தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது..!

  • by
number of people affected due to corona virus has increased in tamil nadu

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது அனைத்திற்கும் டெல்லியில் நடந்த மாநாடு தான் காரணம், ஏன்என்றால் தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் டெல்லி மாநாட்டில் பங்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே கடந்த ஒருவாரம் மட்டுமே கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலை

கொரோனா வைரஸினால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் பதித்துள்ளார்கள். இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 110 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒருவர் மட்டுமே உயிர் இருந்த சூழலில் இந்த வார இறுதியில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழ்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் கொரோனா வைரசின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இல்லை என்று சொல்லி வந்தாலும் உயிரிழப்புகள் நிகழும் போதெல்லாம் மக்கள் மனதில் ஒருவிதமான பதட்டம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – கோடி மக்களை ஒளியால் ஒன்றினைத்த மோடி வாக்கு

கட்டுப்படுத்த நடவடிக்கை

டெல்லி மாநாட்டில் பங்குபெற்ற 1500 பேரையும் கண்டுபிடித்து அவர்களுக்கான பரிசோதனைகளையும் செய்து வருகிறார்கள். இதில் கலந்துகொண்ட ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இவர்கள் வசித்து வரும் இடங்களில் வாழும் மக்களையும் தனிமைப் படுத்தியுள்ளார்கள். எனவே இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவ உள்ளது. எனவே இவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இந்த தொற்றை நம்மால் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா தொற்று இன்னும் சமூக தொற்றாக மாற வில்லை என்றும், மேலும் கொரோனா வைரசை பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகளை வாங்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் ஏராளமானோரை பரிசோதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு இருக்கிறது. இதைத் தவிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் தங்களால் முடிந்த திட்டங்களை வகுத்து இந்த தொற்றைத் தடுத்து வருகிறார். மத்திய அரசிடமிருந்து கொரோனா வைரஸை தடுப்பதற்கான போதுமான நிதி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதைத் தவிர்த்து அமெரிக்கா பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு ஏராளமான தொகைகளின் ஒதுக்கி உள்ளார். இதன் மூலமாக இந்தத் தொற்றை மிக விரைவில் இந்தியா கட்டுப்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம்.

பாதிப்புகள் தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே லாக்டவுன் முடிவதற்குள் தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று ஏராளமான மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தால் இந்த தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இது மேலும் பரவாமல் இருப்பதற்கு மக்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன