யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

 • by

ஓம் ஒலி மற்றும் 108 என்கிற புனித எண்ணிற்க்கான முகவுரை:

ஓம் என்னும் சொல்லை நாம் பல முறை நம்முள் கூறும்போது, மனிதருக்குள்  இருக்கும்  அசுரத்தன்மை வெளியேறும் ஓம் என்ற சொல்லை உள்ளுணர்வோடு நீண்டு கூறுவது  முக்கியம். பழங்காலத்தில் முனிவர்கள்  முதற்கொண்டு அனைத்து வகையான  உயிரினங்களும் ஓம் என்ற பேரொளியை எழுப்பி தன் தவப்பயனை எட்டியுள்ளதற்கு பல சான்றுகள் நம் புராணங்களில் உள்ளது. இந்த ஓம் என்ற சொல் இந்து மதத்திற்கானது  மட்டுமல்ல மனிதருக்கானது.   

நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் 108 என்கிற அபூர்வ எண்ணை  புனிதமானவைகளுடன் தொடர்புபடுத்தி உள்ளார்கள். இந்த 108 என்கிற  எண் மதம் சார்ந்தது மட்டுமல்ல அதற்கும் மேலானது. இந்த எண்  மனித  வாழ்வில் மிகப்பெரும் பங்கினை கொண்டுள்ளது.

மேலும் படிக்க – பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..!

ஓம் ஒலியின் மகிமைகள்:

ஓம் எனும் உச்சரிப்பு தனித்துவமானது. இதற்கு ‘பரம்பொருளே’ ஜீவனாகிய என்னை  உன்னோடு இனைத்துக்கொள்’ என்று பொருள். ஆகையினாலே  நாம் கடவுள்  பெயரை உச்சரிக்கும் முன் ஓம் சக்தி, ஓம் நமசிவாய, ஓம் முருகா, ஓம் குருநாதா, ஓம் நமோ நாராயணா, என்று அழைக்கிறோம். இந்தப்  பிரபஞ்சமே  ஓம் எனும் அச்சாணியில் தான் சுழல்கிறது. ஆகவே ஓம் என்று  சொல்லும்போதெல்லாம்  ஐம்பூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, மற்றும் காந்த சக்தியை  உருவாக்குகிறது.

108 எண்ணின் மகிமைகள்:

   நம் இந்திய தேசத்தில் 108 என்ற எண்ணுக்கு புனிதமான ஓரிடம் உள்ளது.

 • வைணவ திவ்ய தேசங்கள் – 108 ஆக உள்ளது.
 • இறைத் துதிகள் எல்லாம் அஷ்டோத்திரங்களாக(108 துதிகளாக)
  உள்ளது.
 • இமயம் முதல் குமரி வரை சமிதி பீடங்கள் 108 தலங்கள் உள்ளது.
  மேலும் பல புனிதங்கள் 108 என்கிற எண்ணை அடிப்படையாக
  கொண்டுள்ளது.
 • நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகளும் 108 ஆக
  உள்ளது.
 • உபநிடதங்களுள் 108 உபநிடதங்கள் முக்கியமானதாக உள்ளது.

யோகாவில் ஓம் ஒலியின் பயன்பாடுகள்:

ஓம் என்ற சொல்லை அ+உ+ம் என்று உச்சரிக்கின்றோம். அஅஅ என்று  உச்சரிக்கையில் நம் வயிற்று மற்றும் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில்  ஒருவிதமான அதிர்வு உண்டாகிறது. ‘ம்ம்ம்’ என்று சொல்லும் போது மூக்கு, தலை, மற்றும் மூளை பகுதியிலும் அதிர்வு ஏற்படுகின்றது. இறுதியாக அ+உ+ம்  மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கையில் நம் மூக்கு, தொண்டை, வயிறு, மற்றும் மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஓம் என்ற ஒலியினால்  உருவாகும் சக்தி இவ்விடங்களை எப்போதும் புதுப்பித்து  பாதுகாக்கின்றது.

  யோகா பயிற்சி மேற்கொள்பவர்கள் பலர் ஓம் என்ற ஒலியை ஒலித்துக்கொண்டே  பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர் ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு நல்ல ஆற்றல், மனதில் தெளிவு, எண்ண ஓட்டத்தில் சீர்மை ஏற்படும், சில வருடங்களுக்கு முன்னர்  யோகா தொடர்ந்து செய்பவர்களை கண்காணிக்க குழு  ஒன்று அமைக்கப்பட்டது, அந்தக் குழு ஓம் ஒலியை உச்சரிக்காமல் யோகா பயிற்சியை ஈடுபடுபவர்களை  கண்காணித்துக் கொண்டு வந்தது அப்போது அவர்களது மனநிலையை கவனித்த அந்த குழு சில நாட்கள் கழித்து அவர்களை ஓம் என்று கூறியபடி யோகாவை துவங்க செய்தார்கள் பின்னர் அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டனர் அதில்  பெரும்பான்மையானோர் அவர்களது தினசரி வாழ்க்கையில் அலுவலகங்கள் கல்லூரி  இன்ன பிற  இடங்களில் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அளப்பரியதாக இருந்ததாக  கூறினார். மனதில் தெளிவு ஏற்பட்டு செய்கின்ற அனைத்து செயலிலும் பரிபூரணம்  ஏற்படுவதாக  இருந்தது அந்த பரிசோதனையின் முடிவு.

யோகாவில் 108 என்னும் புனித எண்ணின் பயன்பாடு:

யோகாவில் உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் இதை  இராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி பரமானந்தர் ஒரு அற்புத தொடர்பை கூறுகிறார்

108 என்ற எண்ணானது தெய்வீக மந்திரங்களை உச்சரிக்க சரியான  எண்ணிக்கை  என்று வராஹ உபநிடதத்தை மேற்கோள் காட்டுகிறார். ஒவ்வொருவரின் உடலும்  அவரவர் விரலின் பருமனால் (கிடைமட்டத்தில் பார்க்க வேண்டும்) சரியாக 96 மடங்கு உள்ளதாக கூறுகிறார்!

மேற்சொன்ன யாவும் மனிதர்களுக்கானதே இதில் மதம், இனம், மொழி இடம் என எந்த  பாகுபாடுமில்லை.   

மேலும் படிக்க – நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன