

சளி இருமல்

இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான ஆங்கில மருந்துகளில் குணமாகாத கடுமையான சளி மற்றும் இருமல் கூட இந்த துளசி இலைகளை மென்று விழுங்குவதால் மறைந்து போய்விடும். சில குழந்தைகளுக்கு துளசி இலைகளை சாப்பிட அடம் பிடிப்பார்கள் அந்த குழந்தைகளுக்கு துளசி சாறு, இஞ்சி சாறு,தேன் இவை மூன்றும் கலந்து மூன்று நாட்களுக்கு காலையில் ஒரு ஸ்பூன் மாலையில் ஒரு ஸ்பூன் கொடுத்து வந்தால் சளி இருமல் நின்றுவிடும்.

நீரிழிவு நோய் 

நீரிழிவு நோயாளிகள் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும் இந்த துளசி.

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

சிறுநீரக கற்கள்

துளசி இலையை சாறு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

மன அழுத்தத்தை குறைக்கும் 

மன அழுத்தம் என்பது தற்போது அதிகமாக உள்ள பிரச்சனை. உங்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால் துளசி இலையை தினமும் 8 முதல் 10 இலைகள் சாப்பிட்டு பாருங்கள். இதனால்  அடாப்டோஜென் என்னும் வேதிப்பொருள் மன அழுத்தத்தை குறைக்கும். இது மூளைக்கு சென்று மன அழுத்தத்தை ஏற்படும் ஏற்படுத்தும் ஹார்மோன்களை சீர்படுத்தும்.

இப்படி நமக்கும் இயற்கையாகவே கிடைக்கும் துளசி இலைகளை வைத்து நம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பயன்படும் ஒரு சிறந்த மூலிகை மருந்து தான் துளசி. இது அன்றாட வாழ்வில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்துடனும் மன அழுத்தம் இல்லாமலும் வந்துருவாங்க வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன