ஏப்ரல் 30 வரை ஒடிசா ஊரடங்கை பின் தொடர்கிறது..!

  • by
odisha to extend lock down till april 30

இந்தியாவில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு பின்தொடர, ஒடிசா முதல் மாநிலமாக முடிவெடுத்துள்ளது. ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று ஊரடங்கு நீடிப்பதற்கான முடிவு எடுத்துள்ளார். தங்கள் நாட்டு மக்களின் நலனை கருதியும் மற்றும் இந்தியாவின் இந்த தொற்று தடுப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கை நீடிக்கலாம் என்ற திட்டங்களை வகுத்து வந்த நிலையில் ஒடிசா முதல் மாநிலமாக இந்த முடிவை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இதை பின்தொடரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் நிலை

கொரோனா வைரஸின் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு, கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்துள்ளார்கள். எனவே இந்த வைரஸ் தொற்று மூன்றாம் நிலைக்கு எட்டாமல் இருப்பதற்கு ஊரடங்கை நீட்டிக்கும் முனைப்பில் தமிழ்நாடு இருக்கிறது. எனவே ஏப்ரல் 11-ஆம் தேதி பாரதப் பிரதமருடன் மற்ற எல்லா மாநில தலைவர்களும் சேர்ந்து பங்குபெறும் கூட்டத்தில்  எடுக்கப்படும் முடிவுக்குப் பிறகு தான் தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது என்பது நமக்கு தெரியவரும்.

மேலும் படிக்க – வறுமைக் கோட்டிற்குக் கீழ் 40 கோடி மக்கள்..!

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, அதிலும் மகாராஷ்டிராவில் இந்த பாதிப்பு 1100 க்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. இதை இப்போது தடுத்தல் மட்டுமே இது சமூக தொற்றாக மாறாமல் இருக்கும், இல்லையெனில் இந்த வைரஸ் தொற்று எல்லோரையும் பாதிக்கும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். இதைத் தவிர்த்து தென்னிந்தியாவில் இந்த பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம் வெளிநாட்டு பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்கள் மூலமாக பரப்பப்பட்ட அப்பாவிகளும்தான் எனவே இந்தத் தொற்றை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை அடுத்து மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் இந்த வைரஸ் தொற்று பரவாதை தடுப்பதற்கு சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு மட்டுமே உதவும் என்று கூறியுள்ளார். இதை பின்தொடராத அமெரிக்காவில் ஏராளமான பதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அதைத் தவிர்த்து அடுத்த சில வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளும் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க – கோவித் வைரஸ் கால ஓர்க் ப்ரம் ஹோம் அலப்பரைகள்

ஒடிசாவில் பாதிக்கப்பட்டவர்கள்

கொரோனாவால் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் ஓடிசாவும் ஒன்று, இங்கே இன்றுவரை கிட்டத்தட்ட 42 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதைத் தவிர்த்து அதில் இருவர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஒடிசாவில் ஏராளமான மக்கள் வேலை செய்வதாகவும், அனைத்து விதமான ஏற்றுமதி செய்வதாளும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் கூறியிருக்கிறார். மற்ற மாநிலத்தில் மிக விரைவில் பரவியதை போல் ஒடிசாவில் பரவாமல் இருப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளார்.

ஒடிசா செய்ததைப்போல் ஒவ்வொரு மாநிலமும் ஆரம்பத்தில் செய்திருந்தால் இந்த தொற்றின் தாக்கம் குறைந்திருக்கலாம். இன்னும் நம்மிடம் போதுமான நாட்கள் இருக்கிறது, எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் சரியான முடிவுகளை எடுத்து இந்த கொரோனா தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாக்க முடியும். இன்று ஒடிசாவை தவிர்த்து தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசமும் ஊரடங்கு நீட்டிக்கும் முடிவை எதுக்க உள்ளதாக அம்மாநிலத்தின் பத்திரிகைகள் தெரிவித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன